Published:Updated:

`தந்தம் இல்லையா... அப்போ இதை டிமாண்ட் ஆக்கு!' எறும்புத்தின்னியின் கதைமுடித்த கடத்தல்காரர்கள்

`தந்தம் இல்லையா... அப்போ இதை டிமாண்ட் ஆக்கு!' எறும்புத்தின்னியின் கதைமுடித்த கடத்தல்காரர்கள்

ஒரு டன் செதில்கள் கிடைக்க வேண்டுமானால் 1900 எறும்புத்தின்னிகளைக் கொல்ல வேண்டும். கடைசி சில வருடங்களில் மட்டும் 48 டன் எறும்புத்தின்னி செதில்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்டு கணக்கில் வரவு வைக்கப்பட்ட அளவுதான் 48 டன்.

`தந்தம் இல்லையா... அப்போ இதை டிமாண்ட் ஆக்கு!' எறும்புத்தின்னியின் கதைமுடித்த கடத்தல்காரர்கள்

ஒரு டன் செதில்கள் கிடைக்க வேண்டுமானால் 1900 எறும்புத்தின்னிகளைக் கொல்ல வேண்டும். கடைசி சில வருடங்களில் மட்டும் 48 டன் எறும்புத்தின்னி செதில்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்டு கணக்கில் வரவு வைக்கப்பட்ட அளவுதான் 48 டன்.

Published:Updated:
`தந்தம் இல்லையா... அப்போ இதை டிமாண்ட் ஆக்கு!' எறும்புத்தின்னியின் கதைமுடித்த கடத்தல்காரர்கள்

``மனிதன் ஒரு மகத்தான சல்லிப்பயல்” என்கிற ஜி.நாகராஜனின் வரி ஒன்று உண்டு. ஏன், எதற்கு, என்கிற எந்தக் காரணமும் இல்லாமல் ஓர் உயிரினத்தைத் தொடர்ந்து மனிதன் துரத்திக்கொண்டே இருக்கிறான். அதன் இறைச்சி உடலுக்கு நல்லது, அதனுடைய செதில்களில் மருந்து இருக்கிறது என எங்கோ யாரோ ஒரு மனிதன் கிளப்பிவிட்ட வதந்தி இன்று ஓர் உயிரினத்தை ஓட ஓட துரத்திக்கொண்டிருக்கிறது. சர்வைவல் விஷயத்தில் வாய் இல்லாத ஜீவன்களின் வரிசையில் இது வாழ்க்கையே இல்லாத ஜீவன். எறும்புத்தின்னி.

`தந்தம் இல்லையா... அப்போ இதை டிமாண்ட் ஆக்கு!' எறும்புத்தின்னியின் கதைமுடித்த கடத்தல்காரர்கள்

