Published:Updated:

போட்டியில் சிங்கம், புலி, யானை!- காட்டுக்கு முயல் ராஜாவான கதை! #MyVikatan

விகடன் வாசகர்

ராஜா ஆமை, தன் முன்னூற்று ஐம்பது வருடங்களாக, இந்தக் காட்டை பராமரித்து, செல்வ செழிப்புடன் இருக்க மிக முக்கிய காரணமாக இருந்தது.

Representational Image
Representational Image ( Credits - Pixabay )

ஒரு அடர்ந்த, செல்வ செழிப்புடன் இருந்த ஒரு காட்டில், நிறைய கொடிய மிருகங்கள் வாழ்ந்துகொண்டிருந்தன. அந்தக் காட்டில் உயிரினங்களுக்குத் தேவையான, எல்லா வகையான உணவுகளும், தூய்மையான காற்றும், நிறைய நீர் குட்டைகளும் இருந்தன.

Representational Image
Representational Image

இயற்கைக்கு சொந்தமான காடுபோல் இருந்தது. அந்தக் காட்டில் சிங்கங்கள், புலிகள், யானைகள், கரடிகள், ஒட்டகச்சிவிங்கி, மான்கள், முதலைகள், பாம்புகள், ஆமைகள், என எக்கச்சக்கமான விலங்குகளும் இருந்தன. ஆனால், அந்தக் காட்டு ராஜாவாக 350 வயதுகொண்ட ஓர் ஆமை இருந்தது. ராஜா ஆமை, தன் முன்னூற்று ஐம்பது வருடங்களாக, இந்தக் காட்டைப் பராமரித்து, செல்வச் செழிப்புடன் இருக்க மிக முக்கிய காரணமாக இருந்தது. இந்தக் காட்டில் விலங்குகள் உண்பதற்கு உணவுகள், சுதந்திரமாக நடமாட இடம், மற்ற மிருகங்களை ஒன்றோடு ஒன்று தொந்தரவு செய்யாமல் அமைதியான வாழ்க்கை வாழ்வதற்கு வழிமுறைகள் என இந்த ராஜா ஆமை பெரிதும் உதவியது.

பொதுவாகவே, ஆமைகளுக்கு திசை அறிவதற்கான திறன் இருக்கும். அதற்கு ஏற்ப 350 வயது கொண்ட ராஜா ஆமை, இந்த பசுமையான காட்டில் உள்ள மொத்த பகுதி இடத்தையும், நன்கு அறிந்திருந்தது. 350 ஆண்டுகளுக்கு முன், இந்தக் காடு எப்படி இருந்தது என்றால், மரங்கள் எல்லாம் காய்ந்து உதிர்ந்த படியும், நீர் சரியான பாதைகளில் பயணிக்காமல் எல்லா நீரும் கடலில் கலந்திருந்தது. விலங்குகள் உணவுக்கு மிகவும் கஷ்டப்பட்டு, ஒன்றோடு ஒன்று அடித்துக்கொண்டிருந்தன. இயற்கை மாற்றங்கள் அதிகமாக நடந்தேறியது. ராஜா ஆமையின் அறிவு ஆற்றலையே, எல்லாம் விஷயங்களும் மாறி, இந்தக் காடு ஒரு பசுமையான, தூய்மையான காடாக மாறி இருந்தது. இதனால், இந்தக் காட்டுக்கு, ஆமை ராஜாவானது. ராஜா ஆமைக்கு, கொடிய விஷம் உள்ள பாம்புகள்தான் காவலாளியாக இருக்கும். முள்ளம்பன்றியைக் கூட கொல்லக் கூடிய விஷம், இந்த பாம்புகளுக்கு இருந்தது. எந்தவொரு விலங்கும், ராஜா ஆமையை நெருங்க முடியாத படியும், எல்லா விலங்குகளும் ராஜா ஆமையின் மேல் மிகுந்த மதிப்பும் மரியாதையும் ஆக இருந்தன. ஒரு நாள், ராஜா ஆமை காட்டில் உள்ள எல்லா விலங்குகளையும் கூப்பிட்டது. எல்லோரும் வந்து சேர்ந்தார்கள். அந்த இடம் மிகுந்த சத்தமாக இருந்தது.

