அவள் 16
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

'அவசியம்தானா ஐபுரோ ஷேப்பிங், ஹேர் கட்,லிப்ஸ்டிக்..?'

'அவசியம்தானா ஐபுரோ ஷேப்பிங், ஹேர் கட்,லிப்ஸ்டிக்..?'
பிரீமியம் ஸ்டோரி
News
'அவசியம்தானா ஐபுரோ ஷேப்பிங், ஹேர் கட்,லிப்ஸ்டிக்..?'

-ஸ்டூடன்ட்ஸ் ரியாக்‌ஷன்

‘பெண்கள் கல்லூரிக்குப் படிக்கத்தான் போகிறார்கள். பின் எதற்காக ஐபுரோ ஷேப்பிங், ஹேர் கட், லிப்ஸ்டிக் என்று தங்களை அழகுபடுத்திக்கொள்ள வேண்டும்? அவர்கள் என்ன அழகுப் போட்டிக்கா செல்கிறார்கள்?’

- மைசூரில் நடைபெற்ற அறிவியல் கருத்தரங்கு ஒன்றில், கர்நாடக ஆளுநர் வாஜுபாய் வாலா இதைக் கொஞ்சம் கிண்டல் தொனியில் சொல்ல, அரங்கத்தில் சிரிப்பொலி.

ஆளுநரின் பேச்சுக்கு நம் கல்லூரி மாணவர்களின் ரியாக்‌ஷன் இங்கே...

சுனித்ரா

'அவசியம்தானா ஐபுரோ ஷேப்பிங், ஹேர் கட்,லிப்ஸ்டிக்..?'

‘‘போற இடங்களுக்குத் தகுந்தாற்போல பெண்கள்தங்களை அழகுபடுத்திக்கிறது, அவங்களுக்குத் தன்னம்பிக்கையைக் கொடுக்கும். அவ்ளோ ஏன்கவர்னர் சார்... நீங்க வீட்டில் இருக்கிறது மாதிரியேபொதுநிகழ்ச்சிக்கு வர்றீங்களா? இல்லையே! கோட்,சூட்னு அந்த இடத்துக்குப் பொருத்தமான தோற்றத்தில் வரணும்னு தானே நினைக்கிறீங்க? உங்க பேச்சைதானே எல்லோரும் கேட்கப் போறாங்க,தோற்றம் எப்படி இருந்தா என்னனு நினைக்கிற தில்லையே? அதையே நாங்க செய்தா தப்பா?’’

பிரதீப்

'அவசியம்தானா ஐபுரோ ஷேப்பிங், ஹேர் கட்,லிப்ஸ்டிக்..?'

‘‘நம்ம ஊரு இன்ஜினீயரிங் காலேஜுக்கு மேல இருக்கே கவர்னரோட ரூல்ஸ். டி-ஷர்ட் போடக்கூடாதுனு சொன்னீங்க, ஜீன்ஸ் போடக்கூடாதுனு சொன்னீங்க, இப்போ பொண்ணுங்க லிப்ஸ்டிக் போடக்கூடாதுனு சொல்றீங்க. நாளைக்கு பசங்க எல்லாம் பாடிஸ்பிரே அடிக்கக்கூடாதுன்னு சொன்னா, எங்க ‘டவல் பாத்’ கலாசாரம் என்ன ஆகுறது?!’’ 

ஜோட்ஸ்னா

'அவசியம்தானா ஐபுரோ ஷேப்பிங், ஹேர் கட்,லிப்ஸ்டிக்..?'

‘‘நான் லிப்ஸ்டிக் போடுறதும், கண் மை போடுறதும் என்னோட தனிப்பட்ட விருப்பம். எனக்குப் பிடிச்சிருக்கு... நான் செய்துக்கிறேன். பொதுவா பெண்களின் உடை விஷயத்தில் கருத்து சொல்றவங்க, கலர் கலரா ஹேர்ஸ்டைல், இடுப்புக்குக் கீழ பேன்ட்னு காலேஜுக்கு வர்ற பசங்களுக்கு எந்தக் கட்டுப்பாடு, கருத்தும் சொல்றதில்லையே... ஏன்?’’

நீஹா

'அவசியம்தானா ஐபுரோ ஷேப்பிங், ஹேர் கட்,லிப்ஸ்டிக்..?'

‘‘ஆதிகாலத்துல இருந்தே பொண்ணுங்களுக்கு அலங்காரம் என்றால் எவ்வளவு பிரியம் என்பதை யும், அவங்க தங்களை எப்படியெல்லாம் அலங்கரிச் சுக்கிட்டாங்க என்பதையும் புராண, இதிகாசங்களில் இருந்து சங்க இலக்கியப் பாடல்கள்வரை படிச்சிருக்கோம். அந்த அலங்காரம்தான் இன்றைய மேக்கப். ஆனா, மேக்கப் என்றாலே ஏதோ கலாசாரத்துக்கு எதிரான விஷயம்போல பேசுறதில் உள்ள லாஜிக் புரியவே இல்லை.’’

ரோஹித்

'அவசியம்தானா ஐபுரோ ஷேப்பிங், ஹேர் கட்,லிப்ஸ்டிக்..?'

‘‘ஸ்கூல் ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ்ல இருந்து விடுதலையாகி, காலேஜ் வந்ததும் ஸ்பைக்ஸ், டெயில், பம்பர் கட்டிங், ஜிம்பர் கட்டிங்னு விதவிதமா ஹேர்ஸ்டைல் வைக்கிறப்போ வர்ற கெத்து இருக்கே... சூப்பர்! அந்த மாதிரிதான் பொண்ணுங்களும் லிப்ஸ்டிக், ஐ லைனர், ஐபுரோ ஷேப்பிங்னு விரும்புவாங்க. நம்ம பெர்சனாலிட்டியை உயர்த்த, நம்மைத் தனித்துவமா காட்டத்தான் மேக் ஓவர் எல்லாம் செய்றோம். அதுக்கு ஏன் தடா போட்டுப் பேசுறீங்க? ரெமோ மாதிரி இருக்கிற எங்களை, அம்பி மாதிரி ஆக்கினா, நாங்க அந்நியனா மாறிடுவோம்!’’

மாளவிகா

'அவசியம்தானா ஐபுரோ ஷேப்பிங், ஹேர் கட்,லிப்ஸ்டிக்..?'

‘‘நாட்டுல ரேப் பண்ணினவங்க எல்லாம் ஃபிரீயா சுத்துறாங்க. ஆனா, நாங்க லிப்ஸ்டிக் போட்டா ரெஸ்ட்ரிக்ட் பண்றீங்க. காலேஜ், ட்விட்டர், ஃபேஸ்புக்லதான் பசங்க கிண்டல் பண்றாங்கன்னு பார்த்தா, கவர்னருமா? காலேஜ் பொண்ணுங்க ஐபுரோ ஷேப் செய்றதும், லிப்ஸ்டிக் போடுறதும் இயல்பான விஷயங்களாகி ரொம்ப வருடங்கள் ஆகுது. ஆனால், அதை ஏதோ குற்றம்போல, கிண்டல் தொனியில் ஒரு கவர்னர் பேசினார், அதுக்குப் பார்வையாளர்கள் மத்தியில் சிரிப்பொலி எழுந்தது என்ற நியூஸை எல்லாம் படிக்கவே கடுப்பாகுது.’’

எஸ்.கே.பிரேம்குமார், தா.நந்திதா, ஜெ.விக்னேஷ், படங்கள்:பா.அபிரக்‌ஷன்