மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அஞ்ஞானச் சிறுகதைகள் - 23

அஞ்ஞானச் சிறுகதைகள்
பிரீமியம் ஸ்டோரி
News
அஞ்ஞானச் சிறுகதைகள்

சந்தோஷ் நாராயணன்

கேப்டன் ஆர்னோவும் மற்றொரு ஆஸ்ட்ரோநெட் லான்ஸும் செவ்வாயில் கால் வைத்தனர். தரை கதகதப்பாக இருப்பதை, மெட்டல் உடைகளையும் தாண்டி உணர்ந்தான் ஆர்னோ. 

'மார்ஸ் ஃபர்ஸ்ட்’ திட்டப்படி செவ்வாயைக் காலனியாகப் பிடித்து மனித இனத்தைத் தழைக்கச்செய்வதே நோக்கம். தேர்ந்தெடுக்கப்பட்ட 100 பேருடன், இன்னும் சில நொடிகளில் பூமியில் இருந்து மற்றொரு விண்கலம் கிளம்ப இருப்பதாக மின்னணு தகவல் வந்தது.

ஆர்னோ ஓரடி எடுத்து நிமிர்ந்து பார்த்தான். எதிரில் இருந்த பாறைவெடிப்பின் மீது நியாண்டர்தால் தன்மையுடன் சிலர் நிற்பதைப் பார்த்து ஆக்ஸிஜன் மாஸ்குக்குள் அவன் முகம் அதிர்ந்தது.

'ஆம்... நாங்களும் மனிதர்கள்தான். நீங்கள் செவ்வாயைக் காலனியாக்கிக்கொள்ள வந்திருக்கிறீர்கள். அப்படித்தானே..?' என்றபடி சிரித்தான் அவர்களில் ஒருவன்.

அஞ்ஞானச் சிறுகதைகள் - 23

'ஆமாம்’ என்பதுபோல தலை ஆட்டினான் ஆர்னோ.

'ஹா... ஹா... உண்மையில், நாங்கள்தான் ரெண்டு லட்சம் ஆண்டுகளாக பூமியை காலனியாக்கி வைத்திருக்கிறோம் தெரியுமா? பூமியை அழித்துவிட்டுப் பல சந்ததிகளைக் கடந்தாலும் நமது இனம் மீண்டும் இங்கே திரும்பி வரும் என்பது எங்களின் முன்னோர் வாக்கு' என்றபடி லான்ஸின் தோள்களில் கை போட்டான் ஒருவன்.

'வரும் சந்ததிகளை ஏற்றுக்கொண்டு அவர்கள் வரும் உலோகப் பறவையை அழித்துவிடுங்கள், என்பது மூத்தோர் சொல்’ என்றபடி ஒருவன் ஸ்பேஸ்கிராஃப்டைப் பார்த்தான்.

'இவர்கள், நம்மை மீண்டும் ரெண்டு லட்சம் ஆண்டுகள் பின்னோக்கிக் கொண்டுபோய்விடுவார்கள்' என்றபடி ஆர்னோ, லான்ஸைப் பதற்றமாகப் பார்த்தான்.

இன்னொருவன் நெருங்கி, 'மஞ்சள் ரத்தம் ஓடும் எங்கள் இனமே... மீண்டும் தாய் மண்ணுக்கு வருக. இங்கே உங்களால் சுவாசிக்க முடியும்' என்றபடி ஆர்னோவின் ஸ்பேஸ் உடைகளைக் கழற்றினான்.

'மஞ்சள் ரத்தமா..? எங்களுடையது சிவப்பு' எனக் கத்தினான் ஆர்னோ.

ஒருவன் சட்டென முன்னால் வந்து, 'பூமிக்கும் செவ்வாய்க்கும் இடையில் உங்கள் நிறையில் மாறுதல் வருவது இல்லையா..? அதுபோலத்தான் நிறத்திலும் மாறுதல் வரும்' என்றபடி ஆர்னோவின் கைகளில் சிறு கத்தியால் கிழித்தான்.

சிவப்பு ரத்தம் ஒரு கோடாக வெளிவந்து மெள்ள மஞ்சளாக மாற ஆரம்பித்தது.

