என் மனங்கவர்ந்த சிட்டே!
என்மீது என்னதான் கோபமுனக்கு?
அரிசியுடனும் அகலப்பாத்திரத்தில் தண்ணீருடனும்
மொட்டை மாடியில் முழுதாய் ஒருமணி நேரம்
காத்துக் கிடந்தும் நீ கவலைப்படவில்லையே!
என்னைத் தேடி பறந்து வரவில்லையே!
உலகமே உனக்காக…
சிட்டுக்குருவிகள் தினத்தை (மார்ச் 20)
சிறப்பாய்க் கொண்டாட…
அந்தத் தினத்தில்கூட நீ…
இந்த ஆத்மாவைத்
தனியாய் விட்டது நியாயமா?
கடந்த ஆண்டு (2021)…
அமெரிக்காவின் மெக்லீனில்…
அரிசியைக் கூண்டில் வைத்து…
அதனடியில் நீரை வைத்து…
பால்கனி கண்ணாடிக்கதவை மூடியதும்…
கூட்டமாய் நீங்கள் வந்து கூத்தடித்ததை
மறக்க மனமில்லையே!

உங்கள் வரவு…
என் தந்தையாரின் நினைவு!
அவர் அன்றாடம்…
காயப்போடும் கதர் வேட்டியில்…
எத்தனை முறை நீங்கள் எச்சமிட்டாலும்…
உங்களை அவர்…
‘சூ’ என்று விரட்டியது கூட இல்லை!
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSவளர்ந்த அமெரிக்காவில்தான்
வாழ்வது இனியென்று…
உறுதிமொழி ஏதேனும் உண்டோ?
உங்களையெல்லாம் பார்க்கவே…
பயணம் மறுபடியும் நான்
மேற்கொள்ள வேண்டுமோ?!
அங்குள்ள தட்பமும்…
அடைப்பான செடிகளும்…
உங்கள் வாழ்வுக்கு
உறுதுணைதான் நானறிவேன்!
ஒரு கப் அரிசியையும்…
ஒரு டம்ளர் நீரையும்…
வைக்காத நாளில்லை…
விடிந்ததும்..அதுவே முதல்வேலை!
உனக்காக வைத்த உணவரிசிதனை தவிட்டுக் குருவிகளே தினம் தங்கள் உணவாக்கி மகிழ்கின்றன.
உனக்காக வைத்த உணவரிசிதனை
தவிட்டுக் குருவிகளே தினம்
தங்கள் உணவாக்கி மகிழ்கின்றன.
அதிலும் சிறு மகிழ்வே!
ஆனாலும் உனைக்காண
ஆசை மிகுந்திடுதே
அங்கமெல்லாம் தவித்திடுதே!
இனியும் நீ இங்கு வராவிட்டால்
உனைக் காண மறுபடியும்…
மெக்லீன் வருவதென்றே
விரைவில் முடிவெடுப்பேன்!
அங்கு நாம் சந்திப்போம்!
ஆனந்தம் கொண்டிடுவோம்!
- ரெ.ஆத்மநாதன், கூடுவாஞ்சேரி