மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன!

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ.200ஓவியங்கள்: ராஜேஷ் ஆர்.வி

மனம் கவர்ந்த வரன் மையம்!

அனுபவங்கள் பேசுகின்றன!

மீபத்தில் என் தோழியின் மகளுக்கு வரன் தேடி, திருமணதகவல் மையம் ஒன்றுக்குச் சென்றிருந்தோம்.

அனுபவங்கள் பேசுகின்றன!

அங்கிருந்தவர், சில ஃபைல்களைக் கொடுத்து பார்க்கச் சொன்னார். அதில் வரன் பற்றிய விவரம், அவருடைய குடும்பப் புகைப்படம், படிப்புக்கான சான்றிதழ், வேலை பார்க்கும் நிறுவனத்தால் அத்தாட்சியிடப்பட்ட சான்றிதழ், சம்பள விவரம் என அனைத்து தகவல்களும் ஆதாரத்துடன் வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு வரனுக்கும் தனித்தனி கோப்பு இருந்தது. ``எங்களை நம்பி வருவோருக்கு திருப்தி ஏற்படுத்தவும், வரனைப் பற்றி நம்பிக்கை ஏற்படவும், மோசடி நிகழாமல் தடுக்கவும் இந்த முறையைப் பின்பற்றுகிறோம்’’ என்றார், அவர்.

திருமண தகவல் மையங்கள் பலவும் வரனைப் பற்றி அவர்களே தரும் விவரங்களை மட்டும் கூறி, பிறகு ஏதாவது பிரச்னை என்றால் `எங்களுக்குச் சம்பந்தமில்லை’ என `ஜகா’ வாங்கும் நிலையில்... நேர்மைக்கு மதிப்பளிக்கும் இந்தத் திருமண மையத்தினர் மிகவும் பாராட்டத்தக்கவர்களே!

- ஏ.ஜோதி, புதுக்கோட்டை

`நோட்’ பண்ணுங்கப்பா..!

அனுபவங்கள் பேசுகின்றன!

ன் பக்கத்து வீட்டில் ஓர் ஒற்றுமையான குடும்பம். இரண்டு குழந்தைகள்... 8-ம் வகுப்பு, 6-ம் வகுப்பு. அந்தக் குழந்தைகளின் சித்தப்பா, திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் 5 சொற்கள் கொடுப்பார். டிக்‌ஷனரி உதவியுடன் தமிழ் அர்த்தம் எழுத வேண்டும். வார விடுமுறை நாளன்று சித்தப்பா அவரவர்க்கு உரிய மார்க் போடுவார். `வேர்ட்ஸ் பில்டிங்’, `வேர்ஸ் எண்டிங்’ விளையாட்டுகளும் சொல்லிக்கொடுப்பார். வீட்டுக் குழந்தைகள் மட்டுமல்லாமல், அக்கம்பக்கம் உள்ள குழந்தைகளும் சேர்ந்துகொண்டு சந்தோஷமாக விளையாடுகின்றன. பிற்காலத்தில் அவர்கள் இன்டர்வியூ சென்றாலோ, அலுவலகம் சென்றாலோ தயக்கம் இல்லாமல் செயல்படுவதற்கு, இந்த ஆங்கில விளையாட்டின் மூலம், இப்போதிலிருந்தே தயாராகிறார்கள்.

எல்லா வீடுகளிலும் ஒரு சித்தப்பாவோ, பெரியப்பாவோ, அத்தையோ இது மாதிரி செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்..!

- ஆர்.பார்வதி, சென்னை-80

சுமையே சுவையாக..!

அனுபவங்கள் பேசுகின்றன!

ன் உறவினரின் பெண், காலை சற்று விந்தி விந்தி நடப்பாள். அவளைப் பெண் பார்க்க அவளின் உறவினர் ஒருவர் வந்தார். அவர் அழகுதான்... ஆனால், திக்குவாய் பிரச்னை உண்டு. இருவருக்கும் திருமணம் முடிந்தது. சமீபத்தில் அவளைப் பார்க்க நேர்ந்தது. மகிழ்ச்சியுடனேயே காணப்பட்டாள். `திருமண வாழ்க்கை எப்படி இருக்கிறது?’ என்று பொதுவாகக் கேட்டேன். ``மகிழ்ச்சியா இருக்கு அக்கா..! `ஜாடிக்கு ஏத்த மூடி’னு எங்களைக் கிண்டல் பண்ணியவர்கள் முகத்தில் கரி பூசும்படி வாழ்ந்து காட்ட வேண்டும் என்று முடிவெடுத்து, சவாலாக வாழ்கிறோம். நிவர்த்தி செய்ய முடியாத குறையென்றால், அதற்கு ஏன் கவலைப்பட வேண்டும்? அதை ஏற்றுக் கொண்டு ரசிக்க ஆரம்பித்தால் போதும்... வாழ்க்கை சுமையாக இல்லாமல் சுவையாகிவிடும். என்னு டைய நடையை அவர் ரசிக்கிறார். அவருடைய பேச்சை நான் ரசிக்கிறேன். வேறு என்ன வேண்டும்..?’’ என்றாள்.

பாஸிட்டிவ் எண்ணத்துடன் வாழும் அவர்கள் பலருக்கும் வழிகாட்டிகள்தான் என்பதில் ஐயமில்லை! 

- அமுதா அசோக்ராஜா, திருச்சி