சினிமா
Published:Updated:

10 செகண்ட் கதைகள்

10 செகண்ட் கதைகள்
News
10 செகண்ட் கதைகள்

ஓவியங்கள்: செந்தில்

வட்டம்

10 செகண்ட் கதைகள்

சாருமதி லஷ்மிக்கு, லஷ்மி அருணாவுக்கு, அருணா கமலாவுக்கு, கமலா சீதாவுக்கு, சீதா  பானுமதிக்கு, பானுமதி உமாவுக்கு, உமா மீண்டும் சாருமதிக்கு... என நவராத்திரி பண்டிகையில் ஒன்பது நாட்கள் ஒரே பிளவுஸ் பீஸ் வெற்றிகரமாக வட்டமடித்துத் திரும்பியது!

- பத்மா செல்லப்பா

 பெரிய கோயில்

10 செகண்ட் கதைகள்

பேருந்தில் நீண்ட நேரம் கால் வலிக்க நின்றபடி, 'யாராவது எழுந்து இடம் தர மாட்டார்களா!’ என நினைத்தபோது ஒருவர், 'தம்பி, பெரிய கோயில் கோபுரம் தெரிஞ்சா என்னைத் தட்டி எழுப்புப்பா!’ என்றார். ஆவலுடன் எழுப்பிவிட்டேன். எழுந்து கும்பிடு போட்டு, மீண்டும் தூங்கிவிட்டார்!

-  இமாம் ஹபீப்

ஜெனரேஷன் எக்ஸ்

10 செகண்ட் கதைகள்

''எப்பப் பாரு... திண்ணையில உக்காந்து வெட்டி அரட்டை

அடிச்சுக்கிட்டு...''  நண்பன் சுரேந்தரிடம் தன் தாத்தாவைப் பற்றி கணேஷ்  சொன்ன அதே நேரத்தில், வெளியில் ''ஏதோ ஃபேஸ்புக்காம்...  ட்விட்டராம்... எப்பவும் நோண்டிக்கிட்டு... வெட்டிப் பசங்க!'' என்றார் தாத்தா தன் நண்பரிடம்!

- கே.ஆனந்தன்

 பரம்பரை

10 செகண்ட் கதைகள்

''நான்தான் இங்க கூலி வேலை செஞ்சு கஷ்டப்பட்டேன். பரம்பரையிலயே மொத ஆளா என் பையன் சிங்கப்பூர் போறான்'' எனப் பெருமைப்பட்டான், தன் மகனும் அதற்குத்தான் போகிறான் என்பதை அறியாத அப்பாவித் தகப்பன்!         

  - எஸ்கா

மழை மனம்!

10 செகண்ட் கதைகள்

''நல்ல மழை...''  ஒரு மணி நேரமாக விடாமல் பெய்த மழைக்கு சந்தோஷப்பட்ட பஸ்ஸில் பயணம் செய்த பக்கத்து ஸீட்காரர், பஸ் ஸ்டாப்பில் நின்றதும், ''ச்சே... இன்னும் நின்னு தொலைக் கலையா?''என்றார் சலிப்பாக!

- கே.ஆனந்தன்

 பரிசு

10 செகண்ட் கதைகள்

புது மாப்பிள்ளை அரண்டு நிற்பதைப் பொருட்படுத்தாமல், மேடையேறி,

புன்னகைத்தபடி பரிசு அளித்துவிட்டு இறங்குகிறாள் கிரேஸி. பரிசு பாக்ஸுக்குள் இருக்கிறது, கடந்த வருடம் அவன் இவளுக்குப் பரிசளித்த மோதிரம்!

- லி.பின்னி மோசஸ்

முட்டாள்

10 செகண்ட் கதைகள்

படகில் இருந்து ஏரியில் அவளைத் தள்ளியபோது, கூடவே என் கையையும் பற்றி இழுத்தவள், ''முட்டாள், எனக்கு நீச்சல் தெரியும். உனக்கு... தெரியாது!'' என்றாள்!

- ஏ.பிரபாகரன்

புதுசு

10 செகண்ட் கதைகள்

''முன்பு இருந்த கட்சியில் பழைய ஆட்களுக்கோ, உழைப்புக்கோ மரியாதை இல்லை. புதிதாக வருபவர்களுக்குத்தான் மதிப்பு, மரியாதை, பதவி  எல்லாம்...''  பழைய தலைமையைக் குற்றம் சாட்டி பேசிக்கொண்டிருந்தார் போன வாரம் புதிதாகச் சேர்ந்த கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர்!

- கே.ஆனந்தன்

சம்பந்தம்

10 செகண்ட் கதைகள்

''என்ன பிரச்னை?'' என்ற மனநல மருத்துவரிடம், ''சமயத்தில் சம்பந்தமே இல்லாமல் பிதற்றுகிறார்'' என்று கையைக் காட்டினார்கள் இருவரும் ஒருவருக்கொருவர்!

- இந்தியா வாசன்

ஆசை

10 செகண்ட் கதைகள்
10 செகண்ட் கதைகள்

தொலைக்காட்சியில்  நடிகை,  கேட்டரிங்  கல்லூரிக்கும் கப்பல் கல்லூரிக்கும் விளம்பரம்

10 செகண்ட் கதைகள்

செய்துகொண்டிருந்தாள். பார்த்துக்கொண்டிருந்த ப்ளஸ் டூ மாணவி அபர்ணாவின் மனதில் நடிகை யாகும் எண்ணம் துளிர்விட்டது.

- எம்.விக்னேஷ்

அதிகபட்சம் 10 நொடிகளுக்குள் வாசித்துவிடக்கூடிய 'நச்’ கதைகள் அனுப்ப வேண்டும். பிரசுரமானால் பரிசு ரூ 500. உங்கள் கதைகளை 10secondstory@vikatan.com என்ற ஐ.டி-க்கு அனுப்பலாம்!