Published:Updated:

என்னங்க விசேஷம் ?

நா.சிபிச்சக்கரவர்த்தி, பா.ஜான்ஸன் படங்கள்: எம்.உசேன், பா.கார்த்தி

மூக வலைதளங்களில் மட்டுமல்லாது 'நிகழ் தளத்திலும்’ டிரெண்டிங் அடிக்கும் சிலரிடம் 'வாட்ஸ்அப்’ என விசாரித்தோம்... 

''நேரம் மிச்சம்... நண்பர்கள் எக்கச்சக்கம்!''

ஆன்லைனை ஆஃப்லைனுடன் கச்சிதமாகக் கலக்குகிறார் சன் மியூசிக் அஞ்சனா. 'இன்னைக்கு நிகழ்ச்சியில் என்ன பேசலாம்... என்ன கலர் டிரெஸ் போட்டுக்கலாம்... இந்த டாப்பிக் பத்தி டிப்ஸ் கொடுங்க’ என்றெல்லாம் ட்விட்டரில் விசாரித்து தன் ரசிகர்களுக்கு 'நண்பேண்டா’வாக இருக்கிறார். ''நான் செலிபிரிட்டினு சும்மா சீன் போடப் பண்ணலை. ஃபேஸ்புக்ல போட்டோஸ் அப்டேட் பண்ண எனக்குப் பிடிக்கும். ஆனா, சிலர் அதை மிஸ்யூஸ் பண்ணாங்க. அதான் ட்விட்டருக்குத் தாவிட்டேன். அங்கே  ஆரோக்கியமான சாட்டிங் நடக்குது. மணிக்கணக்கா செலவழிச்சு நான் தெரிஞ்சுக்கவேண்டிய சில விஷயங்களை அங்கே போற போக்குல சிலர் சொல்லிடுறாங்க. நேரம் மிச்சம்.. நண்பர்களோ எக்கச்சக்கம். அதனால, அஞ்சனா ஹேப்பி பாஸ்!''

என்னங்க விசேஷம் ?

''இனி அப்படிச் சொல்லாதீங்க... ப்ளீஸ்!''

'' 'சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியில் இருந்து விலகிட்டீங்களே... என்ன மேடம் இப்படிப் பண்ணிட்டீங்க?'' என லட்சுமி ராமகிருஷ்ணனிடம் கேட்டால், ''ப்ளீஸ்... இனிமே 'என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா?’னு கிண்டல் பண்ணாதீங்க. அந்த டயலாக் நான் எந்தச் சூழ்நிலையில் சொன்னேன்னு தெரிஞ்சா, நீங்களும் சொல்ல மாட்டீங்க. ஒரு அப்பாவிப் பொண்ணுக்கு ஒருத்தன் எட்டு முறை குழந்தை உண்டாக்கிட்டு கருக்கலைப்பு

செஞ்சிருக்கான். அதை நிகழ்ச்சியில் கேட்டப்போ வேதனையிலும் இயலாமையிலும், 'என்னம்மா இப்படிப் பண்றீங்களேமா?’னு ஆதங்கத்துல சொன்னேன். அதைப் பிடிச்சுட்டு ஜாலி கலாட்டா பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. என் நிலைமையில் இருந்தாதான், அந்த வார்த்தைகள் எவ்வளவு வேதனையான மனநிலையில் வெளிப்பட்டதுனு உங்களுக்குப் புரியும். அதனால இனி அப்படிச் சொல்லி யாரையும் கிண்டல் பண்ணாதீங்க... ப்ளீஸ். சரி... இப்போ நான் ஏன் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்தேனு சொல்றேன்.

என்னங்க விசேஷம் ?

