தலையங்கம்
சினிமா
பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
கவிதைகள்
ஹ்யூமர்
அறம் செய விரும்பு
கவிதை: சேயோன் யாழ்வேந்தன்,
ஒரு குழந்தையைக் கைப்பிடித்துக்
கூட்டிவருவதைப்போல்
இந்தக் குளிர்க்காலத்தை என்னிடம்
கொண்டுவந்துவிட்டு
விடைபெற்றுச் சென்றுவிட்டது மழைக்காலம்.
நெற்பயிரின் நுனியில் ஒரு பனித்துளி
முழு வயலையும் வானத்தையும்
தலைகீழாகப் பிரதிபலிக்கிறது.

அது கொஞ்சம் கொஞ்சமாக
கதிரின் வெம்மையில் ஆவியாகிறது.
மறுநாளும் அதே நெற்பயிரில்
அதேபோல் பனித்துளி
வானத்தையும் வயலையும் பிடித்துவைத்திருக்கிறது.
பருவத்தே பூத்துவிடுகிறது
மனசுக்குள்ளும் பனித்துளி
இழப்பின் சுவடின்றி
புத்தம் புதிதாக!
Comment List
இதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.
தலையங்கம்
சினிமா
பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
கவிதைகள்
ஹ்யூமர்
அறம் செய விரும்பு