மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அஞ்ஞானச் சிறுகதைகள் - 16

அஞ்ஞானச் சிறுகதைகள்
பிரீமியம் ஸ்டோரி
News
அஞ்ஞானச் சிறுகதைகள்

சந்தோஷ் நாராயணன்

''2015 மாடல். நான் பிறந்த ஆண்டில் தயாரிக்கப்பட்ட கம்ப்யூட்டர். இதுதான் குறைந்த விலைக்குக் கிடைத்தது. ஆப்பிள் மேக் எல்லாம் பணக்காரர்கள்தான் வாங்க முடியும்' என்றார் அப்பா, அந்தப் பழைய கம்ப்யூட்டரை அட்டைப்பெட்டியில் இருந்து எடுத்துவைத்தபடி. இப்போது அப்பாவுக்கு 40 வயது இருக்கும்.

அஞ்ஞானச் சிறுகதைகள் - 16

அம்மா சந்தோஷமாகப் பார்த்தாள். சின்னுவும் ரிஷாவும் கம்ப்யூட்டரை ஆசையாகத் தடவிப்பார்த்து சந்தோஷத்தில் குதித்தார்கள். அவர்களின் மெட்டல் உடைகள் சரசரத்தன. இரும்பு வாசனை அடிக்கும் அவர்கள் வீடு, எலெக்ட்ரானிக் குப்பைகளால் கட்டப்பட்டிருந்தது.

அம்மா சமையலை முடித்துவிட்டாள். சி.பி.யூவை உடைத்துச் சோறாக்கி இருந்தாள். மானிட்டரைச் சிதைத்து தூளாக்கி குழம்பும், மவுஸைப் பொடித்து பொரியலும் பண்ணியிருந்தாள். எஞ்சிய மதர்போர்டின் சில பாகங்களை ஊறுகாய் போடலாம் என எடுத்துவைத்துவிட்டாள். நெடுநாட்களுக்குப் பிறகு சாப்பிடப்போகும் உணவு. சின்னுவும் ரிஷாவும் சமையலின் உலோக வாசனையை முகர்ந்தபடி காத்திருந்தனர்.

அப்பா குளித்துவிட்டு டீசல் வாசனையுடன் வந்து உட்கார்ந்ததும் அம்மாவும் சின்னுவும் ரிஷாவும் கூடவே சேர்ந்துகொண்டனர். அகோரப் பசி. எலும்புகளை மெல்லும் சத்தத்துடன் அவர்கள் சாப்பிட ஆரம்பித்தார்கள். சிந்தட்டிக் சுவை தண்ணீரைக் குடித்தபடி அப்பா, பெரிய திரைகொண்ட டி.வியை ஆன் பண்ணினார்.

டி.வியில் பாடம் செய்யப்பட்ட மம்மிபோல ஓர் உருவத்தைக் காட்டி ஏதேதோ சொன்னார்கள். சின்னுவுக்குப் புரியவில்லை. அப்பாவைப் பார்த்தான். அவர் கண்களில் நீர் துளிர்த்தது.

'அது என்னப்பா?' என்றான் சின்னு.

'சில வருடங்களுக்கு முன்பு இறந்துபோன இந்தியாவின் கடைசி விவசாயி' என்றார் அப்பா!

ஷாட் அண்ட் ஸ்வீட் ஃலிம்

மிழ்நாட்டில் இப்போது தடுக்கி விழுந்தீர்கள் என்றால், தூக்கிவிடும் ரெண்டு பேரில் ஒருவர் ஷார்ட் ஃபிலிம் மேக்கராக இருக்கச் சாத்தியம் உண்டு. தமிழ்நாட்டின் இடம், வலம், மேல், கீழ் என எங்கு திரும்பினாலும் கேமராவும் கையுமாகக் கோணம் வைத்துத் திரிகிறார்கள்.

கெளதம் மேனனுக்கே கண்ணு வேர்க்கிற மாதிரி காதல் படங்களாக எடுத்து

அஞ்ஞானச் சிறுகதைகள் - 16

கம்மிங் சூன்' என ஃபேஸ்புக்கில் போஸ்டர் போடுகிறார்கள். ஹரி பட ரேஞ்சுக்கு அரிபரி ஆக்‌ஷன் கட் பண்ணி யூடியூபில் டீஸர் விடுகிறார்கள். ’குறும்படத்துக்கு என ஓர் அழகியல் இல்லையா?' என அறிவுஜீவித்தனமாகக் கேட்டால், கோடம்பாக்கத்துக்கான ஷார்ட்கட் இது என நோஸ்கட் பண்ணுகிறார்கள்.

