மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அஞ்ஞானச் சிறுகதைகள் - 19

அஞ்ஞானச் சிறுகதைகள்
பிரீமியம் ஸ்டோரி
News
அஞ்ஞானச் சிறுகதைகள்

சந்தோஷ் நாராயணன்

ண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் நதி வறண்டு கிடந்தது. நீரியல் பேராசிரியர் இளங்கோ, தனி ஒருவராக அந்த நதியின் ஆதியைத் தேடி தன் பயணத்தைத் தொடங்கினார். கைவிடப்பட்டு சிதிலமான அணைகளையும், வெப்பத்தில் மணல் எரியும் தடங்களையும் கடந்து, அவர் நதியின் ஊற்றை எட்டியபோது வெயில் அந்த மலையெங்கும் பரவிக் கிடந்தது. 

அஞ்ஞானச் சிறுகதைகள் - 19

பாட்டில் தண்ணீரில் ஒரு மிடறு தாகம் தீர்த்துக்கொண்டு, காய்ந்துபோய் இருந்த ஊற்றை ஏக்கமாகப் பார்த்தார். ஒருகாலத்தில் பல கோடி நாவுகளின் தாகம் தீர்த்த நதியின் ஊற்று அல்லவா இது? சட்டென முதுகுக்குப் பின்னால் ஏதோ அசைவை உணர்ந்தவர், திரும்பிப் பார்த்தார். இறுக்கமான முகத்துடன் பழங்குடிப் பெண் ஒருத்தி நின்றிருந்தாள்.

''நீங்கள் பேராசிரியர் இளங்கோதானே?'

ஆச்சர்யமாகப் பார்த்தபடி, 'நீ..?' என்றார் பேராசிரியர்.

''அரசு எல்லைக் கோடுகளைக் கிழிக்கும் காலத்துக்கு முன்பே, இந்தக் குடகில் பிறந்தவள். ஓட்டமும் நடையுமாக இந்தத் தேசத்தில் திரிந்தவள். மனிதர்களுக்கு மட்டுமா... செடி, கொடி, விலங்குகளுக்காகவும் என் தாய் முலை சுரந்துகொண்டுதான் இருந்தது. பிறகு, எல்லைகளின் பெயரால் என்னைப் பங்குபோடத் தொடங்கினார்கள்.

என் சுதந்திரமான நடையை வளர்ச்சியின் பெயரால் கட்டிப்போடத் தொடங்கினார்கள். பிறகு, நானே என்னை இங்கே ஒடுக்கிக்கொண்டேன். என்றாவது ஒருநாள் நீங்கள் என்னைத் தேடி வருவீர்கள் எனத் தெரியும். பாருங்கள் என் தேகத்தை...' என்றபடி தன் போர்வையைக் கழற்றி, காற்றில் எறிந்தாள்.

நிர்வாணமான அவள் உடல், கழுத்தில் இருந்து கால் வரை காங்கிரீட் பாலங்களால் கட்டப்பட்டிருந்ததை ஒரு நொடிக்குமேல் பார்க்க முடியவில்லை.

'மருங்குவண்டு சிறந்தார்ப்ப மணிப்பூ ஆடை’ என்னும் வார்த்தைகள் எங்கிருந்தோ காற்றில் மிதந்து வந்து பேராசிரியரின் காதுகளை நிறைத்தன.

வெயிலுக்கேத்த வேட்டி

'சந்தோஷ், இன்னைக்குப் பிறந்த நாளா?’ 'கோயிலுக்குப் போயிட்டு வந்தீங்களா?’ 'வீட்ல ஏதாச்சும் விஷேசமா?’ - இடுப்புக்குக் கீழே ஜீன்ஸுக்குப் பதிலாக வேட்டியைக் கண்டுவிட்ட சக பாடிகளின் விசாரணை இது. ஒரு கார்ப்பரேட் அலுவலகத்தில் வேட்டி அணிந்த வேலையாள். என்னே காலக்கொடுமை?!

