என் விகடன் - திருச்சி
என் விகடன் - சென்னை
என் விகடன் - மதுரை
என் விகடன் - புதுச்சேரி
Published:Updated:

எங்க அலப்பறைக்கு அளவே இல்லை!

வருத்தப்படாத வாலிபர் சங்கம், தர்மபுரி கிளை

##~##

ர்மபுரி மாவட்டம், நாகர்கூடல் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஊருக்குள் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ நடத்தி ஊரையே உண்டு, இல்லை என்று கலக்கிவருகிறார்கள்!

 காதல் வானில் சிறகு அடிக்கும் உள்ளூர் இளைஞர்கள் இவர்களிடம் சிக்கிவிட்டால், 'ஒய் பிளட்... சேம் பிளட்’ என்று கலாய்க்கிறார்கள். கூடவே, 'பெருசுங்க உங்களுக்காக மாடா உழைச்சுத் தேய்றாங்க. அந்தக் கஷ்டத்தை நினைச்சாவது ஒழுங்காப் படிக்கலாம் இல்ல... அதைவிட்டுட்டு காதல் பண்றீங்களே’ என்று  ஆன் தி ஸ்பாட் கவுன்சிலிங்கில் இறங்குகிறார்கள். ஆனால், காதல் சின்சியர் என்று தெரிந்தால் அடி, உதை வாங்கியாவது கல்யாணம் செய்து வைத்துவிடுகிறார்கள். இப்படி இதுவரை 20-க்கும் மேற்பட்ட காதல் ஜோடிகளை சேர்த்துவைத்து உள்ளார்கள்.

எங்க அலப்பறைக்கு அளவே இல்லை!

பள்ளி செல்ல அழுது அடம்பிடிக்கும் குழந் தைகளிடம் டான்ஸ் ஆடி சிரிக்கவைத்து பள்ளிக்குத் தூக்கிச் செல்வது, சின்னப் பசங்க ஓணானைக் கயிற்றில் கட்டி சித்ரவதை செய் தால், 'இந்த ஓணான் உடலுக்குள் இருப்பது உன்னோட கொள்ளுத் தாத்தா, பாட்டியோட உசுரு. அவங்களைப் போய் இப்படி கொடுமை பண்றீங்களே’ என்று கருணை லெக்சர் அடிப் பது, வயதானவர்களுக்காக குழாயடியில் தண்ணீர் பிடித்துத் தருவது, ரேஷன் கடை கியூவில் நின்று சாமான் வாங்கித் தருவது என தங்களால் முடிந்த சேவைகளைச் செய்கி றார்கள்.

எங்க அலப்பறைக்கு அளவே இல்லை!

ஆண்டுதோறும் உள்ளூர் அம்மன் திருவிழா நடக்கும்போது, 'உலகம் ஒரு நாடக மேடை, நடிக்கத் தெரிந்த நாமெல்லாம் சும்மா; நடிக்கத் தெரியாத ஒரே தெய்வம் மாரி அம்மா..!’ என்று எல்லாம் பஞ்ச் வசனங்களோடு ஃபிளெக்ஸ் பேனர்கள்வைத்து அசத்து வது இவர்களின் வழக்கம். சாலையில் காக்கைகள் இறந்துகிடந்தால், மனி தர்களைப்போலவே அந்தக் காக்கை யின் சடலத்துக்கும் சடங்கு நடத்தி பாடை கட்டி எடுத்துச் சென்று புதைக்கிறார்கள்.

அவ்வப்போது 'துபாய் ரிட்டன் வடிவேல்’ ஸ்டைலில் கலர்ஃபுல் சட்டைகள் அணிந்து ஊருக்குள் ரவுண்ட் அடிப்பது, இரவு நேரத்தில் கூலிங்கிளாஸ் கண்ணாடியோடு அலைவது என இவர்களின் அலப்பறை களால் ரணகளப்பட்டுக்கிடக்கிறது நாகர்கூடல் கிராமம். சங்கத் தலைவர் ரமணி மற்றும் துணைத் தலைவர் பச்சையப்பன் ஆகியோரிடம் பேசினோம்.

எங்க அலப்பறைக்கு அளவே இல்லை!

''ஆரம்பத்தில் அஞ்சு பேருடன் தொடங்குன சங்கத்தில் இப்போ 25 பேர் இருக்கோம். முன்னாடி ஊர்த் திருவிழா நேரத்தில் எங்களால் முடிஞ்ச நற்பணிகளை செஞ்சுட்டு இருந்தோம். 'வின்னர்’ படம் வந்தப்பதான் சங்கம் அமைக்கும் ஐடியா வந்தது. அப்புறம் சங்கத்தை முறைப்படி பதிவு செஞ்சோம்.  

நாங்க செய்யற விஷயங்கள் காமெடியா இருந்தாலும் அதன் மூலம் ஏதாவது ஒரு கருத்தை வலியுறுத்துறோம். உதாரணமா, செத்துவிழும் காகத்தை அடக்கம் செய்வதன் மூலமா நோய் பரவலைத் தடுப்பது குறித்து மெசேஜ் சொல்றோம். எங்க சொந்த முயற்சி யில் ஊரில் ஒரு சிவன் கோயில்கட்டிக் கொடுத்து இருக்கோம். அடுத்ததா வர்ற வருஷம் நல்ல மார்க் எடுக்குற குழந்தைகளைத் தேர்வு செஞ்சு அவங்க படிப்புச் செலவை ஏத்துக்கத் திட்டம் வெச்சிருக்கோம்!'' என்கிறார்கள்.

ஊருக்குள்ள யாரையும் வருத்தப்பட வைக்காதீங்க!  

- எஸ்.ராஜாசெல்லம், படங்கள்: எம்.தமிழ்ச்செல்வன்