Published:Updated:

சர்ச்சையில் சிறுத்தை படங்கள்... நாடகமாடுகிறதா வனத்துறை?

Vikatan Correspondent
சர்ச்சையில் சிறுத்தை படங்கள்... நாடகமாடுகிறதா வனத்துறை?
சர்ச்சையில் சிறுத்தை படங்கள்... நாடகமாடுகிறதா வனத்துறை?

செங்கல்பட்டு: செங்கல்பட்டு பகுதியில் வைக்கப்பட்ட கேமராக்களில் சிறுத்தை புலி பதிவாகியுள்ளதாக வனத்துறையினர் கொடுத்த புகைப்படத்தில் 2011ஆம் ஆண்டு பதிவாகியுள்ளதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

சர்ச்சையில் சிறுத்தை படங்கள்... நாடகமாடுகிறதா வனத்துறை?

கடந்த இரண்டு மாதங்களாக செங்கல்பட்டை சுற்றியுள்ள கிராமங்களில் ஆடுகள் காட்டு விலங்குகளால் தாக்கப்பட்டு உயிரிழந்து வந்தன. இதைத் தொடர்ந்து வனத்துறையினர் 8 இடங்களில் தானியங்கி கேமராக்களை வைத்தனர். ஐந்து இடங்களில் ஆடுகளை உள்ளே வைத்து கூண்டு வைத்து கண்காணித்தனர். இந்த கேமராக்களில் சிறுத்தை தவிர கள்ளக்காதல், மணல் திருட்டு, மரங்களை கடத்துவது போன்ற சட்டவிரோத செயல்கள் சிக்கின. அதனுடன் முயல், மான், முள்ளம்பன்றி, மலைப்பாம்பு, சிங்கவால் குரங்கு என அனைத்தும் சிக்கியது. ஆனால், சிறுத்தை புலி கேமராவில் பதிவாகவில்லை. இருப்பினும், சிறுத்தை நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்ததாக பீதி கிளம்பிக் கொண்டே இருந்தது. இந்த சம்பவங்கள் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியது.

சர்ச்சையில் சிறுத்தை படங்கள்... நாடகமாடுகிறதா வனத்துறை?

இந்நிலையில் அஞ்சூர் பகுதியில் வைத்த கேமராவில் சிறுத்தை நடமாட்டம் பதிவானது. இதைப்பார்த்த வனத்துறையினர் அதனுடைய வயது, ஆண், பெண் போன்ற விவரங்களை ஆய்வு செய்து வந்தனர். அஞ்சூர் வனப்பகுதியை மண்டல வனப்பாதுகாவலர் யோகேஷ் சிங், மாவட்ட வன அலுவலர் சௌந்தர பாண்டியன், வனச்சரகர் கோபு உள்ளிட்ட அதிகாரிகள் இன்று (17ஆம் தேதி) ஆய்வு செய்தனர். சிறுத்தையின் நடமாட்டம் வழித்தடங்கள், தகவமைப்பு காட்டின் சூழல் ஆகியவை குறித்து 3 மணி நேரம் சக அதிகாரிகளுடன் கலந்தாலோசித்தனர்.

சர்ச்சையில் சிறுத்தை படங்கள்... நாடகமாடுகிறதா வனத்துறை?

''இது ஒரு ஆண் சிறுத்தை. இந்த சிறுத்தைக்கு எட்டு வயதிருக்கும். வனங்கள் அழிக்கபட்டு குடியிருப்புகளாக மாறுவதால் இப்படி ஒரு சில சிறுத்தைகள் திசைமாறி வந்து விடுகின்றது. இதுவும் தடம் மாறி வந்திருக்கலாம். இன்னும் ஓரிரு நாளில் சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது” என்று வனச்சரகர் கோபு தெரிவித்தார்.

இதற்கிடையே, வனத்துறையினர் கொடுத்த புகைப்படங்களில் 2011 ஆம் ஆண்டிற்கான தேதி பதிவாகி இருக்கிறது. இந்த தேதியால் அந்த புகைப்படம் தற்போது உள்ளது தானா? அல்லது பழைய படத்தை வனத்துறையினர் காட்டுகின்றனரா? என சர்ச்சை கிளப்பியுள்ளது.

பா.ஜெயவேல்