கைவினையும் கவலையும்!
கைவினையும் கவலையும்!
##~## |
தி.நகர் ரெங்கநாதன் தெரு சென்று கை நிறைய பிளாஸ்டிக் பொருட்களை அள்ளி வந்து வீட்டை நிறைத்தால்தான் நம்மவர்களுக்கு ஷாப்பிங் சென்று வந்த திருப்தி. கலைநயம் மிக்க கைவினைப் பொருட்கள் கண்காட்சி நடைபெறும் இடங்களுக்கு மறந்தும் எட்டிப்பார்க்க மாட்டார்கள். ஆனால், அப்படியானவர்களையும் ஜவுளி முன்னேற்றத் துறையின ரால் ஆண்டுதோறும் நடத்தப்படும் அனைத்து மாநிலக் கைவினைக் கலைஞர்களின் கண்காட்சி மாற்றிவிடும்.
இந்தியாவின் 18 மாநிலங் களில் இருந்து 150 கைவினைக் கலைஞர்கள் தங்களின் கலைப் பொருட்களை காட்சிக்கு வைக்க உள்ள னர். இடைத்தரகர்களின் தலையீடு இல்லாமல் நேரடியாக விற்க வழிவகை செய்வதும் இந்தக் கண்காட்சி யின் நோக்கம். வள்ளுவர் கோட்டத்தில் செப்டம்பர் 23-ம் தேதி தொடங்கி அக்டோபர் 2-ம் தேதி வரை நடைபெறஇருக்கிறது இந்தக் கண்காட்சி.

பனைஓலைக் கூடைகள், வண்ண கைப்பைகள், பஞ்சாரம், மேஜை விரிப்புகள், அச்சு பதிக்கப்பட்ட புடவைகள், கண்ணாடிச் சிற்பங்கள், அணிகலன்கள், வீட்டு உபயோகப் பொருட் கள் என ஏராளமான பொருட்கள் கடை விரிக்கப் பட உள்ளன. காஞ்சிபுரம் சுங்குடிச் சேலை, கொலு பொம்மை, மதுரை இயற்கை சாயப் புடவை, குப்பைகள் மறுசுழற்சி மூலம் உருவாக்கப்பட்ட அலங்காரப் பொருட்கள், ஆந்திர கலம்காரி புடவை, மேற்கு வங்க மெத்தை விரிப்புகள், ஒடிஷா வெள்ளி குங்குமச் சிமிழ், குஜராத் பாந்தினி புடவை, பஞ்சாப் காலணி என ஒட்டுமொத்த இந்தியக் கலா சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் இந்தக் கண்காட்சி நடைபெற உள்ளது.
''இந்தக் கைவினைப் பொருட்கள் தயாரிப் பில் ஈடுபடுபவர்களில் 70 சதவிகிதம் பேர் பெண்கள். இளைஞர்கள் இந்தத் தொழிலுக்கு வரத் தயங்குவது வருத்தமாக இருக்கிறது. அவர்கள் இதைக் கையில் எடுத்தால் மற்றவர்களிடம் வேலை தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லாமல் போகும்!'' என்கிறார் இந்தியக் கைவினைக் கழகத்தின் முதன்மைச் செயல் அதிகாரி வித்யா!
அ.ஸ்டாலின் ஆன்ட்ரூஸ்
நீ ஆப்பிள்... நான் ஆரஞ்சு!
புழுதிவாக்கம் ஆச்சர்யம்

அவசரகதியில் ஓட்டமாக ஓடும் இந்த ஃபாஸ்ட் ஃபுட் யுகத்தில் உணவு ஆரோக்கியம் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் வகையில் புழுதிவாக்கம் வியாசா வித்யாலயா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், கடந்த வாரம் தேசிய நியூட்ரிஷன் வாரத்தை கலர்ஃபுல்லாகக் கொண்டா டினர். ஓணம், ரம்ஜான், விநாயகர் சதுர்த்தி என எந்த விழாவையும் ஒன்றுபோலவே நினைத்துக் கொண்டாடுவதால் வியாசா வித்யாலயா ஏற்கெனவே ஏரியாவில் ஏக பிரபலம்.

கத்திரிக்காய், தர்பூசணி, ஆப்பிள், ஆரஞ்சு என காய்கறி, பழங்கள்போல மாணவர்கள் உடை அணிந்து வந்து, அவற்றின் பயன்பாட்டைப் பற்றி மழலை மொழியில் சொல்லும்போது கேட்கவே அவ்வளவு சுவாரஸ்யம். 'அப்புறம் என்னாம்மா, சொல்லணும்? லெமன்ல என்ன ஆசிட் இருக்குன்னு சொன்னீங்க?’ என்று இடையிடையே அருகே இருந்த அம்மாக்களிடம் ஒரு சில மாணவர்கள் சந்தேகம் கேட்க, சிரிப்பொலிக் கச்சேரி களை கட்டியது.
'நூடுல்ஸ், பர்கர் போன்ற உணவு வகைகளைச் சாப்பிடுவதால் உடல் எடை கூடும். ரெடிமேடு பாக் கெட் சிப்ஸ்களில் அஜினமோட்டோ அதிகம் சேர்ப்பதால் கேன்சர் வர வாய்ப்பு இருக்கிறது' என்று எச்சரித்த மாணவர்கள், இடையிடையே பார்வையாளர்களுக்கும் தங்கள் ஜூனியர் மாணவர்களுக்கும் பழம், காய்கறித் துண்டுகளைத் தந்து இயற்கை உணவின் முக்கியத்துவத்தை உணர்த்தினர்.
'முள்ளங்கி வாசமே பிடிக்கலைன்னு சொல்றவங்களா நீங்க? அப்படின்னா அதைத் துவையலாகவோ, சப்பாத்தியில் சேர்த்தோ சாப்பிடலாம். கறிவேப்பிலை, கொத்துமல்லியை ஒதுக்குபவர்கள்... அதைக் காயவைத்து அரைத்து இட்லி, தோசைக்குப் பொடி யாகத் தொட்டுக்கொள்ள லாம். பூசணிக்காய் சாம்பார் என்றதும் ஓட்டம் எடுக்கிறீர்களா? பூசணி அல்வா சாப் பிடுங்கள். இவை எல்லாம் சாப்பிட்டால் ஓவர் வெயிட் போடாமல் மூக்குக் கண் ணாடி இல்லாமல் ஆரோக்கி யமாக வாழலாம்' என வரிசையாகப் பட்டியல் இட்ட ஒரு மாணவன், 'இயற்கை உணவுகளே ஆரோக்கியத்தின் நண்பன்' என ஃபைனல் டச் கொடுத் தான்!
- க.நாகப்பன்