சாதுவான உயிரினம் எறும்புத்தின்னி. சாதாரணமாக நம்முடைய காடுகளில் திரிகிற உயிரினம். அதன் சர்வைவல் கதைகளில் எதிரியாக இருப்பது மனித இனம். மற்ற விலங்குகளிடமிருந்து தப்பிப்பிழைக்கிற எறும்புத்தின்னிகள் மனித இனத்திடம் சிக்கிக்கொள்வதுதான் வேதனை. உலகில் மொத்தம் எட்டு வகையான எறும்புத்தின்னி வகைகள் உள்ளன. அதில் நான்கு வகையான எறும்புத்தின்னிகள் ஆப்பிரிக்காவிலும், நான்கு வகையான எறும்புத்தின்னிகள் ஆசியாவிலும் உள்ளன. பூச்சிகளையும் எறும்புகளையும் தன் மோப்ப சக்தியின் மூலம் கண்டறியும் குணம் கொண்டவை இவை. நிலத்தடியில் 3 முதல் 5 மீட்டர் ஆழத்தில் வாழும் எறும்பினங்களை கண்டறிந்து, தோண்டி உட்கொள்ளும். எறும்புத் தின்னிகளுக்குப் பார்வைத்திறன் மிகக் குறைவு. எனினும் இவற்றின் மோப்ப சக்தியாலும், கேட்கும் திறனாலும் இவை தமது உணவைக் தேடிக் கண்டறியும் குணமுடையவை எறும்புத் தின்னிகள் நன்கு நீந்தும் ஆற்றல் கொண்டவை. எதிரிகளைக் கண்டு கொண்டால், உடலைப் பந்து போன்று சுருட்டி வைத்துக் கொண்டு தம்மைக் காத்துக்கொள்ளும் குணமுடையவை. எறும்புத்தின்னியில் சில இனங்கள் மரமேறிகளாக உள்ளன. ஊனுண்ணி வகையைச் சார்ந்த எறும்புத் தின்னிகள் நீண்ட நாக்கு மூலம் எறும்புகளையும், பூச்சிகளையும் தூரத்தில் இருந்தவாறே பிடித்து உட்கொள்ளும். எறும்புத்தின்னியின் நாக்கின் நீளம் அதன் உடல் நீளத்தை விட அதிகமானது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மனிதன், அவனுக்கு என்ன தேவையோ அதை எந்த ஈவு இரக்கம் பார்க்காமல் தன்னுடைய சக்தியைப் பயன்படுத்தி எடுத்துக் கொள்வான். காசு என்கிற விஷயத்தில், தன்னைச் சார்ந்த இனத்திடமே அவன் கருணையெல்லாம் பார்க்க மாட்டான், விலங்குகளிடமா பார்க்கப் போகிறான். கடந்த பத்து வருடங்களில் அதிகமாகக் கொல்லப்பட்ட விலங்கு எறும்புத்தின்னி என்கிறது உலகளாவிய தரவுகள். அப்படி உலகம் முழுக்க வேட்டையாடப்பட்டுக் கொல்லப்படும் எறும்புத்தின்னிகளிடம் அப்படி என்ன சக்தி இருக்கிறது? எதற்காகப் பல கோடிகளில் அதன் செதில் விலை போகிறது என்கிற கேள்வி எழலாம். எறும்புத்தின்னியின் செதில்கள் கெரட்டின் என்கிற வேதிப் பொருளால் ஆனவை. மனித நகங்களில் இருக்கிற அதே வேதிப் பொருள்தான். செதில்களைச் சூப்பாக வைத்துக் குடித்தால் ஆண்மை பெருகுகிறது என்கிற மூட நம்பிக்கை காலம்தொட்டு நம்பப்படுவதால் குறிவைத்து அதை கடத்திக்கொண்டிருக்கிறார்கள். எறும்புத்தின்னியின் இறைச்சியை உணவாக உண்பதால் பல நோய்கள் குணமாகிறது என்று நம்பப்படுவதால் அதன் இறைச்சியை வாங்கி விற்கவும் தனியாக குழுக்கள் செயல்படுகின்றன. உண்மையில் எறும்புத்தின்னியின் செதில்களிலும் அதனுடைய இறைச்சியிலும் எந்த மருத்துவக்குணமும் இல்லை என அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுவிட்டது. ஆனால், மனித இனம் அறிவியலை எல்லா விஷயங்களுக்கும் நம்பிவிடுவதில்லை. கடத்தப்படுகிற 70 சதவிகித செதில்களும், அதனுடைய இறைச்சியும் சீனாவிற்கும் வியட்நாமிற்கும் கடத்தப்படுகின்றன. கடைசியாக இந்த மாதம் 14-ம்தேதி 4 டன் எறும்புத்தின்னி செதில்களை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியிருக்கிறார்கள்.

`தந்தம் இல்லையா... அப்போ இதை டிமாண்ட் ஆக்கு!' எறும்புத்தின்னியின் கதைமுடித்த கடத்தல்காரர்கள்

ஒரு டன் செதில்கள் கிடைக்க வேண்டுமானால் 1900 எறும்புத்தின்னிகளைக் கொல்ல வேண்டும். கடைசி சில  வருடங்களில் மட்டும் 48 டன் எறும்புத்தின்னி செதில்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்டு கணக்கில் வரவு வைக்கப்பட்ட அளவுதான் 48 டன். கடத்தப்பட்ட செதில்கள் எடையை விட அவற்றின் இறைச்சி எங்கு கடத்தப்பட்டது, எவ்வளவு கடத்தப்பட்டது என்பதெல்லாம் ஆண்டவனுக்கே வெளிச்சம். கணக்கில் வராமல், சரியான கைகளுக்குச் சென்ற எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம்.

