மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அஞ்ஞானச் சிறுகதைகள் - 08

அஞ்ஞானச் சிறுகதைகள்
பிரீமியம் ஸ்டோரி
News
அஞ்ஞானச் சிறுகதைகள்

சந்தோஷ் நாராயணன்

கி.பி 2600. 

இந்திய விஞ்ஞானிகளுக்கு மிகவும் பெருமையாக இருந்தது. ஆஸ்ட்ராய்டு என்ற புதிய பால்வீதிக்கு, இன்று முதன்முதலாக ஒரு 'கேலக்ஸி ஷிப்’பை அனுப்பவிருக்கிறார்கள்.

சூரியனில் இருந்து ஒரு ட்ரில்லியன் ஒளி தூரத்தில் இருக்கும் பால்வீதி அது. ஷிப், இன்னும் சிறிது நேரத்தில் புறப்படவிருக்கிறது. அனைவரின் முகத்திலும் பதற்றமும் கவலையும் படர்ந்திருந்தன. தலைமை விஞ்ஞானி மூர்த்தி, அந்த மிகப் பிரமாண்டமான ஷிப்பின் முன்சக்கரத்துக்கு அருகில் நின்றிருந்தார்.

அந்தச் சக்கரமே எல்.ஐ.சி பில்டிங்கைவிடப் பெரியது. இந்த ஷிப், ஃப்ளைட் மாதிரி சிறிது தூரம் தளத்தில் ஓடி, பின்னர் செங்குத்தாக மேலே எழும்பி விண்வெளிக்குப் பறந்துவிடும். கவுன்ட்-டௌன் ஆரம்பித்தது. 10-ல் இருந்து தலைகீழாக எண்ண ஆரம்பித்தனர்.

அஞ்ஞானச் சிறுகதைகள் - 08

ஷிப் புறப்படுவதற்கு சில நொடிகளுக்கு முன்னர், தலைமை விஞ்ஞானி மூர்த்தி தன் வெள்ளை நிற தொங்கு சட்டையின் பையில் இருந்து அந்த யெல்லோ பாலை எடுத்து ஷிப்பின்

அஞ்ஞானச் சிறுகதைகள் - 08

முன்சக்கரத்தின் முன்பு வைத்தார். அந்தப் பிரமாண்டமான சக்கரம் அதை நசுக்கியபடி முன் நகர்ந்தது.

அந்த யெல்லோ பாலில் இருந்து சிட்ரிக் ஆசிட் பீய்ச்சி அடித்தது!

'டெட்லைன் என்பது, வேலைக்கு அல்ல; எம்ப்ளாயின் மூளைக்குத்தான்' என பி.பி எகிறினான் கார்ப்பரேட் சித்தன்!

விதி

ஹார்ன் சத்தத்தைக் கண்டுகொள்ளாமல் குறுக்கும் நெடுக்குமாக அலையும் ஆட்கள். திருப்பத்தில் தேமேவென சாலையைக் கடக்கும் மாடுகள். நடுவில் கார்ப்பரேஷன் அல்லது டெலிபோன் துறை ஊழியர்கள் தோண்டிவைத்த சில பல பள்ளங்கள், பாதையைத் திருப்பிவிடும் டிராஃபிக், தற்காலிக இரும்பு வேலிகள்... இந்தக் களேபரங்கள் அனைத்தையும் தாண்டித்தான், சேரவேண்டிய இடத்தை அடைகிறான் இருசக்கர வாகன ஓட்டி.

'சென்னையில் திருவல்லிக்கேணி போன்ற இடங்களில் வண்டி ஓட்டுவது, கிட்டத்தட்ட வீடியோ கேம் ஆடுவதுபோல’ என்றான் நண்பன். மேலே உள்ள விவரணைகளைக் கேட்டால் அது சரிதான் எனப் படு(த்து)கிறது.

அஞ்ஞானச் சிறுகதைகள் - 08

சாலைகளில் சாகச லீலைகள் செய்பவர்கள் பல ரகம். ஆக்சிலரேட்டரை ஆபத்தான அளவுக்கு முறுக்கி, இன்ஜின் சத்தம் நம் நெஞ்சைக் கிழிக்க, வாகன வரிசைகளின் சந்துபொந்துகளில் சாய்ந்து நெளிந்து ஹீரோயிசம் காட்டும் விடலைகள் முதல்

'ஆன் தி வே’யில் காதுக்கும் கழுத்துக்கும் நடுவில் மொபைலை இடுக்கியபடி மளிகைச் சாமான் லிஸ்ட் எடுக்கும் அங்கிள்கள் வரை ஆளாளுக்கு அராஜகம்.

இந்த அசுரத்தனமான அவசர யுக டிராஃபிக்கில், முன் செல்பவனைப் பற்றி பின் வருபவன் கவலைப்படுவதே இல்லை. லேசாக உரசினால்கூட 'என்ன... வீட்ல சொல்லிட்டு வந்துட்டியா?’ என்ற புராதனக் கேள்வியைக்கூட கேட்க நேரம் இல்லாமல், சிக்கும் நேரத்தில் அடுத்த சிக்னல் பார்த்துப் பாய்கிறார்கள்.

'இன்னும் சிலர், முந்தைய திருப்பத்தில் போட்ட இண்டிகேட்டரை அணைக்காமல் 'லெஃப்ட் போகிறானா... ரைட் போகிறானா?’ என பின்னால் வருபவரைக் குழப்பத்தில் கியர் மாற்றவைக்கிறார்கள்’ என்பது ஸ்கூட்டி பெண்களின் சங்கடம்.