கையில் இருந்த மின்னணுகாட்டி நழுவி விழும்போது கடைசியாக அதில் வந்திருந்த தகவலை

அஞ்ஞானச் சிறுகதைகள் - 23

ஆர்னோ பார்த்தான்.

'பூமியில் இருந்து 100 பேருடன் விண்கலம் கிளம்பிவிட்டது!’

'லைஃப் முழுக்க வருமானம்  வர்ற மாதிரி ஒரு ப்ளான் இருக்கு' என்றான் வங்கி சேல்ஸ்மேன்.

'யாருக்கு...

உங்க பேங்க் ஓனருக்கா?' எனக் கடுப்பானான் கார்ப்பரேட் சித்தன்!

ஒன்லைன் விமர்சகர்கள்!

இணையத்தில்... அதுவும் குறிப்பாக ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற

இன்னபிற சமூக வலைதளங்களில் சினிமா விமர்சனங்களை உடனுக்குடன் படிப்பதில், சில அனுகூலங்களும் சில பிரச்னைகளும் இருக்கின்றன.

முதலில்... அனுகூலம்.

வெள்ளிக்கிழமை முதல் ஷோ ஆரம்பித்து இடைவேளை விடும்போதே, ஒன் பாத்ரூம் போயிட்டே ஒன்லைனில் ஸ்டேட்டஸ் மெசேஜையும், பாப்கார்ன் கொறித்துக்கொண்டே டீ குடித்தபடி ட்விட்டரில் ஒரு கீச்சையும் தட்டி, ஓப்பனிங் ஷோ முடிவதற்குள் ஒப்பீனியன் உண்டாக்கிவிடுகிறார்கள்.

அஞ்ஞானச் சிறுகதைகள் - 23

படம் பார்க்காத சக நெட்டிசன்கள் ஆபீஸ் வேலைகளுக்கு மத்தியிலும், 'கர்மவீரனே...’ கணக்காக இதை லைக்கிட்டும் ஷேர் செய்தும், மேட்னி ஷோ முடிவதற்குள் இணையத்தை மெர்சலாக்கி படம் எடுத்தவர்களைப் பதைபதைக்க வைக்கிறார்கள்.  

நல்ல படம் என்றால் கொண்டாட்ட ஸ்டேட்டஸ் போட்டு கும்மி அடிக்கவும், மொக்கை படம் என்றால் காமெடி மீமிஸ் போட்டு அம்மி மிதிக்கவும் செய்வதால், இதுவரை பார்க்காதவர்களும்

ஆறின கஞ்சி பழங்கஞ்சி ஆவதற்குள் பிளாக்கில் டிக்கெட் எடுத்தாவது படத்தைப் பார்க்கவோ, தலை தப்பியது ட்விட்டர் புண்ணியம் என எடுத்த டிக்கெட்டையே இலவசமாகக் கொடுக்கவோ தயாராகிவிடுகிறார்கள். மற்றவர்களையும் 'வீக்-எண்டில் படம் பார்க்கலாமா அல்லது பர்ஸைப் பத்திரப்படுத்தலாமா?’ என, தீர்க்கமான முடிவெடுக்க வைக்கிறார்கள்.  

இனி... பிரச்னை.

ஒரு படத்தை கொஞ்சம் ஓவராகவே கொண்டாடிவிடுவதால் அடுத்த வாரம் படம் பார்ப்பவர்களை

அஞ்ஞானச் சிறுகதைகள் - 23

'கொடுத்த பில்ட்-அப் அளவுக்கு ஒர்த் இல்லியோ’ எனவும், கதறக் கதற கமென்ட் போட்டுக் கலாய்த்த ஒரு படத்தைப் பார்க்கும்போது, 'அந்த அளவுக்கு மரண மொக்கை இல்லையே’ எனவும் யோசிக்க வைத்துவிடுவதுதான்.

இந்த அவசர விமர்சகர்கள், எதையும் சற்று ஓவராகச் செய்துவிடுவதால், நல்ல படத்துக்குக் கெட்டது செய்கிறார்களா அல்லது மோசமான படத்துக்கு நல்லது செய்கிறார்களா என்ற குழப்பக் கொத்து பரோட்டா அடித்துக்கொண்டே இருக்கிறார்கள்!

