மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அஞ்ஞானச் சிறுகதைகள் - 14

அஞ்ஞானச் சிறுகதைகள்
பிரீமியம் ஸ்டோரி
News
அஞ்ஞானச் சிறுகதைகள்

சந்தோஷ் நாராயணன்

''வேலைக்குனு வெளியேபோன ஆயிரக்கணக்கான பேர், வீடு திரும்பும் பாதையை மறந்து தெருவுல சுத்துறாங்க; கூட்டம் கூட்டமா தற்கொலை பண்ணிக்கிறாங்க. எனக்குப் பிரதமருக்குப் பதில் சொல்லியாகணும்' - அரசு தலைமை விஞ்ஞானி அனில் மிட்டல், ஆவேசமாகக் கத்தினார்.

அஞ்ஞானச் சிறுகதைகள் - 14

இளம் ஆராய்ச்சியாளர் பார்த்தி எழுந்து, 'வெவ்வேறு இடங்களில் இருந்து ரிப்போர்ட் வந்திருக்கு சார். கோடிக்கணக்கான தேனீக்கள் செல்போன் டவர் ரேடியோ டிரான்ஸ்மீட்டர்கள் மீது அப்பிக்கொண்டு, தாங்கள் ரீங்கரிக்கும் ஃப்ரீக்வன்ஸியை செல்போன் ரேடியோ ஃப்ரீக்வன்ஸியில கலந்துட்டே இருக்கு. அது செல்போன் உபயோகிக்கிறவங்க மூளையில ஊடுருவி, அவங்க வீடு திரும்பும் பாதைகள் எல்லாம் மறந்து, திசை தவறி... ஒரே குழப்பம். இவ்வளவு தேனீக்கள் எங்கே இருந்து வருதுனு கண்டுபிடிக்க முடியலை சார்' - நிறுத்தாமல் பேசினான்.

'புல்ஷிட். என்ன விளையாடுறீங்களா?' எனக் கத்திய அனில் மிட்டல், ஜன்னலை நோக்கி எதேச்சையாகத் திரும்பினார். அங்கே தூரத்தில் கருமேகம் ஒன்று தாழ்வாகப் பறந்து

அஞ்ஞானச் சிறுகதைகள் - 14

வருவதுபோல மங்கலாகத் தெரிந்தது. ரீங்கரிக்கும் சத்தம் மெள்ள அதிகரித்தபடி இருந்தது!

''ரெஸிஷன்' எனச் சோக பொசிஷன் காட்டினார் பாஸ்.

''பாஸு... மார்க்கெட் நல்லா இருக்கும்போது உன் புராஃபிட்ல நான் கையை வெச்சேனா? மார்க்கெட் டல்லா இருக்கும்போது மட்டும் ஏன்பா என் சம்பளத்துல கையை வெக்கிற?'' என்றான் கார்ப்பரேட் சித்தன்.

யாரோ !

ஹைக்கூ என்பது கிட்டத்தட்ட (நம்மூரில்) வழக்கொழிந்துவிட்டதா? ஜப்பானியர்கள் இன்னும் எழுதிக்கொண்டுதான் இருப்பார்கள்போலும். அது அவர்களின் வாழ்க்கையுடன் நூடுல்ஸாகப் பின்னிப்பிணைந்துவிட்ட ஒன்று என நினைக்கிறேன்.

அஞ்ஞானச் சிறுகதைகள் - 14

ஏன் ஹைக்கூ கதைவிடுகிறேன் என்றால், வருகிற ஞாயிற்றுக்கிழமை சுஜாதா பிறந்த நாள். சுஜாதாவுக்கு ஹைக்கூ மீது ஒரு பிரத்யேக பிரியம் இருந்தது. 'கணையாழியின் கடைசிப் பக்கங்கள்’ முதல் 'கற்றதும் பெற்றதும்’ வரை ஹைக்கூவைப் பற்றி பேசி நிறைய உசுப்பேற்றியவர். அதை சற்றே சீரியஸான ஒரு கலை வடிவமாகப் பார்த்து, நல்ல ஹைக்கூக்கள் தமிழில் வரவேண்டும் என நினைத்திருக்கிறார்.

ஆனால் நம் ஆட்கள், வழக்கம்போல பயாலஜி பரீட்சையில் தவளைகளை ஆணியில் அறைந்து ஆபரேஷன் பண்ணுவதுபோல ஹைக்கூவைத் தமாஷாக்கிவிட்டார்கள். நம்மவர்கள், புதுசாக எது கையில் கிடைத்தாலும் கொஞ்சம் ஓவர்டோஸாகப் பயன்படுத்திவிடுவார்கள்தானே?! ஈஸ்ட்மென் கலர் வந்தபோது பிங்க் கலரில்கூட பேன்ட் போட்டு டூயட் பாடிய ஹீரோக்கள் முதல், சமீபத்தில் ஸ்டெடிகேம் வந்தபோது முகத்துக்கு நேராக வைத்து கேமராவை இடுப்பில் கட்டிக்கொண்டு முட்டுச்சந்துகளில் ஓடும் ஹீரோக்கள் வரை பார்த்திருக்கிறோம். சினிமாவில் மட்டும் அல்ல... கலை, இலக்கியம், டெக்னாலஜி எல்லாவற்றிலும் இப்படித்தான். அந்த நிலைமைதான் ஹைக்கூவுக்கும்!