ஆட்டோவில் போகவேண்டிய மொத்தக் குடும்ப உறுப்பினர்களும், பெட்ரோல் டேங்க் முதல் பின் இருக்கையின் நுனி வரை குழந்தையும் குட்டியுமாகத் தொத்திக்கொண்டு, பார்ப்பவர்களிடம் படபடப்பைப் பற்றவைக்கிறார்கள்.

முச்சந்திகளில் டிராஃபிக் ஜாம் நெருக்கினால், ஒரு நொடிகூடத் தாமதிக்காமல் ரைட் எடுத்து முன்னால் சென்று எதிரில் வரும் வாகனங்களை மறித்துக்கொண்டு, டிராஃபிக் போலீஸுக்கு சிக்கல் பொக்கே கொடுக்கிறார்கள். முன் வாகனம் நகர வழி இல்லாமல் நிற்பது தெரிந்தாலும், ஹார்னை கண்டமேனிக்கு அழுத்தி ஹார்ட்-பீட் எகிறவைக்கிறார்கள்.

அஞ்ஞானச் சிறுகதைகள் - 08

லைசென்ஸ் வாங்க '8’ போடுவதைத் தவிர வேறு எந்த விதிகளையும் பெரும்பாலும் நம்மவர்கள் கற்றுகொண்டதாகத் தெரியவில்லை. என்ன செய்யப்போகிறோம் என்பது அந்த பாடிகாட் முனீஸ்வரனுக்கே வெளிச்சம்!

ஹைப்பர் ரியலிசம்

பெரும்பாலும் ஆர்ட்டிஸ்ட்டுகளுக்குக் கைவராத கலை, மனிதர்களின் தோல் நிறத்தை அப்படியே கொண்டுவருவதுதான். எவ்வளவுதான் முயன்றாலும் செயற்கையாகத் தோன்றும் ஆபத்து உண்டு. வால்ட் டிஸ்னி புரொடக்‌ஷன் முதல் 3டி அனிமேஷனாக 'டாய் ஸ்டோரி’யை வெறும் பொம்மைகளாக வைத்து ஓட்டியதற்கு இதுவும் ஒரு காரணம்.

மனிதர்கள் தோன்றும் அனிமேஷன் படங்கள் பிறகு உருவானாலும், அதில் ஒரு ப்ளாஸ்டிக் தன்மை இருக்கும். ஆனால் சமீபமாக, நிறைய வீடியோ கேம்களின் விளம்பர டிரெய்லர்களில், அனிமேஷன் மனிதர்களின் தோல் நிறம் கிட்டத்தட்ட ஒரிஜினலாகத் தோன்றுவதைப் பார்க்கிறேன். இருந்தாலும் சில க்ளோஸப் காட்சிகளில் விஷயம் 'தோல்’ இளித்துவிடும்.

அஞ்ஞானச் சிறுகதைகள் - 08

இந்தத் 'தோல்’ கதைக்குள் செல்லக் காரணம், ரான் ம்யூயெக் (Ron Mueck) எனும் சிற்பியின் சிற்பங்கள். ஹைப்பர்ரியலிஸ்டிக் ஸ்கல்ப்ச்சர் எனச் சொல்லப்படும் இந்தச் சிற்பங்கள், 'உண்மையான மனிதர்களோ...’ என ஒரு நிமிடம் நம்மை திடுக்கிடச் செய்பவை. அதிலும் அந்த மனிதத் தோலின் நிறத்தையும் ஒவ்வொரு மயிர்க்கால்களின் டீட்டெயிலையும் பார்க்கும்போது, நமக்குத் தோலில் புல்லரிக்கிறது.

ரான் ம்யூயெக், ஆஸ்திரேலியாவில் பிறந்தவர். இன்று லண்டனில் வசிக்கிறார். கிட்டத்தட்ட 40 வயதுக்கு மேல்தான் சிற்பங்கள் செய்யவே ஆரம்பித்திருக்கிறார். அதற்கு முன் தொலைக்காட்சித் தொடர்களுக்கு ஆர்ட் டைரக்டர் போன்ற வேலைகளைப் பார்த்துக்கொண்டு காலம் தள்ளியவரை, சிற்பங்களின் உலகுக்குள் தள்ளியவர் பிரபல ஓவியரான அவரது மாமியார் பௌலோ ரெகோ.

அஞ்ஞானச் சிறுகதைகள் - 08

'டெட் டாட்’ எனும் அவருடைய முதல் ஹைப்பர் ரியலிஸ்டிக் சித்திரம், லண்டன் சாச்சி கேலரியில் வைக்கப்பட்டபோது, பார்த்தவர்கள் அசந்துபோனார்கள். மரித்துக்கிடக்கும் தன் தந்தையின் உடலை, ஞாபகத்தில் இருந்து அச்சு அசல் சிற்பமாக மாற்றியிருந்தார் ரான். அளவில் வழக்கமான மனித உடலைவிட மிகச் சிறிய வடிவிலான அந்தச் சிற்பம் பார்வையாளர்களைத் தொந்தரவு செய்தது.

மனித உடல்களை, கடந்த 15 ஆண்டுகளாக விதவிதமாகச் செதுக்கியிருக்கிறார். சிலிக்கன் முதல் ஃபைபர் கிளாஸ் வரை பல்வேறு பொருட்களினால் ஆன ஆச்சர்யச் சிற்பங்களை உருவாக்கும் ரான், இயல்பான மனித உடலின் அளவில் சிலைகளைச் செய்வது இல்லை. 'அதில் என்ன சுவராஸ்யம் இருக்கிறது? இயல்பில் இல்லாததைப் பார்ப்பதில்தானே மனிதர்களுக்கு ஆர்வம் அதிகம்’ என, சோஷியல் ரியலிசம் பேசுகிறார் இந்த ஹைப்பர் ரியலிசச் சிற்பி!