அவள் 16
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

கருவளையத்துக்கு 'குட் பை'!

கருவளையத்துக்கு 'குட் பை'!
News
கருவளையத்துக்கு 'குட் பை'!

கருவளையத்துக்கு 'குட் பை'!

ண்ணாடி முன் நிற்கும்போது பெண்கள் பலரும் கவலையுடன் கவனிக்கும் விஷயம்... கருவளையம். ‘ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா?’, ‘சரியான தூக்கம் இல்லையா?’ என்று அதைக் குறிப்பிட்டு பலரும் விசாரிக்கும்போது, வேதனை இன்னும் அதிகரிக்கும். கருவளையம் ஏற்படுவதற்கான காரணங்கள், அதைத் தவிர்ப்பதற்கான மற்றும் நீக்குவதற்கான வழிகள் பற்றி டிப்ஸ் தருகிறார் சென்னை, போரூர் ‘இமேஜ் ப்ளஸ்’ பியூட்டி பார்லரின் பியூட்டிஷியன் ஜான்சி.

கருவளையத்துக்கு 'குட் பை'!

கருவளையம்... காரணம் என்ன?!

• ஸ்ட்ரெஸ், தூக்கமின்மை, நீண்ட நேரம் கணினி, மொபைல் திரையைப் பார்த்துக்கொண்டிருப்பது... இவையெல்லாம் கருவளையம் ஏற்பட காரணம் ஆகலாம்.

• ஹார்மோன் சிகிச்சை மற்றும் கருத்தடை மருந்துகளை உட்கொள்ளும்போதும் கருவளையம் ஏற்படும்.

• சைனஸ், அஜீரணம் போன்ற நோய்களின் பக்கவிளைவாகவும் கருவளையம் ஏற்படலாம்.

• விட்டமின் பற்றாக்குறை மற்றும் ரத்தச்சோகையால்கூட கருவளையம் தோன்றலாம்.

• புகை, மது பழக்கங்கள் மற்றும் அதிகமாக காபி, டீ சாப்பிடுவதும் கருவளையத்தை ஏற்படுத்த வாய்ப்புகள் உண்டு.

• தரமற்ற மேக்கப் பொருட்கள் பயன்படுத்துவது கருவளையத்தை உண்டாக்கும்.

• காரணம் ஆரோக்கியம் சார்ந்ததா, அழகு சார்ந்ததா, பழக்கவழக்கம் சார்ந்ததா என்பதை, சம்பந்தப்பட்டவரே ஊகிக்க முடியும். தேவையைப் பொறுத்து ஆரோக்கியக் குறைபாடு எனில் சரும சிறப்பு மருத்துவரையோ, மேக்கப் சாதனங்கள் உள்ளிட்ட மற்ற காரணங்கள் எனில் அழகுக்கலை நிபுணரையோ சந்தித்து சிகிச்சை, ஆலோசனை பெறலாம்.

எப்படித் தவிர்க்கலாம்?

• வெளியில் கிளம்பும்போது சன்ஸ்கிரீன் லோஷனை கண்ணுக்கு மேலே, கீழே முக்கியத்துவம் கொடுத்து

கருவளையத்துக்கு 'குட் பை'!

அப்ளை செய்யவும். இது `சன் டேனிங்’கை தவிர்க்கும்.

• கூலர்ஸ், சன் கிளாஸஸ் அணிந்துகொள்ளவும். இது நாளடைவில் ஏற்படும் சுருக்கங்களைத் தவிர்க்க உதவும்.

• க்ரீம், பழச்சாறு என்று முகத்துக்கு எந்த மசாஜ் கொடுத்தாலும், கண்களைச் சுற்றியும் செய்யவும். மேலும் எப்போதும் மோதிர விரலைக்கொண்டே மசாஜ் செய்யவும். அந்த விரலால் கொடுக்கப்படும் அழுத்தம் குறைவாக இருக்கும் என்பதுடன், அது சருமம் சத்துக்களை உள்ளிழுத்துக்கொள்ளவும் வழிவகுக்கும்.

• தினமும் காலை பால் மற்றும் பாதாம் பருப்பு சாப்பிடுவது கண்களுக்குச் சிறந்த பொலிவைத் தரும்.

