மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அஞ்ஞானச் சிறுகதைகள் - 22

அஞ்ஞானச் சிறுகதைகள்
பிரீமியம் ஸ்டோரி
News
அஞ்ஞானச் சிறுகதைகள்

சந்தோஷ் நாராயணன்

''இந்த ஒரு லட்சம் கர்ப்பிணிப் பெண்கள், நாட்டின் பின்தங்கிய பிராந்தியங்களில் இருந்து கொண்டுவரப் பட்டவங்க. சிசுக்களின் வலது மூளையில் இருக்கிற, சமூக அநீதியை எதிர்க்கிற, புரட்சி செய்யத் தூண்டுகிற நியூரான்களை அல்ட்ரா லேசரால் அழிப்பதும்... அதுக்குப் பதிலா நம்ம நிறுவனத்தோட ரூட் மேப்பை அதுல பதியவைப்பதும்தான் நாம செய்யவேண்டிய வேலை. இன்னும் 20 வருஷத்துல கேள்வி கேட்காத லட்சம் அடிமைகள் தானா வந்து, நம்ம கம்பெனியில வேலைக்குச் சேருவாங்க. இந்தியாவின் மிகப் பெரிய கார்ப்பரேட் கம்பெனி இதுக்காகத்தான் இந்த லேப் ஆரம்பிச்சு நம்மளை அப்பாயின்மென்ட் பண்ணியிருக்கு'' என்றார் சீனியர் மருத்துவர் நரேந்தர். அவர் முன்பு இருந்த இரண்டு இளம் மருத்துவர்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

அஞ்ஞானச் சிறுகதைகள் - 22

''இன்னையில இருந்து நம்ம வேலை ஆரம்பிக்குது. சரியா 10 நாள்ல இந்த ஃபர்ஸ்ட் பேட்சை முடிச்சு அனுப்பணும்.''

''ஓ.கே சார்'' என்றனர் இளம் மருத்துவர்கள்.

10 நாட்களில் வேலை முடிந்தது. நரேந்தர் திருப்தியாகச் சிரித்தபடி தலைமை அலுவலகத்துக்கு இளம் மருத்துவர்களை அழைத்தார். வெளியே வந்த ஓர் இளம் மருத்துவன் மற்றவனிடம், ''நான் ஒரு சிசுவுக்கு மட்டும் எதுவும் பண்ணல. ஃபேக் ரிப்போர்ட்தான் கொடுத்தேன்'' என்றான்.

அஞ்ஞானச் சிறுகதைகள் - 22

கேட்டவன் அதிர்ச்சியுடன், ''ஏன் இப்படிப் பண்ணீங்க சுபாஷ்?'' என்றான்.

''ஒரு விதை இருந்தாலும் போதும்' என்றான் கண்கள் சிவக்க. மற்றவனுக்கு முதலில் புரியவில்லை!

கார்ப்பரேட் சித்தன்

''டார்கெட் அச்சீவ் பண்ணலைன்னா, ஃபயரிங்தான்'' என்றார் பாஸ், மீட்டிங்கில்.

''இது என்ன கம்பெனி மீட்டிங்கா... இல்ல கௌபாய் பட ஷூட்டிங்கா?'' எனக் காண்டானான் கார்ப்பரேட் சித்தன்!

பெருசா யோசி!

'எதையும் பெருசா யோசி’ என்பது அடிக்கடி நம் காதில் விழும் அறிவுரை. அப்படிப் பெருசா யோசிக்கிறதையே கலையாகச் செய்துகொண்டிருக்கிறார் ஃப்ளோரெண்டின் ஹாஃப்மேன். டச்சு நாட்டைச் சேர்ந்த சிற்பக் கலைஞரான ஹாஃப்மேன் மனிதர்களின் குழந்தைக் கால ஞாபகங்களை, தன் பிரமாண்டமான சிற்பங்களால் தட்டி எழுப்பிக்கொண்டிருக்கிறார்.

குழந்தைகளுக்குப் பரிச்சயமான 'யெல்லோ ரப்பர் டக்’ எனும் மஞ்சள் வாத்து பொம்மைகளைப் பெரிதாகச் செய்து, ஃபிரான்ஸ் முதல் ஹாங்காங் வரையுள்ள நாடுகளின் பல்வேறு நதிகளில் மிதக்கவிட்டிருக்கிறார். தங்களின் பால்ய கால தோழனைப் பிரமாண்டமாகப் பார்த்து, பார்வையாளர்கள் பரவசம்கொள்கிறார்கள்.

அஞ்ஞானச் சிறுகதைகள் - 22

இதுபோல 'ஹிப்போத் தேம்ஸ்’ என்ற பெயரில் தேம்ஸ் நதியில் மிதக்கும் ஹிப்போபொட்டாமஸ், பார்க்கில் ஜாலியாகப் படுத்துக்கிடக்கும் 'ஃபேட் மங்கி’, ஹேர் ஐலேண்டின் கரையில் சூரியக்குளியல் எடுக்கும் முயல் குட்டி... எனக் குழந்தை, தன் நினைவுகளைக் குதூகலிக்கும் சிற்பங்களாக்கி, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குதியாட்டம்போட வைத்துவிடுகிறார் ஹாஃப்மேன்.

அஞ்ஞானச் சிறுகதைகள் - 22

'நவீன கலைகளின் சீரியஸ் தன்மையில் இருந்து வெளியேறி ஹ்யூமராகவும் விளையாட்டுத்தனமாகவும் பெரிய சிற்பங்களை உருவாக்குவது ஜாலியாக இருக்கிறது’ எனச் சொல்லும் ஹாஃப்மேன், 'பெருசாக யோசிப்பதும் அதைச் செயல்படுத்துவதும் கட்டணமே இல்லாமல் பொதுமக்களுக்கு காட்சிக்கு வைப்பதும் தனக்குப் பிடித்திருக்கிறது’ என்கிறார்.  

அஞ்ஞானச் சிறுகதைகள் - 22

பாலித்தீன் கவர்கள், ரப்பர் செருப்புகள், பிளைவுட் எனப் பல்வேறு பொருட்களால் இந்தப் பிரமாண்ட விளையாட்டு காட்டும் ஹாஃப்மேனிடம், 'இதை கேலரிகளுக்குள் காட்சிக்குவைக்காமல் ஏன் பொதுஇடங்களில் காட்சிக்கு வைக்கிறீர்கள்?’ எனக் கேட்டால், 'பொதுவெளியில் இருந்தே மக்கள் கலையை ரசிக்க வேண்டும். பொதுவெளி மக்களுக்கானது என்ற உணர்வை உருவாக்க வேண்டும். கலை என்பது எல்லாருக்குமானது’ என நுட்பமான அரசியல் பேசுகிறார்!