Published:Updated:

ஆண்

கவிதை: ராஜேஷ் சுந்தர்ராஜன் படம்: சி.சுரேஷ் பாபு

ரிதாய் நான் கொடுத்த வசையில் 

காயமுற்ற இளைய மகவு

கைகளைக் கட்டியவாறு

சுவரின் மூலையில் நின்று

கண்ணீரால் அறையை நிரப்பினாள்.

தேற்ற எவரும் வாராது

மெள்ள நகர்ந்து

ஆண்

என் முதுகை உராய்ந்தபடி தொடர்ந்தது

அழுகைப் புராணத்து இரண்டாம் பாகம்.

சற்று மிகுந்த ஒலியுடனே

வேறேதும் வழியின்றி அள்ளி அணைத்து

அம்மாவைக் கடிந்தபடி தொடங்கியது

என் சமாதானப் படலம்.