Representational Image
Representational Image

ராஜா ஆமை, அவர்களை அமைதி என்றதும், அந்த இடம் அமைதியாக உடனே மாறியது. ராஜா ஆமை, தன் கம்பீர குரலோடு, `எனக்கு 350 வயது ஆகிவிட்டது. என்னால் இனி ஓரிரு மாதங்கள் மட்டுமே உயிர் வாழ முடியும். அதனால், இந்த காட்டுக்கு அடுத்த ராஜா யார்? என்பதை, நாம் இப்போது தீர்மானிக்கலாம்’ என்றது. இது கேட்டுக்கொண்டிருந்த மற்ற விலங்குகள், வாய் திறக்காமல் அமைதியாக இருந்தது. சற்று மௌனத்துக்குப் பிறகு, ஓர் ஆண் சிங்கம் கம்பீரமாக, ராஜா ஆமை எதிரில் வந்து நின்று, `இனிமேல், நானே இந்தக் காட்டுக்கு ராஜாவாக இருக்கிறேன்’ என்றது. ராஜா ஆமை அதற்கு, சரி, யாரெல்லாம் ராஜாவாக ஆசைப்படுகிறீர்களோ? என் முன்னாடி வந்து நில்லுங்கள் என்றது. இதைக் கேட்ட ஆண் சிங்கம், கம்பீர தோற்றத்துடன் முன்னே வந்து நின்றது. அதன்பின், புலி மற்றும் யானை வந்தது. மற்ற விலங்குகள் எதுவும் முன்வரவில்லை.

ராஜா ஆமை, நீங்கள் மூவரில், ஒருவர்தான் ராஜாவாக தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்… ராஜா ஆமை பேசிக்கொண்டிருந்தபோதே, ஒரு காட்டு முயல் முன்னே வந்து நின்றது. மற்ற விலங்குகள், அதைப்பார்த்து பயங்கரமாக சிரித்து கேலி செய்தன. ராஜா ஆமை, அமைதி என கம்பீரக் குரலோடு கூறியதும், அந்த இடம் மறுபடியும் அமைதியாக மாறியது. எல்லா விலங்குகளும், சிரிப்பை அடக்கிக்கொண்டன.

Representational Image
Representational Image

`எனக்கும் இந்தக் காட்டுக்கு ராஜாவாக வேண்டும் என்ற ஆசை உள்ளது’ என்றது முயல். மறுபடியும் எல்லா விலங்குகளும் சிரித்தது. ராஜா ஆமை ஒரு பார்வையை பார்த்ததும், அமைதியாகின. ராஜா ஆமை, `சரி, நீங்கள் நால்வரில், ஒருவர்தான் ராஜாவாக தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். எனவே, உங்களுக்கு நான் ஒரு வேலை கொடுக்கப் போகிறேன். அது யார்? சரியாக செய்கிறார்களோ, அவர்களுக்குதான் இந்தக் காட்டுக்கு ராஜாவாக தகுதி உள்ளது’ என்றது. சரி, சரி என்று சிங்கம், புலி, யானை. முயல், தலை அசைத்தது.

மற்ற விலங்குகள், ராஜா ஆமையின் பேச்சை உற்றுக் கவனித்துக் கொண்டிருந்தன. ராஜா ஆமை, ` நம் பக்கத்தில் உள்ள ஒரு காடு, பராமரிப்பு இன்றி, மரங்கள் நிறைய வெட்டப்பட்டும், வீணாக நீர் கடலில் கலந்தும், விலங்குகள் பசி பஞ்சத்தால் தங்களையே அழித்துக்கொண்டும் இருக்கின்றன. நீங்கள், ஒரு நாள் முழுவதும் அங்கிருந்து ஒரு மாற்றம் செய்ய வேண்டும். யார் சரியான மாற்றத்துக்கு வழி செய்கிறார்களோ அவர்களே, இந்தப் பெரிய பசுமையான காட்டுக்கு ராஜா. நாளை காலை, அந்தக் காட்டுக்குச் சென்று, மறுநாள் காலையில் நீங்கள் இங்கே வந்து, என் முன்னே நீங்கள் செய்த பணியை என்னிடம் சொல்ல வேண்டும். இப்பொழுது நீங்கள் புறப்படுங்கள், என்றது.

Representational Image
Representational Image

ராஜா ஆமை பேசி முடித்ததும், எந்தவொரு கேள்வியும் எழுப்பாமல் எல்லா விலங்குகளும், தங்களின் இருப்பிடத்துக்கு சென்றது. மறுநாள் காலை, சூரிய உதயம் ஆன நேரத்துக்கு முன்பாகவே சிங்கம், புலி, யானை, முயல் பக்கத்து காட்டுக்குச் சென்றது. ஒரு நாள் முழுவதும் அங்கேயே இருந்தன. மறுநாள், இந்த நால்வரும் ராஜா ஆமையின் முன்னிலையில், தங்களின் பங்கை சொல்லத் தயாரானார்கள். முதலில் சிங்கம் வந்தது. `அந்தக் காட்டில், நான் செல்லும்பொழுது மிகுந்த துர்நாற்றம் வீசியது, காடு முழுவதும் நிறைய குப்பைகள் நிறைந்ததாக இருந்தது. நான் ஒரு குப்பைகூட விடாமல், எல்லாவற்றையும் சரி செய்துவிட்டேன். தூய்மை நிறைந்த காடாக ஒரு நாளிலே மாற்றிவிட்டேன்’ என்றது.