மூன்று வரியில் 17 சொற்கள் முதல், எதுகை மோனை இல்லாமல் எழுதுவது வரை ஹைக்கூவுக்கு என தனி ரூல்ஸ் நோட்டே இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், 'பிரேக் தி ரூல்ஸ்’ என்றபடி நம்மூர் வாராந்திர ஹைக்கூ மேக்கர்கள், விதிகளை உடைத்து கூடவே வாக்கியங்களையும் உடைத்து எழுதினால் ஹைக்கூவாகிவிடும் என நம்பிவிட்டார்கள். இப்போதும் பழக்கதோஷத்தில் ஹைக்கூ எனும் பெயரில் நாயடி பேயடி அடித்துக்கொண்டிருக்கிறார்கள். நவீனக் கவிதைக்காரர்களோ போன்சாய்போல இருந்த ஹைக்கூவைக் கண்டுகொண்டதே இல்லை. விளைவு ஹைக்கூவுக்குக் கிட்டத்தட்ட பாடியாயிற்று இரங்கற்பா.

அஞ்ஞானச் சிறுகதைகள் - 14

நண்பர் நவீன பாணன் இந்த வருத்தத்தையும் ஒரு ஹைக்கூவாகவே எழுதி அனுப்பினார்.

சின்ன குருவியோ என்று பார்த்தால்

செத்துக்கிடந்தது ஒரு ஹைக்கூ.

கொலையாளி யாரோ!

இதைக் கண்டுபிடிக்க என்ன, கணேஷ் - வசந்தா வரவேண்டும்? 'நம் பேனாவில் ஒழுகுவது மையா, ஹைக்கூவின் தக்காளிச் சட்னியா?’ என நமக்குத் தெரியாதா?

அமுல் பேபி..!

அஞ்ஞானச் சிறுகதைகள் - 14

'அமுல் பேபி..!’ எனக் கிண்டல்செய்வதை எல்லோரும் கேட்டிருப்போம். காரணம், அமுல் வெண்ணெய் விளம்பரங்களில் வரும் உருண்டை முகமும் முட்டைக் கண்களும் உப்பியக் கன்னங்களோடு புள்ளிகள் இட்ட சட்டை அணிந்த குட்டிப் பெண்.

சென்னை காயிதே மில்லத் கல்லூரி சாலையில் முன்பு அமுல் விளம்பரப் பலகைகள் இருந்தபோது, பலர் அதைக் கவனித்திருக்கலாம். அரசியல், சினிமா, கிரிக்கெட்,  பண்டிகைகள்... என எல்லா விஷயங்களையும் கிண்டலடிக்கும் அந்த விளம்பரங்களின் வெற்றி, அமுல் பேபியை இந்தியாவின் விஷ§வல் அடையாளங்களில் ஒன்றாக மாற்றிவிட்டது.

1945-ம் ஆண்டு சந்தைக்கு வந்த அமுல், கிட்டத்தட்ட 1967-ம் ஆண்டு வரை வழக்கமான விளம்பர உத்திகளையே கையாண்டு வந்தது. உணவுப்பொருட்களை வாங்குவதில் முக்கிய முடிவுகளை எடுப்பது இந்தியாவைப் பொறுத்தவரை இல்லத்தரசிகள்தான். எனவே, அவர்களுக்குப் பிடித்தமான குழந்தைக் கதாபாத்திரமாக உருவாக்கப்பட்டவள்தான் இந்த 'அமுல் பேபி’ என அழைக்கப்படும் 'அட்டர்லி பட்டர்லி குட்டிப் பெண்’.

ஈஸ்டஸ் ஃபெர்னாண்டஸ்தான் இந்தக் குட்டிப் பெண்ணின் தந்தை. அதாவது அவளை வரைந்தவர். இவர் 2010-ம் ஆண்டு மறைந்தபோது இந்திய விளம்பர உலகமே ஒரு ஜீனியஸை இழந்த சோகத்தில் ஆழ்ந்தது.

அஞ்ஞானச் சிறுகதைகள் - 14

1960-ம் ஆண்டுகளின் பிற்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த விளம்பர வரிசை, அன்று முதல் இன்று வரை இந்தியாவில் நடந்த முக்கியமான நிகழ்வுகளின் நகைச்சுவை ஆவணமாகத்

அஞ்ஞானச் சிறுகதைகள் - 14

திகழ்கிறது. இந்தியன் ஏர்லைன்ஸ், சிவசேனா, மம்தா பானர்ஜி முதல் சுரேஷ் கல்மாடி வரை அரசியல் கார்ட்டூன்களுக்கு நிகராகக் கிண்டலும் விமர்சனமும்கொண்ட அமுல் பேபி விளம்பரங்கள் அட்டகாசம். சத்யம் கம்ப்யூட்டர்ஸ் ஊழலை காமெடி பண்ணியதால், அதன் ஊழியர்கள் 'இனி அமுல் பட்டரை சாப்பிட மாட்டோம்’ என 'சத்யம்’ செய்த ட்ராஜெடி எல்லாம் நடந்திருக்கிறதாம்!