உடல் ஒரு மீடியம்!

கொடுத்த ஒவ்வொரு காசுக்கும் ஒரு ஜோக் எனச் சிரித்துவிட்டு, வீட்டுக்கு நடையைக் கட்டும் சபா நாடகங்கள் முதல் புதிய பரிமாணங்களைக் காட்டும் நவீன நாடகங்கள் வரை இன்று நமக்கு அறிமுகம். அதோடு 'நிகழ்த்துக் கலை’யும் (பெர்ஃபார்மன்ஸ் ஆர்ட்) ஒருவகையான விஷ§வல் ஆர்ட்தான். உலகம் எங்கும் அதற்குப் பல்வேறு வடிவங்கள் உள்ளன.

இதில், பல சோதனை முயற்சிகள் செய்யும் கலைஞர்களும் இருக்கிறார்கள். ஆனால் சோதனை, 'கலைஞர்களுக்கா... பார்வையாளர்களுக்கா’ என்பது பார்க்கும் நமது புரிதலைப் பொறுத்தது.

மரினா அப்ரமோவிக்  (Marina Abromovic),  செர்பியா நாட்டு நிகழ்த்துக் கலைஞர். 'நிகழ்த்துக் கலையின் மூதாட்டி’ என இவரைச் செல்லமாகச் சொல்கிறார்கள். மரினா, தன் உடலையே ஒரு சோதனைக் கருவியாகக் கொண்டு பல நிகழ்த்துகளை நடத்துகிறார்.

ஒருமுறை தன் முன்பு உள்ள ஒரு மேஜையில் ஆலிவ் ஆயில், ரோஜா செடி, கத்தி, லோடு செய்யப்பட்ட துப்பாக்கி உள்பட 72 பொருட்களைப் பரப்பிவிட்டு, ஆறு மணி நேரமாக அசையாமல் உட்கார்ந்திருந்தார். மேஜையில் உள்ள எந்தப் பொருளை வேண்டுமானாலும் மரினா மீது பிரயோகிக்கலாம் என்பதே பார்வையாளர்களுக் கான சவால். மனிதர்களின் நம்பிக்கை மீதான ஒரு சோதனை முயற்சி. ரசிகர்கள் எதைத் தேர்ந்தெடுக்கிறார்கள், அன்பா... வன்முறையா என்பதுதான் மரினா அறிய விரும்பியது!

அஞ்ஞானச் சிறுகதைகள் - 23

பார்வையாளர்கள், முதலில் அமைதியாகத்தான் பார்த்துவிட்டுச் சென்றனர். பிறகு, கூட்டம் சேரச் சேர மெள்ள வன்முறையை நோக்கி மனிதர்கள் சென்றதாகச் சொல்லும் மரினா, 'அவர்கள் எனது கூந்தலை வெட்டவும், பிறகு ரோஜா செடியின் முட்களை நிர்வாணமான எனது வயிற்றில் அழுத்தவும் செய்தனர். ஒருவன் துப்பாக்கியை எடுத்து என் தலைக்குக் குறிவைக்க, இன்னொருவன் அதைத் தடுத்தான். எப்போதும் முடிவை கூட்டத்திடம் விட்டுவிடும்போது நீங்கள் கொல்லப்படும் சாத்தியம்கூட உண்டு’ என்கிறார்!

அன்புக்கும் வன்முறைக்கும் இடையே உறைந்திருக்கும் மனிதர்களின் சைக்காலஜியை, தனது பெரும்பாலான நிகழ்த்துக்  கலையின் வழியாகச் சோதித்துப் பார்த்த மரினா, 'எனது உடலின் எல்லையையும் மனதின் விரிவையும் அதற்குப் பயன்படுத்திக்கொள்கிறேன்’ என கவித்துவமாகச் சொல்கிறார்.

மரினா, இந்தியாவுக்கு வந்திருக்கிறாரா எனத் தெரியவில்லை. ஒருவேளை அவர் வந்து, இங்கு அந்தப் பரிசோதனையை மேற்கொண்டால்... நினைக்கவே படபடப்பாக இருக்கிறது!