பீரோவை ஆராய்ந்தபோது மடித்து வைத்திருந்த வேட்டி 'கட்டிக்கோ’ என்றது. 'ஆப்பீஸாவது கீப்பீஸாவது, கட்டுறா வேட்டிய’ என்றது ஆழ்மனதில் இருந்து ஒலித்த ஓர் ஆதிக் கிழவனின் குரல். அப்புறம் என்ன, சின்னக்கவுண்டர் விஜயகாந்த் கணக்காக வேட்டியுடன் ஆபீஸில் என்ட்ரி கொடுத்துவிட்டேன். அதற்குத்தான் மேற்கண்ட கேள்விகள்; சந்தேகங்கள்; விசாரணைகள்.

சரத்குமாரில் இருந்து மம்மூட்டி, மோகன்லால் வரைக்கும் வேட்டிக்கு வக்காலத்து வாங்கினாலும் நம் தமிழ் இளங்குடிகள் கண்டுகொள்வதாக இல்லை. வீட்டு விசேஷங்களுக்கான 'அக்கேஷனல்’ உடை மட்டுமே என வேட்டியின் மகிமையை ஓரம்கட்டிவிட்டு, அடிக்கிற வெயிலிலும் ஜீன்ஸ் அணிந்து, அரிக்கிற தொடையைச் சொரிந்துகொள்ள முடியாமல் அல்லல்படுகின்றன.

'மச்சான், பேன்ட்தான்டா வண்டி ஓட்ட வசதி’ என்கிறான் ஒரு நண்பன். எப்போதும் வண்டியிலேயே வயித்துப்பாடு பார்க்கும் சேல்ஸ் ரெப்களுக்கும் மார்க்கெட்டிங் டார்கெட்டிங்குகளுக்கும் இந்த லாஜிக் ஓ.கே.மடிச்சுக் கட்டின வேட்டியோடு பட்டாபட்டி டிரௌசர் தெரிய, முட்டிக்குக் கீழே முழுசா காத்து வாங்க, எத்தனையோ கிராமத்து மைனர்கள் சினிமாவுல வண்டி ஓட்டுறதைப் பார்க்கும்போது இந்த லாஜிக்கும் 'லோ’ஜிக்காத்தான் தெரியுது.

அஞ்ஞானச் சிறுகதைகள் - 19

குளிருக்கு நல்லது என கூடாரம் அடிக்கிற துணியில் ஜீன்ஸ் தைத்திருக்கான் வெளிநாட்டான். பற்றி எரியும் வெயிலுக்கு பருத்தி ஆடையே நல்லது என வேட்டியைத் தந்துவிட்டுப் போயிருக்கிறான் நம் பாட்டன். பருவமும் தெரியாமல் பண்பாடும் புரியாமல் திரிகிறான் அவன் பேரன்.

பேன்ட் - காலனியாக்கத்தின் எச்சம்; உலகமயமாக்கலின் உச்சம் எனச் சொன்னாலும், எதுகை மோனைக்குச் சிரித்துவிட்டு எழுந்துபோய்விடுகிறார்கள் இளைஞர்கள். ஆயிரம் குறை சொன்னாலும் அரசியல்வாதிகளிடம் பிடித்த ஒரே விஷயம், வேட்டியை இன்னும் விட்டுக்கொடுக்காமல் இருப்பதுதான்.

முழுதாகக் கட்டினால் ஓர் அழகு, முட்டி வரைக்கும் மடித்துக் கட்டினால் மறு அழகு. கேரளத்து சேட்டன்கள் இன்னும் கல்லூரி கேம்பஸில்கூட வேட்டி கட்டித் திரிகிறார்கள். தமிழன்தான் தாழ்வுமனப்பான்மையில் வேட்டிக்கு வேட்டுவைக்கிறான்!