இன்றைய தேதியில் எறும்புத்தின்னி என்றால் பணம் என்கிற அளவிற்கு அதனுடைய விலையை கள்ளச்சந்தையில் உயர்த்தி வைத்திருக்கிறார்கள். உயிருடன் பிடிக்கப்படுகிற எறும்புத்தின்னிகளின் கண்களை முதலில் குருடாக்குகிறார்கள், அவற்றை உயிரோடு வேகவைத்து பிறகு அதன் செதில்களைப் பிரித்து எடுக்கிறார்கள். செதில்களுக்குத் தனி விலை, இறைச்சிக்குத் தனி விலை என நிர்ணயிக்கப்பட்டு கள்ளச்சந்தைக்கு வருகிற ஒரு கிலோ செதில்களின் விலை மட்டுமே பல ஆயிரம் டாலர்களைத் தொடுகிறது. சாலை, கடல், வான் என எல்லா வழிகளிலும் கடத்தல் நடக்கிறது. எல்லாவற்றிற்கும் எல்லா இடத்திலும் அதிகாரம் படைத்த ஒரு  மனிதன் துணையாக இருந்து கொண்டிருக்கிறான். உலகில் நைஜீரியாவில் இருந்துதான் அதிகமாக எறும்புத்தின்னிகள் கொல்லப்பட்டு கடத்தப்படுகின்றன. பல நாடுகளின் துறைமுகங்களிலும், விமான நிலையங்களிலும் கைப்பற்றப்பட்ட செதில்கள் எல்லாமே நைஜீரியாவிலிருந்து கடத்தப்பட்டவை என்கின்றன செய்திகள். 2014ம் ஆண்டு தரவுகளின் படி, அதற்கு முந்தைய 10 வருடங்களில் மட்டும் 1 மில்லியன் எறும்புத்தின்னிகள் கொல்லப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது . பாலூட்டிகளில் அதிகம் கடத்தப்படும் உயிரினம் எறும்புத்தின்னி தான். 

`தந்தம் இல்லையா... அப்போ இதை டிமாண்ட் ஆக்கு!' எறும்புத்தின்னியின் கதைமுடித்த கடத்தல்காரர்கள்

கள்ளச்சந்தை முன்பு யானைத் தந்தங்களை குறிவைத்து நடந்தது, பல்வேறு நாடுகளும் யானைத் தந்தம் கடத்துவதைத் தடுத்தன. பல நாடுகள் தீவிரமாக கண்காணித்து கடுமையான தண்டனைகள் வழங்கின. சீனா யானைத் தந்த கடத்தலைச் சட்டவிரோதம் என அறிவித்தது. விளைவு கள்ளச்சந்தை தள்ளாட ஆரம்பித்தது. விலங்குகள் கள்ளச்சந்தை எப்போதும் ஒன்றைக் குறிவைத்து நடந்துகொண்டே இருக்கும். கள்ளச்சந்தை தொடர்ந்து செயல்பட்டால்தான் அதைச் சார்ந்தவர்களின் பிழைப்பு நடக்கும். எளிதில் சிக்கக்கூடிய உரினங்களான சுலபமான வாய்ப்பாகப் பார்க்கப்பட்டன. அதற்கேற்ப போலி மருத்துவ குணங்கள் தாண்டி, உணவுக்காகவும் அவை வேட்டையாடப்பட்டன.   எறும்புத்தின்னிகளுக்கென தனிச்சந்தை உருவானது, அதற்கென டிமாண்டை உருவாக்கினார்கள். சில ஆண்டுகளுக்கு முன்னர், எறும்புத்தின்னிகளை வணிகம் செய்ய உலகம் முழுக்கத் தடை செய்யப்பட்டது. ஒரு கட்டத்தில் யானைகளின் தந்தம் மறையத் தொடங்கியது போல், சில வகை எறும்புத்தின்னிகளில் செதில்கள் இல்லாமலும் பிறக்கும் காலம் வரும். . அடுத்து இன்னோர் உயிரினம் பலி கொடுக்கப்படும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism