மற்ற எபிசோடுகள்
Published:Updated:

 கைகொடுக்கும் கிராஃப்ட்! - 7

இயற்கைப்பூ ஜடை அலங்காரம்...நிறைய ஆர்டர்கள் ப்ளஸ் வருமானம்! வே.கிருஷ்ணவேணி,  படங்கள்: எம்.உசேன்

‘‘விசேஷங்களில் பெண்கள் தங்களோட சிகை அலங்காரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிற விருப்பத்தை, நமக்கான தொழில் வாய்ப்பா மாத்திக்க, இயற்கை பூக்களால் செய்து விக்கிற ஜடை அலங்காரம் வழி ஏற்படுத்திக் கொடுக்கும்!’’ எனும் சென்னை சாந்தோம் பகுதியில் இருக்கும் ‘பேர்ல் பிரைடல் லான்ஞ்’ உரிமையாளர் முத்துலட்சுமி, அதை செய்து காட்டுகிறார் இங்கு...

 கைகொடுக்கும் கிராஃப்ட்! - 7

தேவையான பொருட்கள்:

பொக்கே ஷாப்களில் கிடைக்கும் ஆர்கிட் (orchid)  பூக்கள், வயலட் வித் கோல்டன் நிற நூல், ஆடைக்கு மேட்சிங்கான நிறத்தில் டிஷ்யூ பேப்பர், வயலட் நிற ஜமிக்கி லேஸ் அல்லது ஸ்டோன் லேஸ், கத்தரிக்கோல்.

செய்முறை:

படம் 1: வயலட் வித் கோல்டன் நிற நூலை தேவையான அளவு எடுத்து, நீளவாக்கில் நான்காக மடித்துக்கொள்ளவும்.

படம் 2: படத்தில் காட்டியுள்ளது போல் கையில் பிடித்துக்கொண்டு, கால்கட்டுக்கு முடிச்சிடுவதற்கு எப்படி நூலை கொஞ்சம் விடுவோமோ, அதே போல் விட்டுக்கொள்ளவும்.

படம் 3: முடிச்சிடுவதற்கு விட்டிருக்கும் நூலை கையில் பிடித்திருக்கும் நூலின் மேல் போட்டு, அதை அடிப்பக்கத்துக்கு கொண்டுவந்து, முன்னே ஓப்பனாக இருக்கும் இடைவெளியில் விட்டு இழுத்தால், முடிச்சு தயாராகிவிடும்.

படம் 4: முடிச்சிட்ட பிறகு, முடிச்சுக்கு முன்னே உள்ள நூலை படத்தில் காட்டியுள்ளபடி முடிச்சிடவும். இது பூக்களை கட்டும்போது முதலில் இட்ட முடிச்சு அவிழ்ந்துவிடாமல் இருக்க உதவும். கூடவே நூல் அதிகம் நீட்டிக்கொள்ளாமல் இருக்கும்.

படம் 5: வயலட் நிற டிஷ்யூ பேப்பரை நான்காக மடித்து, மீண்டும் நான்காக மடித்தால், மொட்டு போன்ற தோற்றத்தில் இருக்கும். இதை கீழ்ப்பகுதியில் நூல் கொண்டு முடிச்சிட்டுக் கொள்ளவும். இதேபோல எவ்வளவு டிஷ்யூ பேப்பர் மொட்டு வேண்டுமோ செய்துகொள்ளவும். படத்தில் காட்டியுள்ளபடி ஆர்கிட் பூவிதழ் மீது, இந்த டிஷ்யூ பேப்பர் மொட்டு டிசைனை வைத்து நூலில் (படம் 3-ல் சொல்லியிருக்கும் வழிமுறைப்படி) முடிச்சிடவும்.

 கைகொடுக்கும் கிராஃப்ட்! - 7

படம் 6: அடுத்து ஆர்கிட் பூவிதழ் மீது ஸ்டோன் லேஸை வைத்து முடிச்சிடவும்.

படம் 7: இதேபோல அடுத்தடுத்த முடிச்சுக்கு ஒரு ஆர்கிட் பூவிதழ், அதன் மீது டிஷ்யூ பேப்பர் மொட்டு, ஸ்டோன் லேஸ் என் மூன்று அடுக்காக வைத்து, இதழ்களின் கீழ்ப்பகுதியில் முடிச்சிடவும்.

 கைகொடுக்கும் கிராஃப்ட்! - 7

இப்படி கட்டி முடித்துவிட்டு இறுதியில் இரண்டு, மூன்று முடிச்சுகளைப் போட்டு முடித்தால், இயற்கை மலர்களால் ஆன அழகான ஜடை அலங்காரம் தயார். மீதம் உள்ள நூலை கட் செய்துவிடவும்.
 
ஆடைகளின் நிறத்துக்குப் பொருத்தமாக பூக்களை தேர்வு செய்து ஜடை அலங்காரம் பின்னிக் கொடுத்தால், 1,000 ரூபாய் வரை அதை விற்பனை செய்யலாம். பொக்கேவுக்கான மலரில் செய்யப்படுவதால், இது ஒரு வாரம் வரை வாடாமல் இருக்கும். நல்ல வருமானமும், நிறைய ஆர்டர்களும் நிச்சயம்!’’ - பளிச் புன்னகையுடன் முடித்தார், முத்துலட்சுமி.