Published:Updated:

புகை ருசி

கவிதை: தென்பாண்டியன்

வன் பிச்சைக்காரனா... 

பைத்தியக்காரனா எனத்

தெரியவில்லை.

விரல் இரண்டை

கத்தரிபோல் உதட்டில் வைத்து

பாவனை காட்டி

பீடி வாங்க வேண்டும் எனக்

கையேந்தினான்.

புகை ருசி

வழக்கம்போல்

பாக்கெட்டைப் பிதுக்கிக் காட்டி

சில்லறை இல்லை எனச்

சொல்லத் தோன்றவில்லை எனக்கு!