அஞ்ஞானச் சிறுகதைகள் - 16

கேட்டரிங் படித்த என் நண்பன் ஒருவனிடம் கேட்டபோது, ஒரு கிச்சன் ரெசிப்பி போல ஷார்ட் ஃபிலிம் மேக்கிங் பற்றி ஷார்ட் நோட் கொடுத்தான். அது கீழே.

ஷார்ட் ஃபிலிம் சமையல் குறிப்பு:

தேவையான பொருட்கள்

ஸ்கிரிப்ட்  சொந்தமாகப் பிசைந்தது அல்லது பிரபல எழுத்தாளர்களின் கதையின் தழுவல் – 1

ஹீரோ  நடிக்கத் தெரியணும் என்பது அவசியம் இல்லை. அப்டியே ரூட் பிடித்து கோடம்பாக்கத்தில் என்ட்ரி போடும் வெறி, கண்களில் இருந்தால் போதுமானது 1 ஹீரோயின்  கல்லூரி மாணவியாக இருத்தல் நலம். வி.டி.வி ஜெஸ்ஸியாக தன்னை ஃபீல் பண்ணும் கேர்ள்ஸாகத் தேடி எடுக்கவும்  2 கேமரா (சின்னது)   5டி அல்லது வேற ஏதாவது ஒரு டி. கேமராமேனையும் சேர்த்து  1 லொக்கேஷன்  கெஞ்சியோ மிஞ்சியோ பெர்மிஷன் வாங்கின நண்பனின் வீடு, சாலை, கடற்கரை இன்னபிற...

அஞ்ஞானச் சிறுகதைகள் - 16

துணை நடிகர்கள்  தேவைக்கு ஏற்ப‌

இசைத் துண்டுகள் – து(உ)ருவியது

செய்முறை:

கேமராவை ஆன் பண்ணி ஆங்கிள் செட் செய்யவும். கேமராமேனிடம் அதிகமாக வாக்குவாதம் செய்து சூடு அதிகப்படுத்த வேண்டாம். ஓவர் எக்ஸ்போஸ் ஆகி ஃப்ரேம்கள்

அஞ்ஞானச் சிறுகதைகள் - 16

ஸர்ஃப் எக்ஸெல்’லில் வெள்ளாவி வைத்தது போல ஆகிவிட வாய்ப்பு உண்டு.  சினிமா ஆசை என்னும் வெந்நீரைக் கொட்டி நன்றாகப் பிசைந்துவைக்கப்பட்ட ஸ்கிரிப்ட்டை இதமான சூட்டில் வேகவிடவும்.

அஞ்ஞானச் சிறுகதைகள் - 16

பெரிய ஆக்டரா வருவ மச்சான்' என வாக்கு கொடுத்திருக்கிற ஹீரோவை (அவர் பட்ஜெட்டில் பாதியைத் தாங்கிக்கொள்வார் என கேரன்ட்டி கொடுத்திருக்கும்பட்சத்தில்) கதைக்கு ஏற்றமாதிரி கலாட்டாவாக அறிமுகம் செய்யவும். கூந்தல் காற்றில் பறக்க, ஹீரோயினை கதிர் படங்களில் வருவதுபோலவே சாலையில் நடக்கவிடவும். ஏற்கெனவே தேர்ந்தெடுத்து வைத்திருந்த லொக்கேஷன்களில் (ஒரு காபி ஷாப்பாவது லொக்கேஷனில் இருப்பது நல்லது.) கதையை மெள்ள மெள்ள நகர்த்தி எல்லாவற்றையும் கொதிக்கும் ஸ்கிரிப்ட்டில் கொட்டவும். அசிஸ்டன்ட் டைரக்டர் அசிஸ்டன்ட் கேமராமேன் போன்ற டூயல் ரோல் செய்யும் துணை நடிகர்களைத் தேவைக்கு ஏற்ப சேர்த்துக்கொள்ளவும். நெய்யில் வறுத்துவைத்திருந்த வசனங்களை காரசாரமாகச் சேர்க்கவும். க்ளைமாக்ஸில் எதிர்பாரா திருப்பத்தை வைத்து அடுப்பை அணைத்துவிடவும். இறக்கும்போது எற்கெனவே

து(உ)ருவி வைத்திருந்த இசைத் துணுக்குகளை ஆங்காங்கே தூவிவிடவும். சுவையான ஷார்ட் ஃபிலிம் தயார். யூடியூப் எனும் தட்டில் ஆறவைத்து, ஃபேஸ்புக்கில் பரிமாறலாம்.

