மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அஞ்ஞானச் சிறுகதைகள் - 26

அஞ்ஞானச் சிறுகதைகள்
பிரீமியம் ஸ்டோரி
News
அஞ்ஞானச் சிறுகதைகள்

சந்தோஷ் நாராயணன்

மாற்று

னந்து, எதிர்பார்ப்புடன் புரொஃபஸர் பத்ராசலத்தை ஏறிட்டுப் பார்த்தான். 

'அனந்து... உங்களுக்கு இதுல ஏதாவது டவுட் இருக்கா? ஜெனிட்டிக்கலி மாடிஃபைட்னா உங்களுக்கு நல்லாத் தெரியும். ஒரு விதையோ, கருவோ, அதோட அடிப்படை மரபணுவில் வேறொரு மரபணுவைக் கலந்து, சில குறுக்கீடுகள் செய்து, அதை இன்னும் பெட்டரா மாத்துறது. ஆனா, நான் இப்போ பண்ணினது ஆறு வயசான உங்க பையனோட ஜீன்ல சில மாற்றங்களை...'

அஞ்ஞானச் சிறுகதைகள் - 26

அனந்து சந்தோஷத்துடன் தலையாட்டியபடி, 'புரொஃபஸர், நான் அறிவியலை கண்ணை மூடிட்டு நம்புவேன். மரபணு மாற்றம் எப்படி மனிதகுலத்தின் வளர்ச்சிக்கு உதவியா இருக்குன்னு போன வார லண்டன் டைம்ஸ்லகூட ஒரு கட்டுரை எழுதினேன். அதுல உங்க பெயரை கோட் பண்ணி இருந்தேன். எனக்கு என் பையன் ஒரு ஜீனியஸா வரணும். அதுதான் என்னோட ஒரே கனவு, லட்சியம்' என்றான்.

''மிக ரகசியமாகப் பாதுகாக்கப்பட்ட ஐன்ஸ்டீனின் மரபணுவை உங்கள் மகனின் மரபணுவுடன் வெற்றிகரமாக இணைத்திருக்கிறேன். மயக்கம் தெளிந்துவிட்டது. நீங்கள் பார்க்கலாம்' என்றபடி பத்ராசலம் வெண்ணிற ஆய்வகத்தில் நுழைந்தார். அனந்து ஆவலுடன் பின்தொடர்ந்தான்.

தலைமுடி சிலுப்பிக்கொள்ள கண்களைச் சிமிட்டியபடி ஒரு 'மினி ஐன்ஸ்டீன்’ போல படுக்கையில் உட்கார்ந்திருந்த பையனை நோக்கி சந்தோஷமாக நடந்தான் அனந்து.

உதவியாளன், புரொஃபஸரிடம் வந்து காதில் கிசுகிசுப்பாகச் சொல்ல ஆரம்பித்தான். 'ஒரு தவறு நடந்திருக்கு சார். பையனுக்கு மறுபடியும் டி.என்.ஏ ரீடிங் பண்ணிப் பார்த்தேன். ஐன்ஸ்டீனோட...'

அனந்து பையனை நெருங்கினான்.

'...ஐன்ஸ்டீனோட பாதுகாக்கப்பட்ட ஜீன்ல மற்ற பதிவுகள் எல்லாம் அழிஞ்சு, மிஞ்சினது அவரோட....'

பையனை வாரி அணைத்தபடி அனந்து சிரித்தான்.

'...அவரோட புகழ்பெற்ற ஞாபகமறதி மட்டும்தான் சார்.'

பையன் சந்தேகமாக அனந்துவைப் பார்த்துக் கேட்டான்.

'யாரு அங்கிள் நீங்க?'

எங்கெங்கு காணினும்...

இன்று சிக்னலில் 10 பைக்குகள் நிற்கிறதென்றால், அதில் ஏழு பேர் கவிதை எழுதி இருப்பார்கள். அவ்வளவு கவிஞர்கள் இருக்கிறார்கள் தமிழ்நாட்டில் என்பது நமக்கு தெரிந்த பழைய ஜோக். முகநூல் தமிழர்களில் மூன்றில் இரண்டு பங்கு கவிதை எழுதாதவர்களே இருக்க முடியாது. சமீபத்தில் நவீனபாணன் என்கிற பெயரில் ஒரு நண்பர் அனுப்பிய கவிதைகள் (என அவர் நம்புபவை).

