என் விகடன் - திருச்சி
என் விகடன் - சென்னை
என் விகடன் - மதுரை
என் விகடன் - புதுச்சேரி
Published:Updated:

பாட்டாளிகள் படிப்பகம்!

பாட்டாளிகள் படிப்பகம்!

##~##

'''படி... படி... படி...’ - ஆளும் வர்க்கத்துக்கு எதிராகப் பாட்டாளி மக்களை ஒன்றுதிரட்டி ரஷ்யப் புரட்சிக்கு வித்திட்ட லெனின் சொன்ன வாசகம் இது. ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் மறுமலர்ச்சிக்கும், மறுமலர்ச்சி பெற்ற சமுதாயத்தின் முன்னேற்றத்துக்கும் அவசியமானவை புத்தகங்கள். அவையே இந்தச் சமூகத்தைப் புரட்டிப்போடும் வல்லமை பெற்றவை. புத்தகங்களே பாட்டாளி வர்க்கத்தின் பிரச்னைகளுக் கும் தீர்வு சொல்பவை!'' என்று புத்தகப் பெருமைகளை பட்டியல் இடுகிறார் ஈரோடு- கருங்கல் பாளையம் பாட்டாளிகள் படிப்பகத்தின் பொறுப்பாளர் உமாபதி.

 ஈரோட்டில் ஜவுளிச் சந்தை, மஞ்சள் மண்டி உள்ளிட்ட மார்க்கெட்டுகளைச் சார்ந்து உள்ள கூலித் தொழிலாளர்கள் அதிகம். இந்தப் பாட்டாளி சமூகம் படிப்பதற்காக, கடந்த 2005-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது பாட்டாளிகள் படிப்பகம். செல்வச் சீமான்களோ, கல்வி யாளர்களோ இதை உருவாக்கவில்லை. கருங்கல்பாளையத்தில் உள்ள ஜவுளித் தொழிலாளர்களின் சங்கங்கள் எல்லாம் ஒன்றுகூடி அமைத்த படிப்பகம் இது.சுருக்க மாகச் சொன்னால், உழைக்கும் மக்களுக் காக உழைக்கும் மக்களே ஏற்படுத்திக் கொண்ட நூலகம் இது.

பாட்டாளிகள் படிப்பகம்!
பாட்டாளிகள் படிப்பகம்!

''இங்கு உள்ள தொழிலாளர்கள் அறியாமையாலும் கல்வி அறிவு இல்லாமையாலும் பலராலும் கொத்தடிமைகளாக ஏமாற்றப் பட்டுக்கொண்டு இருந்தனர். தவிர, அவர்களுக்குள் நிறைய சச்சரவுகள். இதை எல்லாம் மாற்ற எண்ணி, கடந்த 2005-ல் தந்தை பெரியார் பிறந்த நாளை ஒட்டி, தொடங்கப்பட்ட படிப்பகம் இது. இங்கு 4,000  புத்தகங்கள் உள்ளன. படிப்பறிவு இல்லாத தொழிலாளர்களுக்கு இங்கேயே ஆரம்பக் கல்வியும் கற்றுக் கொடுக் கிறோம். கடந்த ஆறு ஆண்டுகளில் இப்படி 100-க்கும் மேற்பட்டோர் இங்கு படிப்பறிவுபெற்று உள்ளார்கள். இங்கு லெனின், ஸ்டாலின், காந்தி, பெரியார் போன்ற தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, குழந்தைகள், பெண்கள் படிப்பதற்கு ஏற்ற கதைகள் மற்றும் குடும்ப நலன் சார்ந்த புத்தகங்கள் எனப் பலதுறையைச் சார்ந்த நூல்கள் உள்ளன.

குறிப்பாக மொழி, இனம், சுற்றுச்சூழல் சார்ந்த புத்தகங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறோம். எங்கள் படிப்பகத்தின் வாசகர்கள் பொழுதுபோக்குக்காகப் படிக்க  வருபவர்கள் அல்ல; ஒவ்வொருவரும் சமூக அக்கறைகொண்டவர்கள். இவர்களை வைத்து நாங்கள் பல சுற்றுச்சூழல் போராட்டங்களையும் மேற்கொண்டு உள்ளோம். மாதந் தோறும் வாசகர் வட்டக் கூட்டம் நடக்கும். அதில், படிப்பக மேம்பாடு குறித்து விவாதிக்கப்படும். தைப் பொங்கல் மற்றும் தந்தை பெரியார் பிறந்த நாள் ஆகிய இரு தினங்களில் பள்ளி மாணவர்களுக்குக் கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி நடத்தி பரிசுகளும் வழங்குகிறோம்!'' என்கிறார் பெருமையுடன்.

பாராட்டுகள் பல்லாயிரம்!

- கி.ச.திலீபன்

பாட்டாளிகள் படிப்பகம்!