Published:Updated:

விமானத்துக்கு ஐடியா தந்த பறவை... பறவைக்கு எமனாகும் விமானம்!

விமானத்துக்கு ஐடியா தந்த பறவை... பறவைக்கு எமனாகும் விமானம்!

விமானத்துக்கு ஐடியா தந்த பறவை... பறவைக்கு எமனாகும் விமானம்!

Published:Updated:

விமானத்துக்கு ஐடியா தந்த பறவை... பறவைக்கு எமனாகும் விமானம்!

விமானத்துக்கு ஐடியா தந்த பறவை... பறவைக்கு எமனாகும் விமானம்!

விமானத்துக்கு ஐடியா தந்த பறவை... பறவைக்கு எமனாகும் விமானம்!

'பறவையைக் கண்டான், 
விமானம் படைத்தான்'
- இது பழைய திரைப்படப் பாடலின் வரி.

ஆனால், அந்த விமானங்களே பறவைகளுக்கு எமனாக மாறிக்கொண்டிருப்பதுதான் நிதர்சன வலி.

பறவைகளுக்கு இனப்பெருக்கக் காலம் என்பது மிகமிக முக்கியமானது. இதற்கான சரியான தட்பவெப்ப நிலையுள்ள இடங்களைத் தேடி காடுகள், மலைகளென தேசம்விட்டு, கண்டம் விட்டு பல ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தூரம் ஆண்டுதோறும் அவை பயணிக்கின்றன. இப்படி இனப்பெருக்கத்துக்காக உலக அளவில் பறவைகள் பயணிக்கும் இடங்களில் முக்கிய இடத்தில் நம்முடைய காஞ்சிபுரம் மாவட்டத்திலிருக்கும் வேடந்தாங்கல் திகழ்கிறது. ஆண்டுதோறும் நம்முடைய வடகிழக்குப் பருவமழை காலத்தில் அரிய வகை பறவைகள் பலவும் இனப்பெருக்கத்துக்காக வேடந்தாங்கலை வந்தடைகின்றன. இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை மற்றும் வடகிழக்குப் பருவமழை இரண்டுமே ஓரளவுக்குக் கைகொடுத்திருப்பதால், வேடந்தாங்கல் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஏரிகளில் நீர்நிரம்பியிருக்கிறது. இதனால், பறவைகள் கூட்டம் கூட்டமாக அங்கே வந்தவண்ணம் இருக்கின்றன. இப்படி பயணிக்கும் பறவைகளுக்கு ஏரியில் எமன் காத்திருக்கிறானோ இல்லையோ... ஆகாயவெளியில் கட்டாயம் காத்திருக்கிறான். விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களில் சிக்கி அவை தங்கள் உயிரை இழப்பது தொடர்கிறது. 

இடம்பெயரும் பறவைகளும், விமானங்களும் ஒரே பாதையில் பயணிக்கும்போது பறவைகள் கூட்டம் கூட்டமாக மோதி இறந்துபோகின்றன. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலத்துக்கு வரும் பறவைகள், சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்படும் விமானங்கள் குறிப்பிட்ட உயரத்தை எட்டும்போது அவற்றில் மோதுகின்றன. இதனால் பறவைகளுக்கு மட்டுமல்ல விமானமும் சேதமடைகிறது.


சமீபத்தில் சென்னையிலிருந்து தோஹாவுக்கு பயணிகளுடன் புறப்பட்ட விமானம் 5,000 அடியில் பறந்தபோது, பறவைகளின் கூட்டம் அதில் மோத, பல பறவைகள் உயிரிந்துள்ளன. இதேபோல சென்னையிலிருந்து அஹமதாபாத் புறப்பட்ட விமானம் 5,500 அடி உயரத்தில் பறந்தபோது, பறவைகள் மோதியதில் விமானத்தின் கண்ணாடி சேதமடைந்தது.

இதைப்பற்றி விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது, “தோஹா விமானத்தின் மீது பறவைகள் மோதியபோது, பல பறவைகளுக்கு அலகுகள் உடைந்தன. விமானத்தின் கண்ணாடிகளில் ரத்தக்கறை படிந்தது. இதனால் விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டது. பயணிகள் வேறு விமானத்துக்கு மாற்றிவிடப்பட்டனர். குறைந்த உயரத்தில் பறக்கும் கழுகுகள், சிறிய பறவைகள் மோதுவதுதான் அதிகமாக நடக்கும். ஆனால், இத்தனை அடி உயரத்தில் பறக்கும்போது, இந்தப் பறவைகள் மோதியிருப்பதை வைத்துதான் இனப்பெருக்கத்துக்காக வந்த பறவைகளாக இருக்கும் என்று முடிவு செய்தோம். 

விமானம் தரையிறக்கப்படும்போது பிரத்யேக ஒளி எழுப்பும் விளக்குகள் எரியவிடப்படும். இதைப் பறவைகளால் கண்டுகொள்ள முடியும். இதனால் அவை தமது பாதையை மாற்றி அமைத்துக்கொள்ளும். ஆனால், அதையும்மீறித்தான் சமீபத்திய விபத்துகள் நடந்துள்ளன. பறவைகள் மோதுவதால் ஏற்படும் விபத்துகளைத் தவிர்க்க, விமானம் தரையிறங்கும்போது எரியவேண்டிய ஒளிஉமிழும் விளக்குகள் சரியாக எரிகின்றனவா என்பதை விமானி உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். பறவைகள் குறுக்கிடுவதை உணர்ந்தால், விமானக் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கவேண்டும் என்பதையெல்லாம் கட்டாயமாக வலியுறுத்திவருகிறோம். இதன்மூலமாக அடுத்தடுத்து வந்துகொண்டிருக்கும் விமானங்களின் விமானிகளுக்கு எச்சரிக்கை கொடுப்பதன் மூலமாக வெளிநாடுகளில் இருந்து இனப்பெருக்கத்துக்காக வரும் பல்லாயிரக்கணக்கான பறவைகளையும், இரைதேடி உயரப்பறக்கும் பறவைகளையும் ஆபத்திலிருந்து காப்பாற்ற முடியும்” என்கின்றனர்.

காடுகளை அழித்து, மலைகளை அழித்து, இயற்கையை அழித்து, விலங்குகள், பறவைகள் என்று பெருவாரியான உயிரினங்களில் வாழ்வாதாரத்தை அழித்துக்கொண்டே இருக்கிறோம். இதன்காரணமாக அரியவகை விலங்குகள், பறவைகள் பட்டியலில் இடம்பெறும் உயிரினங்களின் எண்ணிக்கையை உயர்த்திக் கொண்டே இருக்கிறோம். நிலத்தில்தான் இந்த கதி என்கிற நிலையில், ஆகாயத்திலும் ஆபத்து காத்திருப்பது அதிர்ச்சியான விஷயமே.

ஆனாலும், நாம் உயர்கிறோமே!