எனக்கு நீயே உலகம்

நீயோ 'கேட்ஜெட்’களின் உலகில் வாழ்கிறாய்

உன் கண்களை கயலுடன் உவமைப்படுத்துகிறேன் நான்

நீயோ அதற்கு காரணம் 'லாக்மி காஜல்’    என்கிறாய்

அன்னம் விடு தூது பொருளுரைக்கிறேன்     நான்

'வாட்ஸ்அப் வாய்ஸ் மெசேஜ்-’ல் புன்னகைக்கிறாய் நீ

திரைச்சீலை ஓவியம் நீ என்கிறேன் நான்

'புரொஃபைல் டி.பி’ மாற்றி 'நல்லாருக்கா’       என்கிறாய் நீ

கிளியாந்தட்டு ஆடலாம் என்கிறேன் நான்

'கேண்டி கிரஷ் ரெக்வெஸ்ட்’ அனுப்புகிறாய் நீ

நின்னைச் சரணடைந்தேன் என        ஆரம்பிக்கிறேன் நான்

'ஜஸ்டின் பிபெர்’ யூடியூபுகிறாய் நீ

என ஃபேஸ்புக் வால்போல நீண்டுகொண்டே செல்கிறது. இன்றைய லைஃப்ஸ்டைலை கவிதைக்குள் கொண்டுவர மெனக்கெட்டிருக்கிறார். எத்தனை காலம்தான் வண்ணத்துப்பூச்சிகள் காதல் கவிதைக்குள் சிறகடித்து கொண்டிருப்பதாம்... றெக்கைகள் வலிக்கும் அல்லவா? அதனால்தான் நவீன பாணன் வாட்ஸ்-ஆப்பையும், கேண்டி கிரஷ்ஷையும் கவிதைக்குள் கொண்டுவந்ததை நான் ரசிக்கிறேன்; வரவேற்கிறேன்; லைக்குகிறேன்!

அஞ்ஞானச் சிறுகதைகள் - 26

கார்ப்பரேட் சித்தன்

'சார்... கார்ப்பரேட் எம்ப்ளாயீஸ் குடும்பத்தோடு சந்தோஷமா இருக்க, ஹாலிடே ஸ்கீம் ஒண்ணு இருக்கு' என்றான் செல்பேசியில் சேல்ஸ்மேன்.

''முதல்ல குடும்பத்தோடு இருக்க ஏதாவது ஸ்கீம் இருக்கா?' என்றான் கார்ப்பரேட் சித்தன்.

அஞ்ஞானச் சிறுகதைகள் - 26

சிற்பங்கள்

பீச்சுக்கு வாக்கிங் போகிறீர்கள். திடீரென யானை சைஸில் ஒரு நண்டு மணலில் நடந்துவந்தால், திக்கென இருக்கும் அல்லவா? அப்படித்தான் இருக்கிறது தியோ ஜான்சனின் நடக்கும் சிற்பங்களைப் பார்த்தால்!

டச் நாட்டைச் சேர்ந்த சிற்பக்கலைஞரான தியோ, ஒரு பொறியாளர். பொறியியல் அறிவுடன் கலையையும் இணைத்து அவர் உருவாக்கும் இந்த ஸ்ட்ராண்ட்பீஸ்ட் சிற்பங்கள், எந்த மோட்டார் மெக்கானிஸமும் இல்லாமல் காற்றின் துணையுடன் வாக்கிங் போகின்றன.

அஞ்ஞானச் சிறுகதைகள் - 26

'கொஞ்சம் பிளாஸ்டிக் குழாய்கள், மரத்துண்டுகள், ரீ-சைக்கிளிங் பாட்டில்கள், காடாத் துணிகொண்டு நான் உருவாக்கும் இந்தச் செயற்கை விலங்குகளுக்கு நாம் உணவிடத் தேவை

அஞ்ஞானச் சிறுகதைகள் - 26

இல்லை. அப்படியே கடற்கரையில் விட்டுவைத்தால், அவை காற்றின் உதவியுடன் பல்லாண்டுகள் வாழும்' எனத் தன் படைப்புகளை உயிருள்ள விலங்குகள்போலவே பாவித்து ஸ்மைலியுடன் சிலாகிக்கிறார் தியோ ஜான்சன்.

Strandbeest என கூகிளிட்டாலோ அல்லது யூடியூபினாலோ, படங்களையும், ஸ்ட்ராண்ட்பீஸ்ட்கள் ஒய்யாரமாக நடை பழகும் வீடியோக்களையும் காணலாம். இயக்குநர் ஷங்கர் பார்த்தால், ஹீரோவுக்குப் பின்னால் துணை நடிகர்கள்போல பிரமாண்டமான ஸ்ட்ராண்ட்பீஸ்ட் சிற்பங்கள் நடனமாட வாய்ப்பு இருக்கிறது!