Published:Updated:

நட்சத்திரப் புன்னகை

கவிதை: கார்த்திக் திலகன்

ன் பால்யத்தை பறவையாக்கி 

குழந்தையின் கையில் கொடுத்தேன்.

குழந்தைக்குப் போக்குக் காட்டிவிட்டு

என் மனைவியின் தோளில்

அமர்ந்துகொண்டது பறவை

இசை அலகுகளால் அது

தன் இறகுகளைக் கோதியதில்,

நட்சத்திரப் புன்னகை

என் நாட்கள் பறக்கின்றன

நட்சத்திரங்களாக.

தாயின் சுவாசத்தில்

நட்சத்திரங்கள் மின்னுவதைப்

பார்த்துச் சிரிக்கிறது குழந்தை.

பேசத் துடிக்கும் காலத்தின்

வாயைப் பொத்துகிறேன் நான்.