என் விகடன் - திருச்சி
என் விகடன் - சென்னை
என் விகடன் - மதுரை
என் விகடன் - புதுச்சேரி
Published:Updated:

பதில் சொல்லு... கொண்டாடு!

பதில் சொல்லு... கொண்டாடு!

##~##

'என் விகடன்’ மற்றும் அரசன் சூப்பர் மார்க்கெட் இணைந்து நடத்திய 'என் கொண்டாட்ட விழா’ செப்டம்பர் 3, 4 தேதிகளில் திருநெல்வேலியில் அமர்க்களமாக நடந்து முடிந்தது.

 விகடன் குழும பத்திரிகைகளுக்கு ஆண்டு சந்தா எடுப்பவர்களுக்கு சந்தா தொகையில் 50 சதவிகிதம் மதிப்புக்கு அரசன் சூப்பர் மார்க்கெட்டில் பொருட்கள் வாங்கிச் செல்லலாம் என்கிற அதிரடி சலுகை அறிவிப்பால் அரசன் சூப்பர் மார்க்கெட்டில் காலையில் இருந்தே கூட்டம் அள்ளியது.  முதல் சந்தாவை, பேட்டையைச் சேர்ந்த பரணி செல்வகுமார் பதிவுசெய்தார். ''எனக்கு ஆனந்த விகடன் ரொம்பப் பிடிக்கும். அதில் வலைபாயுதே பகுதியை விரும்பிப் படிப்பேன். விகடன் விமர்சனம் படிச்சுட்டுதான் ஒரு படம் பார்க்கலாமா, வேண்டாமானு முடிவு பண்ணுவேன்!'' என்றார். ரெட்டியார்பட்டியைச் சேர்ந்த தாயப்பன், ''நான் பசுமை விகடன், ஜூனியர் விகடனை ரொம்ப வருஷமாகப் படிச்சுட்டு இருக்கேன். ஃபாஸ்ட் ஃபுட், செயற்கை உரம் போட்டு உருவாக்கப்படுற தானியங்களால் நமக்கு ஏற்படுற கேடுகளை படிச்சு தெரிஞ்சதும் அதிர்ச்சியா இருந்தது. இப்போ நானும் என் நண்பர்களும் இயற்கை விவசாயம் மூலம் விளைந்த காய்கறிகளைத்தான் சாப்பிடுறோம்!'' என்றார்.

பதில் சொல்லு... கொண்டாடு!

பாளையங்கோட்டை செல்வகுமார், ''இன்னும் நாலு வருஷத்தில் 'நானும் விகடனும்’ பகுதியில் நான் இடம் பிடிப்பேன்!'' என்றார்.

பதில் சொல்லு... கொண்டாடு!

வரதசடை கோபால் என்ற வாசகர், ''என் விகடன் சூப்பராக இருக்கு. அதுல வர்ற கூப்பன்களை நான் தவறாமப் பயன்படுத்துறேன். இன்னும் ரெண்டு பக்கம் ஜாஸ்தியாகூட கூப்பன் வெளியிடுங்க!'' என்றார். கோமதி மற்றும் ரேகா, ''விகடன் மேடை, பொக்கிஷம் பகுதிகள் அருமையா இருக்கு. என் விகடன் எல்லா ஊர் பெருமைகளை யும் அழகா எடுத்து சொல்லுது!''என்றார் கள் கோரஸாக.

ஹலோ எஃப்.எம். அறிவிப்பாளர் 'கூர்க்கா குருசிங்’ அற்புத ராஜ், ''விகடனில் வைரமுத்து எழுதும் தொடர் பெயர் என்ன?'' என்று கேட்க, ''மூன்றாம் உலகப் போர்!'' என்று சரியான பதில் கூறி பரிசைத் தட்டினார் ரேகா. ''இந்த வார என் விகடனில் 'என் ஊர்’ பகுதியில் பேசி இருக்கும் வி.ஐ.பி யார்?''  என்று ஆர்.ஜே. ஜெயகல்யாணி கேட்க, ''லீமா ரோஸ்!'' என்று சொல்லி பரிசு பெற்றர் கோமதி. ரஹ்மத் நகரைச் சேர்ந்த முகமதுக்கு வந்த கேள்வி,  ''ஜூனியர் விகடனில் வாசகர்களின் கேள்விக்குப் பதில் தருவது யார்?,'' ''கழுகார்'' என்று கில்லியாகப் பதில் சொல்லி பரிசு தட்டினார் முகமது. பாளையங்கோட்டை ரூஃபா, பாபநாசம் லதா,  சுரண்டை முனியசாமி,  டவுன் அலமேலு ஆகியோரும் சரியாகப் பதில் சொல்லி பரிசை தட்டினார்கள்.  இந்தச் சலுகை மேளாவில் கலந்துகொண்ட வாசகர்கள் அனைவரும் கை நிறைய பரிசுப் பொருட்களுடன், நீங்காத நினைவுகளுடனும் கிளம்பிச் சென்றார்கள்!  

- ஆண்டனி ராஜ், ஆ.கோமதிநாயகம், படங்கள்: எல்.ராஜேந்திரன், ஏ.சிதம்பரம்