• பொதுவாக கண்களுக்கு கீழ் உள்ள சருமம் மிக மிருதுவாக இருப்பதால் விரைவில் ஈரப்பதத்தை இழந்துவிடும். இதைத் தவிர்க்க நிறைய தண்ணீர் அருந்த வேண்டும்.

• காஜல், மஸ்காரா போன்ற கண்களுக்கான அழகு சாதனப்பொருட்களை பிராண்டடாகப் பயன்படுத்தவும்.

• மேக்கப் போட நேர்ந்தால், வீட்டுக்கு வந்ததும் க்ளென்சர் கொண்டு அதைக் க்ளீன் செய்யத் தவற வேண்டாம்... குறிப்பாக, ஐ மேக்கப்பை!

கருவளையம் காணாமல் போக..!

• ஒருவேளை விட்டமின், இரும்புச்சத்துக் குறைபாடு போன்றவை காரணம் எனில்... நிறையப் பழங்கள், காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்வதும், இரும்புச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை எடுத்துக்கொள்வதும் கருவளையத்துக்கு ரெட் சிக்னல் காட்டும்.

• கருவளையத்தையும் வைத்துக்கொண்டு, தூக்கமின்மையையும் சேர்த்துச் சுமந்தால் அது இன்னும் தீவிரமாகவே செய்யும். ஒரு நாளைக்கு 7 - 8 மணி நேரத் தூக்கம் கட்டாயம். வாரம் முழுவதும்

கருவளையத்துக்கு 'குட் பை'!

வேலைபார்த்துவிட்டு வார இறுதிகளை தூங்கிக் கழிப்பது, இரவெல்லாம் விழித்திருந்து காலை தாமதமாக எழுதுவது போன்ற பழக்கங்கள் எல்லாம் வேண்டாம். சரியான இடைவெளியில், இரவில், ஆழ்ந்த தூக்கம் மிக அவசியம்.

• வெகு நேரம் கணினி, மொபைல் திரைகளைப் பார்த்துக்கொண்டே இருக்காமல், இடையிடையே கண்களுக்கு ஓய்வுகொடுக்கவும். திரைக்கும் கண்களுக்கும் போதிய இடைவெளி இருக்கவேண்டியதும் முக்கியம்.

கருவளையம் உள்ளவர்கள், ஹெவி மேக்கப்பைத் தவிர்க்கவும்.

• வீட்டிலிருந்தபடியே செல்ஃப் ட்ரீட்மென்டாக, தக்காளி, எலுமிச்சை ஜூஸ் கலந்து கண்களுக்குக் கீழ் தடவி, 10 நிமிடங்கள் கழித்துக் கழுவவும். இதை ரெகுலராக ஃபாலோ செய்யவும். ஆல்மண்ட் எண்ணெய், ஆரஞ்சு ஜூஸ், வெள்ளரி ஜூஸ், ரோஸ் வாட்டர், உருளை ஜூஸ், குளிர்ந்த பால் போன்றவற்றையும் இப்படிப் பயன்படுத்தலாம்.

• மஞ்சளுடன் கரும்புச் சாறு சேர்த்துத் தடவி வர, நாளடைவில் கருமை குறையும். அதேபோல ஜாதிக்காய் பொடியை தண்ணீரில் குழைத்துக் கண்களுக்குக் கீழ் அப்ளை செய்து 10 நிமிடங்கள் கழித்துக் கழுவிவர, கருவளையம் காணாமல்போவது கேரன்டி.

• ஆரோக்கியப் பிரச்னை எனில் மருத்துவர் பரிந்துரைத்த சிகிச்சைகளை எடுத்துக்கொள்ளவும். தொடர் சிகிச்சை, நல்ல பலன் தரும்.

• கெமிக்கல் பீலிங், லேசர், இன்டன்ஸ் பல்ஸ் லைட் போன்ற சர்ஜரி ட்ரீட்மென்ட்கள் வரை இப்போது எளிதில் சாத்தியமாகின்றன.

• மொத்தத்தில், ஸ்ட்ரெஸ் இல்லாத திட்டமிடப்பட்ட வேலை, மனதில் எப்போதும் மகிழ்ச்சி, இயற்கை உணவுகள், நோ டென்ஷன் லைஃப் ஸ்டைல் இவை எல்லாம் சொல்லும் கருவளையத்துக்கு பெரிய குட் பை!’’

தா.நந்திதா