என் விகடன் - சென்னை
என் விகடன் - திருச்சி
என் விகடன் - புதுச்சேரி
Published:Updated:

முதுமலையில் முத்தமிடும் 'செம்மொழி'!

முதுமலையில் முத்தமிடும் 'செம்மொழி'!

##~##

மிழகத்தின் செம ஜில் பாயின்ட் ஊட்டி. மேற்குத் தொடர்ச்சி மலையின் குட்டியூண்டு புள்ளி. கொளுத்தும் வெயிலுக்கு இதம், சுகம்!

 மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரிக்கு அரசுப் பேருந்து மட்டுமே உண்டு. ஆம்னி, சுமோ போன்ற வாகனங்களும் கிடைக்கும். ஷேர் ஆட்டோ போலத்தான் இதுவும். சீஸன் நேரத்தில் தலைக்கு

முதுமலையில் முத்தமிடும் 'செம்மொழி'!

100 வரை வாங்கு வார்கள். ஊட்டிக்கு முன்பாக நம்மை வரவேற்கிறது குன்னூர். சிம்ஸ் பார்க், லேம்ஸ் ராக், டால்பின் நோஸ் என்று மூன்று இடங்களை அவசியம் பார்க்கலாம்.  ஊட்டி நகரின் முகப்பிலேயே அமைந்திருக்கும் மெழுகுச் சிலை கண்காட்சி செம சுவாரஸ் யம்.  

முதுமலையில் முத்தமிடும் 'செம்மொழி'!

ஊட்டியின் லேண்ட் மார்க்குகளான  பொட்டானிக்கல் கார்டன், ஏரி, மான் பூங் காவைத் தவறவிட வேண்டாம். அடுத்து, தொட்டபெட்டா ஏறினால், நீலகிரி மலைத் தொடரின் உச்சியில் நிற்கிறீர்கள் என்று அர்த்தம். அங்கே டூயட் பாடாத ஹீரோக்களே இல்லை. பைன் மரக் காடுகளின் சரிவு வழுக் கும். நடக்கும்போது கவனம் தேவை. பைகாரா படகுச் சவாரி நிச்சயம் ஊட்டி ட்ரிப்பின் ஹைலைட் அனுபவமாக அமையும்.

ஊட்டியில் இருந்து 36 கி.மீ தொலைவில் உள்ளது முதுமலை. அங்கு செல்லும் கல்லட்டி மலைப் பாதை, வாகன ஓட்டிகளுக்குச் சவாலான பாதை. செங்குத்தான பாதையில் கார் ஓட்டிச் செல்வது த்ரில், திகில் பயணமாக இருக்கும். வழியில், கல்லட்டி அருவியில் தண்ணீர் விழுந்தால், அங்கு கொஞ் சம் தலை காட்டலாம். 36 கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்து இறங் கினால், சம தளம். அங்கு, மாலை வேளையில் காட்டு யானைகள், மான் கூட்டத்தை ரசிக்கலாம்.

முதுமலையில் முத்தமிடும் 'செம்மொழி'!

முதுமலையில் தவறவிடக் கூடாத இடம், 'யானைகள் முகாம்’! 'கும்கி’ யானைகள் கடமையே கண்ணாகப் பாகன்கள் இட்ட பணியை செய்துக்கொண்டு இருக்கும். முகாமில் வழங்கப்படும் உணவினை வரிசையில் வாங்கிச் சாப்பிடுகின்றன யானைகள். அதே போல், மாயாற்றில் குளித்துவிட்டு ஒழுக்கமான பள்ளி மாணவர்களாக வரிசை கட்டி நடந்து வருகின்றன. இங்கு இருக்கும் தாய் யானையால் கைவிடப் பட்ட குட்டி யானைகளைப் பராமரிக்கும் மையத்தில்,  இப்போது 'செம்மொழி’ பெண் குட்டி, தீவிரப் பராமரிப்பில் இருக்கிறாள். ஜன்னல் வழியே கை நீட்டினால், தும் பிக்கை நீட்டி முத்தமிடுகிறாள் செம் மொழி.  

முதுமலை புலிகள் காப்பகம் ஏற்பாடு செய்து உள்ள வாகனம், நம்மைக் காட்டுக் குள் குறிப்பிட்ட தூரம் அழைத்துச் செல்கிறது.

முதுமலையில் முத்தமிடும் 'செம்மொழி'!

35 கட்டணம். அந்தச் சவாரியின்போது வன விலங்குகள் தரிசனம் உங்கள் யோகத்தைப் பொறுத்தது. சாலையின் ஓரத்தில் யானை, கரடியைக் கண்டால், உற்சாக மிகுதியில் வண்டியைவிட்டு இறங்கிவிடாதீர்கள். அது உங்களைக் காட்டிலும் உற்சாக மிகுதியில் உங்களைத் தாக்கும் அபாயம் இருக்கிறது!  

முதுமலையில் முத்தமிடும் 'செம்மொழி'!

மீண்டும் ஊட்டி வந்து கோத்தகிரி வழியாக மேட்டுப் பாளையத்துக்கு இறங்கலாம். இந்தப் பாதையில் தேயிலை எஸ்டேட்கள் அதிகம். கோத்தகிரியில் இருந்து கொடநாடு வியூ பாயின்ட் செல்லலாம். இங்கு இருந்து பார்த்தால், மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரின் பிரமாண்டம்  நிச்சயம் உங்களை வசீகரிக்கும்!  

- எஸ்.ஷக்தி, படங்கள்: வி.ராஜேஷ், தி.விஜய்