Published:Updated:

'அவர் எழுதியது ஒடுக்கப்பட்டவர்களுக்காக... விருதுக்காக அல்ல' - சாகித்ய அகாடமி விருதை மறுக்கும் இன்குலாப் குடும்பம்!

கவிஞர் இன்குலாப், கவிதைகளின் வழியே போர்க்குணம் பாய்ச்சிய மக்கள் பாவலன். நசுக்கப்பட்டவர்களின் குரலாக, அடித்தட்டு மக்களின் எழுச்சிக்கான பாடல் செய்தவர். இந்தச் சமூகத்தால் வர்க்க நெருப்பில் தொடர்ந்து பொசுக்கப்பட்டவர்களுக்காக உடல்நிலை சரியில்லாதபோதும் போராட்டக்களத்தில் செயல்பட்ட செயற்பாட்டாளர். 

கலகம் செய்ய

நிமிர்ந்துவிட்டவனுக்கு உதவி

செய்வதே இலக்கியத்தின் பணி

- மார்க்சிம் கார்க்கி.

இந்த வரிகளுக்கேற்ப மக்களுக்கான கவிஞராகவே வாழ்ந்தவர். கடைசிவரை தன் கொள்கையில் காத்திரமாகச் செயல்பட்டவர். சாகுல்ஹமீது என்ற இயற்பெயர்கொண்ட கவிஞர் இன்குலாப், கீழக்கரையில் பிறந்து மதுரை தியாகராஜர் கலைக் கல்லூரியில் படித்தவர். அதன் பிறகு சென்னை புதுக்கல்லூரியில் பணியாற்றினார். ஆசிரியராகப் பணிபுரிந்த காலத்திலேயே தமிழ் மொழியின் மீதும் மக்களின் மீதும் அளப்பரிய அன்புகொண்டவராகவே செயல்பட்டார். 

கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் உயிர்நீத்த இன்குலாப்புக்கு, கட்சிப் பாகுபாடின்றி பலதரப்பட்ட தலைவர்களும் தங்கள் அஞ்சலியைச் செலுத்தினர். இந்த வருடப் படைப்பிலக்கியத்துக்கான சாகித்ய அகாடமி விருது,  கவிஞர் இன்குலாப் எழுதிய `காந்தள் நாட்கள்' என்ற கவிதைத் தொகுப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதை பல்வேறு மக்களும் செயற்பாட்டாளர்களும் வரவேற்ற நிலையில், அவரது குடும்பத்தினர் `இந்த விருதை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை!' எனத் அறிவித்துள்ளனர். அவரின் இயற்பெயரான சாகுல்ஹமீது என்ற பெயரை மாற்றிக்கொண்டு, தன் மகன் பெயரான `இன்குலாப்' என்ற புனைபெயரில் கவிதை எழுதியவர் இன்குலாப். இந்த விருது மறுப்பு குறித்து அவர் மகன் இன்குலாப்பிடம் பேசினோம்...

``என் தகப்பனார் வாழ்ந்த காலத்திலேயே, `நான் விருதுக்கான படைப்பாளன் அல்ல. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக வஞ்சிக்கப்பட்டவர்களுக்காகக் கவிதை படைப்பதே என் நோக்கம்' எனச் சொல்லியிருக்கிறார். நாங்கள் சிறுவயதாக இருக்கும்போது போராட்டங்களில் கலந்துகொண்டதற்காக அப்பாவை காவல் துறையினர் சிறைக்கு அழைத்துச் செல்வர். அதற்கு அப்பா `இதுதான் எனது செயல்பாட்டுக்கான விருது' என்றார். சிலர் `இந்த விருது சிறுபான்மையினருக்கு  வழங்கப்பட்டிருப்பது ஒரு நல்ல முன்னெடுப்புதானே ஏன் மறுக்கிறீர்கள்?' என்றனர். இந்தச் சமூகத்தில் இன்னும் தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கைமுறையில் எந்த ஒரு மாற்றமும் பெரிதாக

நிகழ்ந்துவிடவில்லை. எழுத்தாளர்கள் மீதான தாக்குதல் என்பது, தொடர்ந்து நிகழ்ந்துவருகிறது. இந்த அரசு மாறிமாறி அமர்ந்தாலும், இந்த அரசாங்கம் அணிந்திருக்கும் முகமூடி என்பது இன்னும் அப்படியேதான் உள்ளது. எந்த மக்களுக்காக என் அப்பா பாடல்கள் அமைத்தாரோ, போராடினாரோ, அவர்களுக்கு முறையான தீர்வுகள் கிடைப்பதுதான் என் அப்பாவுக்கான விருதாக அமையும். என் அப்பா உயிரோடு இருந்திருந்தால்கூட இதைத்தான் செய்திருப்பார்'' என்றார்."

``விருது, பாராட்டு இவையெல்லாம் ஒரு கலைஞனுக்கான, கவிஞனுக்கான அங்கீகாரம் அல்ல. தான் வாழும் சமூகத்தில் உள்ள மக்களின் துயர்களை, வலிகளைப் பேசுவதுதான் ஒரு கலைஞனுக்கான ஆகப்பெரிய அங்கீகாரம்'' என்பார் இன்குலாப். அங்கீகாரம் குறித்து இன்குலாப் ஒரு கவிதை எழுதினார்.

வாழ்ந்து பிணமானால் உன் போன்றோரை

பிணமாக வாழ்ந்தால் என் போன்றோரை

இந்த அரசு அங்கீகரிக்கும்

என பாரதியைச் சொல்வதாகப் பாடல் அமையும். இந்தப் பாடலைத்தான் கவிஞர் இன்குலாப்பின் மகனான இன்குலாப்பும் கூறினார். ``அப்பாவின் `மனுசங்கடா...' பாடல் இன்றும் மக்களிடையே பாடப்பட்டுவருகிறது. இதுதான் அப்பாவுக்கான அங்கீகாரம்'' என்றார்.