நிகழ்ச்சியில் கலந்துக்கிட்ட ஒரு மோசமான பையன், போன்ல எனக்கு கொலைமிரட்டல் விடுத்தான். நான் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்குப் போய் புகார் கொடுத்தேன். உடனே நிகழ்ச்சியின் இயக்குநர், 'அந்த ஷோவுக்கே நீங்கதான் நெகட்டிவ். உங்களுக்கு என்ன தெரியும்?’ அது, இதுனு வாய்க்கு வந்ததைப் பேச ஆரம்பிச்சுட்டார். அப்பவே அந்த நிகழ்ச்சியில் இருந்து நான் விலகியிருக்க வேண்டியது. ஆனா, சேனல் தரப்பில் இருந்து சமாதானம் பண்ணாங்க. ஆறு மாசம் நிகழ்ச்சியை நடத்திட்டு இருந்தேன். சமீபத்துல, 'என் பொண்ணு அமெரிக்காவில் இருக்காங்க. அவங்களைப் பார்க்க அமெரிக்கா போறேன். ஒரு மாசம் நான் இல்லாதப்பவும் ஒளிபரப்புற அளவுக்கு நிகழ்ச்சியை ஷூட் பண்ணி வெச்சுக்கங்க’னு நான் இயக்குநரிடம் மூணு மாசத்துக்கு முன்னாடியே சொல்லிட்டேன். 'எடுத்துவெச்சுட்டோம்... எடுத்துவெச்சுட்டோம்’னு அவர் சொல்லிட்டே இருந்தார். ஆனா, கடைசி வரை ஒரு எபிசோடுகூட முன்கூட்டியே ஷூட் பண்ணலை. திடீர்னு, 'நீங்க அமெரிக்கா போகக் கூடாது. நிகழ்ச்சியை நடத்திக் கொடுங்க’னு சொன்னாங்க. நான் 'முடியாது’னு சொல்லிட்டேன். இதுக்கு மேலயும் அமைதியா இருக்க வேண்டாம்னு நிகழ்ச்சியில் இருந்து விலகிட்டேன். நான் இருந்த வரை நிகழ்ச்சியை நல்லா நடத்தினேன். அந்த சந்தோஷம் போதும் எனக்கு!''  

''மெலடிதான் நிக்கும்!''

'நீ என்ன பெரிய அப்பாடக்கரா?’, 'டண்டணக்கா...’, 'என்னம்மா இப்பிடிப் பண்றீங்களேம்மா...’ என சீஸனுக்கு ஒரு சிக்ஸர் அடித்துவிடுகிறார் இசையமைப்பாளர் டி.இமான். எப்படி இப்படி?

என்னங்க விசேஷம் ?

''ஃபேஸ்புக், ட்விட்டர்னு எப்பவும் ஆக்டிவ்வா இருப்பேன். அதான் அப்பப்போ என்ன ஸ்பெஷல்னு தெரிஞ்சு ஒரு பாட்டு கொடுத்துருவேன்.  இதெல்லாம் சீஸன் மிக்ஸர். அப்போதைக்கு ஹிட்டாகும். எப்பவும் நமக்கு அடையாளமா இருக்கிறது மெலடி மெட்டுக்கள்தான். மியூசிக் பண்ண ஆரம்பிச்சு 13 வருஷம் ஆகுது. இப்பத்தான் ரொம்பத் தயங்கித் தயங்கி மலேசியாவில் ஒரு கான்சர்ட் பண்ணினேன். மூன்றரை மணி நேர நிகழ்ச்சி முழுக்க எல்லாப் பாடல்களையும் ரசிச்சாங்க. ரொம்ப சந்தோஷமா இருந்தது. இனி உள்ளூர்ல வருஷத்துக்கு ஒரு நிகழ்ச்சி பண்ணலாம்னு ஐடியா. அப்புறம் இன்னொரு விஷயம்... இப்போ சந்தோஷ் நாராயணன், ஜிப்ரான், அனிருத் பாடல்கள் நல்லா இருக்கு. அவங்க பாடல்களை மிஸ் பண்ணாமக் கேட்டுட்டே இருக்கேன். பக்கத்து கடைகள்லயும் என்ன ஸ்பெஷல்னு தெரிஞ்சுக்கணும்ல!''

பெல்லி பாய்!

இசைக் கலைஞர், ரேடியோ ஜாக்கி என வலம் வந்த 'தர்புகா’ சிவா, 'ராஜதந்திரம்’ படத்தில் காமெடியனாகவும் பளிச் ஸ்டாம்ப் அடித்தார்.

என்னங்க விசேஷம் ?

''சென்னை அவுட்டர் கொளத்தூர்தான் என் ஊர். கல்லூரியில் சேர்ந்த பிறகுதான் டிரம்ஸ் ஸ்டிக்கைக் கையில் எடுத்தேன். 'ழ பொங்கல்’னு ஃபோக் ஷோ ஒண்ணு பண்ணினபோது, மிர்ச்சி சிவா பழக்கமானார். அவரும் நானும் பண்ண ஒரு ஷோவுக்கு செமத்தியான க்ளாப்ஸ். அப்படியே ஆர்.ஜே ஆகிட்டேன். அப்புறம் எங்கேயோ இந்த முகத்தைப் பார்த்து 'ராஜதந்திரம்’ வாய்ப்பு வந்தது. 'சினிமாதானே... புதுசா இருக்கும். ட்ரை பண்ணுவோம்’னு தோணுச்சு. அங்கேயும் 'வெரி குட்’ வாங்கிட்டேன்!''