சிவப்பு முக்கோணம்

’உலக விஷுவல்கள் எல்லாம் பார்க்கிறோம். கொஞ்சம் உள்ளூர் மேட்டரிலும் கவனம் செலுத்தினால் என்ன?' எனத் தோன்றியது. 'நாம் இருவர் நமக்கு இருவர்’  இந்த வாசகத்தை, 80களில் கேட்காத, படிக்காத யாரும் இருந்திருக்க மாட்டார்கள்.

சிறுவனாக இருந்தபோது மஞ்சள் நிறப் பின்புலத்தில் கறுப்பு வண்ணத்தில் திருத்தமாக வரைந்திருக்கும் அம்மா  அப்பா  குழந்தைகள் முகங்கள் போட்ட அரசு விளம்பரங்களை, அரசு மருத்துவமனைகளிலும் சாலையோர சுவர்களிலும் ஆர்வமாகப் பார்த்திருக்கிறேன். அவை, நமது சிறு வயது ஞாபகங்களில் ஒன்றாகப் பதிந்துபோன விஷுவல்கள்.

அஞ்ஞானச் சிறுகதைகள் - 16

அரசு விளம்பரங்கள் பெரும்பாலும் ஏன் மஞ்சள் நிறத்தில் இருக்கின்றன என, காட்சித் தொடர்பியல் படிக்கும்போதுதான் தெரிந்துகொண்டேன். மஞ்சள் வண்ணம் அதிக அலைநீளம் (560 முதல் 590 நானோ மீட்டர்கள்) கொண்டது. அதிக தூரத்துக்குப் பார்வையில் படுகிற வண்ணங்களில் ஒன்று. அந்த விளம்பரங்களில் என்னைக் கவரும் இன்னோர் அம்சம், நல்ல சிவப்பு கலரில் வரையப்பட்ட முக்கோணம்.

அந்த முக்கோண லோகோவை வடிவமைத்தவர் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த டீப் தியாகி என அழைக்கப்பட்ட தர்மேந்திர குமார் தியாகி. இவர், நேரு, லால் பகதூர் சாஸ்திரி காலத்தில் இருந்து இந்திரா காந்தி காலம் வரை குடும்பக் கட்டுப்பாட்டு உதவி ஆணையராக இருந்தவர்; சிறந்த வடிவமைப்பு திறன் படைத்தவர்.

சரி... ஏன் முக்கோணம்? அதுவும் தலைகீழாக! பரந்த மேல் பக்கத்தில் இருந்து கீழே குறுகியபடி போகிறது அல்லவா... அது மக்கள்தொகையைக் குறைப்பதன் குறியீடு என்கிறார்கள் டிசைன் வல்லுநர்கள்.

டீப் தியாகியின் நினைவாக ஆரம்பிக்கப்பட்ட ’டி.கே.டி இன்டர்நேஷனல்' எனும் உலகளாவிய மக்கள்தொகை கட்டுப்பாட்டு அமைப்பு டீப் தியாகியை, ’அந்தக் காலத்தில் படிப்பறிவு இல்லாத எளிய மக்களும் புரிந்துகொள்ளும் படியாக விளம்பரங்களை வடிவமைத்த முன்னோடி' எனப் புகழ்கிறது.  

இன்று இந்த முக்கோண லோகோ, எகிப்து முதல் ஆஸ்திரேலியா வரை பல உலக நாடுகளின்

அஞ்ஞானச் சிறுகதைகள் - 16

குடும்பக் கட்டுபாட்டுச் சின்னமாக விளங்குகிறது.

நடுத்தர வயதில் மறைந்த டீப் தியாகிக்கு, குழந்தைகளே இல்லை. என்ன மாதியான கடவுளின் டிசைன் இது?

’’வொர்க் லைஃப் பேலன்ஸ்'னு புதுசா ஒரு டேர்ம் அடிக்கடி காதுல விழுது. எட்டு மணி நேரத்துல வொர்க் முடிச்சா, லைஃப் அதுவா பேலன்ஸ் ஆகிடும் மக்களே'' என்றான் கார்ப்பரேட் சித்தன்!