அடுத்து புலி வந்து பேசியது, `மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டு பாதிப் பாதியாக காட்சியளித்தது. நான் மிருகங்களுக்கு உணவு கிடைப்பதற்காகவும், இயற்கை மாற்றங்களை சரி செய்வதற்காகவும் அங்கு நிறைய மரங்களை நட்டேன்’ என்றது. அடுத்து யானை வந்து பேசியது, `அங்கு நீர் நிலைகள் சரியாக பராமரிக்கப்படாமல், எல்லா நீரும் வீணாக கடலில் கலந்தது. நான் வீணாக கடலில் கலக்கும் நீரையெல்லாம், வறண்ட பகுதிகளுக்கு திருப்பிவிட்டேன். குட்டைகளுக்கும், மரங்களுக்கும் என நீர் செல்வதற்கான வழிப் பாதையை அமைத்தேன்’ என்றது.

Representational Image
Representational Image

கடைசியாக முயல் வந்து பேசியது, `நான், அந்தக் காட்டுக்கு இதுதான் முதல்முறையாகச் சென்றேன். அந்தக் காட்டில், வாழும் விலங்குகள் எல்லாமே பசியால் தங்களுக்குள்ளேயே சண்டையிட்டுக் கொண்டிருந்தன. குப்பைகள் நிறைந்த காடாக காட்சியளித்தது. மாசு நிறைந்த காற்றும் வீசியது. நிறைய மரங்கள் பாதிப் பாதியாக வெட்டப்பட்டிருந்தது. நீர் வீணாக கடலில் கலந்து கொண்டிருந்தது. இதையெல்லாம், நான் சரி செய்தாலும் மறுபடியும், அந்தக் காட்டில் வாழும் விலங்குகள், அதை ஒழுங்காக பராமரிக்க மாட்டார்கள். எனவே, அவர்களுக்கு காட்டை எப்படி பராமரிக்க வேண்டும் என்பதை, ஒரு நாள் முழுவதும் நான் கற்பித்தேன். அவர்களுக்கு, அதை காண்பிப்பதற்காக நம் காட்டுக்கு எல்லா விலங்குகளையும், அழைத்துக்கொண்டு வந்துள்ளேன்’ என்றது.

ராஜா ஆமை, அந்த விலங்குகளை எல்லாம் பார்த்தது. அந்த விலங்குகள், எலும்பும் தோலுமாக காட்சி கொடுத்தது. எல்லோருடைய பதிலையும் கேட்ட ராஜா ஆமை, தன் தீர்ப்பை வழங்கியது, `அறிவே ஆற்றல் மிக்கது. நாம் அந்த மிருகங்களுக்கு முதலில் கொடுக்க வேண்டியது, காட்டை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும் என்ற அறிவுதான். எனவே, இனிமேல் இந்த காட்டுக்கு ராஜா, முயல் தான். தன் தீர்ப்பை ராஜா ஆமை வழங்கியதும், எல்லா விலங்குகளும் ராஜா ஆமையின் பேச்சை ஆதரித்தனர்.

Representational Image
Representational Image

முயலை தூக்கி வைத்து எல்லா விலங்குகளும் மகிழ்ச்சியாக கொண்டாடினர். முயல், ராஜா ஆமையின் ஆசி பெற்று, இந்த பசுமையான தூய்மையான காட்டுக்கு, ராஜாவாக ஆனது. இனிமேல் காட்டுக்கு ராஜா முயல்தான். மக்களுக்கு போதிய அறிவு செலுத்தினால் போதும். மக்களே, அவரவர் இடங்களில், தங்கள் இடத்தை தூய்மையாகவும், நீரை பராமரிப்பதற்காகவும், மரம் வளர்க்கவும் செய்வார்கள். மக்களுக்கு எப்படி தன் இடத்தை தூய்மையாக அமைத்துக்கொள்ள வேண்டும் என்ற அறிவை, மாதம் தோறும் விழிப்புணர்வு மையம் அமைத்து மக்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.

-வினோத்