''அதென்ன பேருக்கு முன்னாடி தர்புகா?''

''தர்புகாங்கிறது தபேலா மாதிரி எகிப்துல ஒரு வாத்தியக் கருவி. பெல்லி டான்ஸ் ஆடும்போது பயன்படுத்துவாங்க. 'மிர்ச்சி’யில் ஏற்கெனவே ஒரு சிவா இருந்ததால, என் பேரோடு 'தர்புகா’ சேர்த்துக்கிட்டேன். ஆனா, இப்போ என் பேரை மறந்துட்டு 'தர்புகா’னு மட்டுமே கூப்பிடுறாங்க. உங்களை யாராவது 'ஏய் தபேலா... இங்கே வா’னு கூப்பிட்டா எப்படி இருக்கும்? அப்படி இருக்கு எனக்கு!''

'வாடா... வாடா... பன்னி மூஞ்சி வாயா!’

தியேட்டர் முதல் மீம்ஸ் வரை 'பன்னி மூஞ்சி வாயா...’ யோகி பாபு தெறி ஹிட்! யாரு பாஸ் நீங்க? ''அப்பா ஆர்மி மேன். அதனால எனக்கும் ஆர்மி ஆர்வம். ஜிம்முக்குப் போய் உடம்பை கும்முனு வெச்சிருந்தேன். ஃபுட்பால் ப்ளேயரும்கூட. ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் ஏதாவது வேலைக்குச் சேர்ந்திரலாம்னு இருந்தேன். ப்ச்... கிடைக்கலை. ஒருநாள் 'லொள்ளு சபா’ ஷூட்டிங் ஸ்பாட்ல வேடிக்கை பார்த்துட்டு இருந்தப்போ என்னைப் பார்த்த ராம்பாலா சார், 'பார்க்கவே வித்தியாசமா இருக்கானே’னு என்னையும் நடிக்கவெச்சார். அந்த டீம் உடைஞ்ச பிறகு, சினிமா வாய்ப்பு தேடினேன். அமீர் அண்ணன் நடிச்ச 'யோகி’ படத்துல நடிக்கும் வாய்ப்பு கிடைச்சது. அதான் 'யோகி’ பாபுனு பேரு!''

என்னங்க விசேஷம் ?

''எப்படி இப்படி ஹேர்ஸ்டைல் பிடிச்சீங்க?''

''பொறந்ததுல இருந்தே முடி இப்பிடித்தாங்க. சுந்தர்.சி சார்கூட, 'தலைக்கு என்னடா போடுற?’னு ஆச்சர்யமா கேட்டார். 'ஷாம்பு’ன்னேன்.  'அதெல்லாம் போட்டா முடி கொட்டிரும்டா. ஹேர்ஸ்டைல்தான் உனக்கு ப்ளஸ். பத்திரமா பார்த்துக்கோ’ன்னார்!''

''எல்லாரும் 'பன்னி மூஞ்சி வாயா’னு சொல்றப்ப, உங்களுக்கு எப்படி இருக்கும்?''

''திட்டுற மாதிரி இருக்கும்னு நினைச்சுதான் 'யாமிருக்க பயமே’ படத்துல முதல்ல நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டேன். அப்புறம் அஞ்சு நிமிஷ சீன்தானேனு நினைச்சு நடிச்சேன். ஆனா, அது தீயா பத்திக்கிச்சு. இப்போ மா.கா.பா அண்ணன் அவர் மொபைல்ல ஒரு வீடியோ காமிச்சார். அவர் பையன் சாப்பிட அடம் பிடிக்கிறான். உடனே இவர், 'நீ இப்போ சாப்பிடலை... 'பன்னி மூஞ்சி வாய’னை வரச் சொல்லி பிடிச்சுக் கொடுத்துருவேன்’னு சொல்றார். உடனே பையன் அலறியடிச்சுட்டு சாப்பிடுறான். சிட்டி, பட்டி, குழந்தைக் குட்டி வரை ஃபேமஸான சந்தோஷம் எனக்கு!''  

பல்பு வாங்கலியோ... பல்பு!  

வீட்டுக் கடைக்குட்டி போல செட்டில் செம சேட்டைக் குட்டியாக இருக்கிறார் 'சூப்பர் சிங்கர்’ காம்பியர் பிரியங்கா. மொக்கை போடாமல் பல்பு வாங்கிக் கொண்டே இருப்பது பிரியங்கா பாலிசி!

