Published:Updated:

10 செகண்ட் கதைகள்

ஓவியங்கள்: செந்தில்

10 செகண்ட் கதைகள்

ஹோம்வொர்க்

‘‘டேய்... ஹோம்வொர்க்கை முடிச்சிட்டியா?’’ என்று மகனிடம் குரல்கொடுத்த அதே நேரத்தில், ‘ரிப்போர்ட் ரெடியா?’ என பாஸிடம் இருந்து இமெயில் வந்தது `வொர்க் ஃப்ரம் ஹோம்' ரகுவுக்கு!

- சாய்ராம்
 

10 செகண்ட் கதைகள்

கஷ்டம்

இன்ஜினீயரிங் காலேஜ் ஓனர் வருத்தத்துடன் சொன்னார், “நான் கான்வென்ட் ஸ்கூல் நடத்தவேண்டியது தம்பி... தெரியாத்தனமா இன்ஜினீயரிங் காலேஜ் ஓப்பன் பண்ணிட்டேன்.
அதான் கஷ்டப்படுறேன்.”

- வைத்தீஸ்வரன் பாலகிருஷ்ணன்
 

10 செகண்ட் கதைகள்

லைக்

“ஃபேமிலியுடன் ஒரு வாரம் ஃபாரின் டூர் போறேன், feeling happy” என்ற ராஜேஷின் ஸ்டேட்டஸுக்கு, தன் ஃபேக் ஐ.டி-யில் இருந்து லைக் போட்டான் ஏரியா திருடன்!

- எஸ்கா
 

10 செகண்ட் கதைகள்

குழந்தை

ஆண்டுவிழா மேடையில் தவறவிட்ட நாடக வசனத்தை, வீட்டுக்கு வந்து சரியாகச் சொன்னது குழந்தை!

- பெ.பாண்டியன்
 

10 செகண்ட் கதைகள்

மந்திரி பூதம்

விளக்கைத் தேய்த்ததும் வெளிவந்த பூதம், “என்ன வேண்டும் எஜமானரே... தங்கமா, பணமா?” என்று கேட்க, “அதெல்லாம் நானே சம்பாதிச்சுட்டேன். மாட்டிக்காம மட்டும் பார்த்துக்கணும்” என்றார் மந்திரி!

- அஜித்
 

10 செகண்ட் கதைகள்

நவீன பாரி

புதிதாக வாங்கிய காரை பார்க் செய்வதற்காக வீட்டுவாசலில் இருந்த அரசமரத்தை வெட்ட ஆள் அனுப்பினான், தன் தாத்தா தனக்குப் பெயர்வைத்த காரணம் தெரியாத பாரி!

- சாய்ராம்
 

10 செகண்ட் கதைகள்

வாழ்த்துக் கணக்கு

ஒவ்வொருவருக்கும் தனித்தனியே புத்தாண்டு வாழ்த்து அனுப்பிக்கொண்டு இருந்தார் முருகர். விநாயகரோ, தன் புரொஃபைல் பிக்சரையும் ஸ்டேட்டஸையும் புத்தாண்டு வாழ்த்து என மாற்றினார்!

- து.விஜயகுமார்
 

10 செகண்ட் கதைகள்

பாஸ்வேர்டு சீக்ரெட்

“காலையில இருந்து நீங்க சொல்றதை எல்லாம் பையன் கேட்கிறானே... என்னங்க செஞ்சீங்க?” என்ற மனைவியிடம், “வைஃபை பாஸ்வேர்டை மாத்திட்டேன்” என்றார் குருபாதம்!

- எஸ்கா
 

10 செகண்ட் கதைகள்

காலம்

அரைக்கால் பேன்ட், ஸ்பைக் முடி, கையில் காப்புமாக வந்த தம்பியைத் திட்டிக்கொண்டிருந்த அப்பா, பூபோட்ட சட்டையும், பெல்ஸ் பேன்ட்டும், முன் நெற்றியில் சுருண்டு விழுந்த முடியுமாகச் சிரித்துகொண்டிருக்கிறார் இளவயதுப் புகைப்படத்தில்!

- சங்கர்

10 செகண்ட் கதைகள்

அப்பா

அவன் அந்த கம்பெனியின் மேனேஜர். தன் அப்பாவை ஒருநாள் தன் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றான். தனக்குக் கீழே பணிபுரியும் ஊழியர்களை அறிமுகப்படுத்திவிட்டுப் போனதும் அவர்களிடம் கேட்டார் அப்பா... ``என் பையன் ஒழுங்கா வேலைபார்க்கிறானா?’’

 - எம்.ஜி.ரவிக்குமார்
 

10 செகண்ட் கதைகள்

அதிகபட்சம் 10 நொடிகளுக்குள் வாசித்துவிடக்கூடிய ‘நச்’கதைகள் அனுப்ப வேண்டும். பிரசுரமானால் பரிசு ` 500.

உங்கள் கதைகளை 10secondstory@vikatan.com என்ற ஐ.டி-க்கு அனுப்பலாம்!