'உங்கள் புகைப்படங்களைப் பார்ப்பவர்கள், எதை உணர வேண்டும்?’ என்ற கேள்விக்கு, 'அவர்களின் உடலும் இந்தப் பூமியின் ஒரு பாகமே என்பதைத்தான்’ எனப் பதில் அளித்தார் ஜ்யென் பால் போர்தியே (யிமீணீஸீ றிணீuறீ ஙிஷீuக்ஷீபீவீமீக்ஷீ). இவர், கலிஃபோர்னியாவைச் சேர்ந்த புகைப்படக்கலைஞர்; யுனிவர்சிட்டி ஆஃப் கலிஃபோர்னியாவின் ஆர்க்கிடெக்ட் ஆசிரியர்; ஓவியர் எனப் பன்முகம்கொண்டவர்.

இந்த டிஜிட்டல் புரட்சி காலத்திலும் பழைய அனலாக் புகைப்பட முறையை விடாப்பிடியாகத் தொடரும் ஜ்யென் பால் எடுக்கும் புகைப்படங்களில், மனித உடல்கள் இயற்கையின் ஓர் அங்கமாக மாறிப்போகின்றன. அதை எவ்வாறு சாத்தியப்படுத்துகிறார்?

அவர் தேர்ந்தெடுக்கும் நிலக்காட்சிக்குப் பொருந்திப்போகும் வகையில், மனித உடல்களில் 'பாடி ஆர்ட்’ செய்வதும், அதைச் சரியான கோணத்தில் புகைப்படத்தில் பதிவுசெய்வதுமே காரணம் என்கிறார்.

அஞ்ஞானச் சிறுகதைகள் - 19

'சர்ரியலிச நவீன ஓவியங்களா... இல்யூஷன் போட்டோகிராபியா?’ என, பார்வையாளர்களை ஒரு நொடி குழம்பவைக்கும் இந்தப் புகைப்படங்களை, 'பாடிஸ்கேப்’ எனும் தலைப்பில் புத்தகமாகவும் வெளியிட்டிருக்கிறார்.

அஞ்ஞானச் சிறுகதைகள் - 19

பாடி ஆர்ட், இல்யூஷன் போட்டோகிராபி என்பது எல்லாம் இன்று இணையத்தில் புழங்கும் நெட்டிசன்களுக்கு பரிச்சயமான ஒன்றுதான் என்றாலும், ஜ்யென் பாலின் புகைப்படங்களின் தனித்துவம், அதன் வண்ணங்களிலும் கம்போஸிங்கிலும் தெரிகிறது. அதை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது பிரமிப்பை ஏற்படுத்துகிறது. 'யிமீணீஸீ றிணீuறீ ஙிஷீuக்ஷீபீவீமீக்ஷீ’ என கூகுளில் டைப் அடித்து இமேஜஸை க்ளிக் செய்தால், ஜ்யெனின் புகைப்பட உலகம் உங்கள் முன் விரியும்.

ஜ்யெனின் புகைப்படங்களில் இயற்கையுடன் ஒன்றுகலந்த மனிதர்கள், தனிமையில் எதற்காகவோ காத்துக்கொண்டு அமர்ந்திருக்கிறார்கள்; நிற்கிறார்கள்; படுத்திருக்கிறார்கள்; நடக்கிறார்கள்.

அஞ்ஞானச் சிறுகதைகள் - 19

இயற்கையில் இருந்து வெகுதூரம் விலகிவந்து இயந்திரமாகச் சுற்றிக்கொண்டிருக்கும் நாமும், அவர் புகைப்படத்துக்குள் குதித்துவிடலாம்போல தோன்றுகிறது!

அஞ்ஞானச் சிறுகதைகள் - 19

'லீவுல, பல ஸ்டடி கேம்ப்ஸ் இருக்கு. இட்ஸ் காம்பெடிட்டிவ் வேர்ல்டு யு நோ?' என்றார் நண்பர், குழந்தையுடன். 

''அந்தக் காலத்துல லீவுன்னா... குழந்தைங்க ஊருக்குப் போவாங்க. இப்போ, போருக்குப் போறாங்கபோல' எனக் கலாய்த்தான் கார்ப்பரேட் சித்தன்!