என் விகடன் - திருச்சி
என் விகடன் - சென்னை
என் விகடன் - மதுரை
என் விகடன் - புதுச்சேரி
Published:Updated:

என் ஊர்!

காளிங்கராயனைப் பார்த்தா கண்ணீர்தான் வருது!

##~##

ள்ளி ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கி அரசியலில் ஈடுபட்டு மத்திய, மாநில அமைச்சராக இருந்தவர் சுப்புலட்சுமி ஜெகதீசன். இன்று இவர் முழு நேர விவசாயி. கொடுமுடி அருகில் இருக்கும் வடக்கு புதுப்பாளையம் பற்றிய தனது பால்ய கால  நினைவு களை இங்கே பகிர்ந்துகொள்கிறார்...

 ''ஈரோடு, மஞ்சளுக்குப் பெயர்போன மாவட் டம். அந்த மாவட்டத்தில் அதிக அளவில் மஞ்சள் விளைவிக்கிறது எங்க ஊர்தான். 800 வருஷத்துக்கு முன்பு காளிங்கராயன் என்பவர், பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்டி, 56 மைல் நீளத்துக்கு வாய்க்கால் வெட்டிக் கொடுத் தார். அந்த வாய்க்காலுக்கு அவர் பெயரையே வெச்சுட்டாங்க. அன்னிக்கு வருஷத்துக்குப் 10 மாசங்கள் வாய்க்காலில் தண்ணீர் ஓடும். முப்போகமும் மஞ்சள் விளையும்.

என் ஊர்!

எங்க ஊர் மக்களின் வாழ்க்கை முறை அர்த் தம் நிறைந்தது. விடியற்காலை 4.30 மணிக்கே எழுந்து பால் கறக்கறது... மாட்டுத் தொழுவத் தைப் பராமரிக்கறதுனு வேலைகளை ஆரம்பிச் சுடுவாங்க. காலையில் 7 மணிக்குத் தூக்குச் சட்டியில் கஞ்சியை எடுத்துகிட்டு வயக் காட்டுக்குக் கிளம்பினா, சாயங்காலம்     5மணிக்குத்தான் வருவாங்க. சாப்பிட்டு   7மணிக்கு எல்லாம் படுத்துடுவாங்க. அதுக்கு அப்புறம் ஊர் அடங்கிடும்.

நான் நடுத்தர விவசாயக் குடும்பத்தில் பிறந்தேன். அதனால் இயல்பாகவே எனக்கு விவசாயத்தின் மேல் ஈடுபாடு அதிகம். அஞ்சாம் வகுப்பு  வரைக்கும் எங்க ஊரில் படிச்சேன். எஸ்.எஸ்.எல்.சி. வரை கொடுமுடி ஸ்ரீசங்கர வித்யாசாலா பள்ளியில் படிச்சேன். அப்போ தான் 'கொடுமுடி கோகிலம்’ கே.பி. சுந்தராம்பாள் கூட நெருக்கம் ஏற்பட்டது. நான் படிச்ச பள்ளிக்கு எதிர் வீடுதான் அவங்க வீடு. பெரும் பாலும் எனக்கு மதிய சாப்பாடு அவங்க வீட்லதான். இப்பக்கூட கொடுமுடியில் கே.பி.எஸ். தியேட்டர் இருக்குது. அந்த தியேட் டரை எம்.ஜி.ஆர்., கலைஞர், ஜெயலலிதா மூணு பேரும் சேர்ந்து திறந்துவெச்ச காட்சி இப்பவும் என் கண்ணுக்குள்ளேயே இருக்கு.

எங்க வீட்டுக்கு எதிர்த்த மாதிரியே காளிங்கராயன் வாய்க்கால் ஓடுது. அப்ப எல்லாம் வாய்க்கால்ல குதிச்சு கும்மாளம் அடிப்போம். தைப் பொங்கல் சமயத்துல மாரியம்மன் பண்டிகை வரும். அதுக்காக மார்கழி மாசமே வாசலில் கோலம் போட்டு சாணிப் பிள்ளையார் வைப்பாங்க. தினமும் அதை எடுத்து சேர்த்து வெச்சுக்குவோம். தை மாசம் பிறந்ததும், ஒரு கூடையில் அந்த சாணிப் பிள்ளையாரை எடுத்துட்டு வாய்க்காலுக்குப் போய் பிள்ளையாரைக் கரைச்சு, பூவை தலையில்வெச்சுக்கிட்டு வட்டமா நின்னு கும்மியடிச்சு ஆடுவோம்.

என் ஊர்!

சேலம் சாரதா கல்லூரியில் ஆசிரியர் பயிற்சி முடிச்சுட்டு, நான் படிச்ச அதே கொடுமுடி பள்ளியில் ஆசிரியர் ஆனேன். 1977-ல் நான் ஆசிரியரா இருந்தப்ப திடீர்னு எம்.ஜி.ஆர். என்னை தேர்தலில் நிற்கச் சொன்னார். நான் தயக்கத்துடன் மறுத்தேன். அப்பாவும் கணவரும் கொடுத்த தைரியத்தில் போட்டியிட்டு

என் ஊர்!

ஜெயிச் சேன். மொடக்குறிச்சி தொகுதியில் மூணு முறை எம்.எல்.ஏ-வாக இருந்த க.ரா.நல்ல சிவம், மு.சின்னசாமி ஆகியோர் எளிமைக் குப் பேர் போனவங்க. அவங்கதான் எனக்கு அரசியலில் முன் மாதிரி.

இன்னிக்கு ஊர் நிலமை தலைகீழா மாறிடுச்சு. ஓயாம ஓடின காளிங்கராயன் வாய்க்கால், ஈரோடு தோல் தொழிற்சாலை கழிவுகளால் சாக்கடையா ஆகிப் போச்சு. இதனால் இந்தப் பகுதி மக்கள் கேன்சர், தோல் நோயால் ரொம்ப அவதிப்படுறாங்க. நான் அமைச்சராக இருந்தப்ப காளிங்க ராயன் வாய்க்காலைப் பாதுகாக்க பல முயற்சிகள் எடுத்தும்கூட எல்லாம் வீணாகிடுச்சு. இன்னிக்கு காளியங்கராயன் வாய்க்காலைப் பார்த்தா... எனக்குக் கண்ணீர்தான் வருது!''

சந்திப்பு: கி.ச.திலீபன்