''லைஃப்லயே நிறைய பல்பு வாங்கியிருக்கேன்.  காலேஜ்ல பி.பி.ஏ சேரணும்னு அப்ளிகேஷன் கேட்டப்ப, 'விஸ்காம்’ விண்ணப்பம் கொடுத்துட்டாங்க. நானும் அதைக் கவனிக்காம நிரப்பிக் கொடுத்துட்டேன். பார்த்தா என்னை முதல் ஆளா தேர்ந்தெடுத்துட்டாங்க. 'கடவுள் நாம விஸ்காம் படிக்கணும்னு விரும்புறார்’னு மனசைத் தேத்திக்கிட்டு படிச்சேன். அப்புறம் ரேடியோ மிர்ச்சி மூலமா மா.கா.பா.ஆனந்த் அறிமுகம் கிடைச்சு... அவர் மூலமா விஜய் டி.வி-யில் ஷோ பண்ண ஆரம்பிச்சேன். சினிமாவுக்கும் கூப்பிட்டாங்க. 'சேனலே போதும்’னு சொல்லிட்டேன்!''

''நிகழ்ச்சி முழுக்க யாராவது உங்களைக் கலாய்ச்சுட்டே இருக்காங்களே?''

''அப்பிடி இருந்தாதானே நிகழ்ச்சி கலகலப்பா இருக்கும். அதுவும் மா.கா.பா அண்ணன் என்ன சொன்னாலும் எனக்கு தப்பாவே தோணாது. ஏன்னா, என்னைக் காயப்படுத்தணும்னு நினைச்சு எதுவும் சொல்ல மாட்டார். வேணும்னே யாராவது கலாய்ச்சாதான், கொஞ்சம் கோபம் வரும். அதுவும் பட்டுனு பறந்துரும். வாழ்க்கையை சந்தோஷமா வாழணும். அவ்ளோதான்!''  

என்னங்க விசேஷம் ?

அவன் இவன்தான்!

விஜய் டி.வி 'அது இது எது’ நிகழ்ச்சியில் இயக்குநர் பாலா போலவே அதட்டி மிரட்டி அடித்து உதைத்துப் பட்டையைக் கிளப்பிவிட்டார் பிரபு. பாடி, நாடி என அனைத்து லாங்வேஜிலும் அச்சு அசல் பாலா சாயல். ஏரியாவில் இப்போது சார் பெயர் 'பாலா’ பிரபு!

''நான் ஒரு தியேட்டர் ஆர்ட்டிஸ்ட். நாடகங்கள் நடிச்சிட்டிருந்த சமயம் 'அது இது எது’ல வர்ற ஜெயச்சந்திரன் அண்ணன் பழக்கம். அவர்தான், 'டேய் தம்பி... ஒரு ஆங்கிள்ல பார்த்தா அப்படியே டைரக்டர் பாலா மாதிரியே இருக்கடா’னு கூப்பிட்டு நிகழ்ச்சியில் கலந்துக்கச் சொன்னார். 'அச்சச்சோ... கிண்டலடிக்கிறோம்னு நினைச்சு பாலா சார் தப்பா எடுத்துப்பாரே’னு தயங்கினேன். 'அதெல்லாம் இல்லை. அவரே ரசிப்பார்’னு சமாதானப்படுத்தி நடிக்கவெச்சுட்டாங்க. அந்த நிகழ்ச்சிக்கான விளம்பர ட்ரெய்லர் பார்த்துட்டுதான் வீட்லயே நான் டி.வி-யில் நடிச்சதே தெரியும். எல்லாரும் திட்டிக் குமிக்கப்போறாங்கனு பயந்தேன். ஆனா, 'நல்லா இருந்துச்சுடா’னு வாழ்த்து மழை. பாலா சாரை நான் நேர்ல பார்த்தது இல்லை. சில டி.வி பேட்டி, ஸ்டில்ஸ்தான் பார்த்திருக்கேன். நடிக்க ஆசைப்பட்டுத்தான் நாமக்கல்லில் இருந்து சென்னை வந்தேன். ஆனா, எதுவும் செட்டாகாம ஆட்டோமொபைல் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்துட்டேன். கல்யாணமும் முடிஞ்சிருச்சு. இப்போ குடும்பத்தைக் காப்பாத்துற கடமை இருக்கு. ஆனாலும் நடிப்பு ஆசையை விட்ற மாட்டேன். அப்பப்போ இந்த மாதிரி சின்னச் சின்னதா ஏதாவது செஞ்சு கலை தாகத்தைத் தணிச்சுக்க வேண்டியதுதான்!''