அவள் 16
Published:Updated:

ஹலோ விகடன் - கலங்காதிரு மனமே!

ஹலோ விகடன் - கலங்காதிரு மனமே!

"குழந்தைகளின் ஸ்ட்ரெஸ்ஸைக் குறைத்து ஸ்மார்ட் ஆக்குங்கள்!" 

‘‘சென்ற தலைமுறையில் கூட்டுக் குடும்பத்தில் வளர்ந்த பிள்ளைகளுக்கு தங்கள் பிரச்னைகளைப் பகிர்ந்துகொள்ள அம்மா, அப்பா மட்டுமல்லாது... தாத்தா, பாட்டி, சித்தி, மாமா என்று பலர் இருந்தனர். ஆனால் இன்றோ, பெற்றோரிடம்கூட பகிர முடியாத அளவுக்கு நியூக்ளியர் ஃபேமிலி அப்பாவும், அம்மாவும் தங்கள் வேலைகளில் பிஸியாகச் சுழல்கிறார்கள். இன்னொரு புறம், பாடச்சுமை. இந்தச் சூழலில், அந்தக் குழந்தை ஸ்ட்ரெஸ்ஸுக்கு ஆளாகிறது அல்லது கம்ப்யூட்டர் கேம்ஸ், சமூக வலைதளங்கள் என `டெக்கி’ உலகத்தில் மூழ்கிவிடுகிறது. அந்தப் பழக்கம் அவர்களை ஒரு தனிமை உலகத்துக்கு அழைத்துச் செல்கிறது. அது உடலளவிலும், மனதளவிலும் அவர்களுக்குப் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது!’’

- அழுத்தமாகச் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த குழந்தைகளுக் கான உளவியல் ஆலோசகர் கனகலட்சுமி லோகநாதன்.

ஹலோ விகடன் - கலங்காதிரு மனமே!

“பெற்றோர்கள் அவர்களுடன் நண்பர்களாகப் பழகினாலே பெரும்பாலான பிரச்னைகள் தீர்ந்துவிடும். அதற்காக ஓவர் செல்லமும் வேண்டாம். எதையும் பொறுமையாக எடுத்துச் சொல்லிப் புரியவையுங்கள். வேலைக்குச் செல்லும் பெற்றோராக இருந்தாலும், குழந்தைகளுக்கு நேரம் ஒதுக்கத் தவறாதீர்கள். சின்னச் சின்ன விஷயங்களில்கூட குழந்தைகளைப் பாராட்டுங்கள். ஒருபோதும் உங்கள் குழந்தையை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டுப் பேசும் பழக்கம் வேண்டாம். அவர்களுக்கு எதில் ஆர்வமோ அதில் சிறப்பாகச் செயல்பட வழிநடத்துங்கள். நீங்கள் ஃபிக்ஸ் செய்துள்ள மதிப்பெண்களை அவர்களைப் பெறவைக்க, ‘இந்த டியூஷன் போ’, ‘அந்த கோச்சிங் கிளாஸ் போ’ என்று அவர்களை மெஷின்களாக இயக்காதீர்கள். காரணம், இந்த விருப்பமில்லாத தொடர் ஓட்டத்தால் குழந்தைகள் ஸ்ட்ரெஸ்ஸுக்கு ஆளாவார்கள். அதனால் தங்களின் இயல்பை இழப்பார்கள். விளைவு, அவர்களிடம் இருக்கும் திறமைகளும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துபோகும்!’’ என்று எச்சரித்த கனகலட்சுமி லோகநாதன்,

•  ‘‘குழந்தைகளைப் பெற்றோர்கள் எப்படிப் புரிந்துகொள்வது?

•  உங்கள் வீட்டுக் குழந்தைகளை ரிலாக்ஸ்டாக வைக்க பெற்றோராக நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

•  பாடங்களைக் குழந்தைகள் எளிதாகக் கற்றுக்கொள்ள என்ன செய்யலாம்?

•  குழந்தைகளின் ஸ்ட்ரெஸ்ஸை தவிர்ப்பதில் பெற்றோர் செய்ய வேண்டிய, தவிர்க்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன?

•  பயிற்சி வகுப்புகள்... எந்த வயதில் சரி? என்னென்ன வகுப்புகள் சரி?’’

என குழந்தைகளின் மன அழுத்தத்தைத் தவிர்ப்பதற்கான சூழலை உருவாக்குது குறித்த இதுபோன்ற இன்னும் பல அடிப்படை விஷயங்களை ‘கலங்காதிரு மனமே’ குரல்வழியில் பகிர்கிறார். டிசம்பர் 8 முதல் 14 வரை 044 - 66802912* எண்ணில் அழையுங்கள்... பயன்பெறுங்கள்!* சாதாரண கட்டணம்

சு.சூர்யா கோமதி  படம்: ப.சரவணகுமார்