அவள் 16
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

காஸ்ட்யூம் ஸ்டுடியோ!

காஸ்ட்யூம் ஸ்டுடியோ!
பிரீமியம் ஸ்டோரி
News
காஸ்ட்யூம் ஸ்டுடியோ!

காஸ்ட்யூம் ஸ்டுடியோ!

ட்ரெண்ட் என்றாலே டீன் ஏஜ் பெண்கள்தான். காலேஜில் ‘ட்ரெண்டி'  டைட்டிலுக்குப் போட்டி போடும் கேர்ள்ஸுக்கு, ஒரு செமி ஃபார்மல் டிரெஸ்ஸை இந்த இதழில் அறிமுகப்படுத்துகிறார், சென்னை அண்ணா நகரில் உள்ள ‘ஸ்டுடியோ 149 பை ஸ்வாதி’ டிசைனர் பொட்டிக்கின் உரிமையாளர் ஸ்வாதி.

காஸ்ட்யூம் ஸ்டுடியோ!

பலாஸோ பேன்ட் 

‘‘டீன்ஸ் மத்தியில் தற்போதைய ஹாட் ட்ரெண்ட், பலாஸோ பேன்ட்தான் (Palazzo Pant). போட்டோவில் மாடல் அணிந்திருக்கும் இந்த பலாஸோ பேன்ட், பிரின்டட் டஸ்சர் மெட்டீரியல்ல டிசைன் செய்தது. இந்த டைப் பேன்ட்டுக்கு டஸ்சர் மெட்டீரியல் கூடுதல் கம்ஃபர்ட்னெஸ் தரும். பெரும்பான்மையான பாகிஸ்தான் பெண்கள், ஷார்ட் குர்தா, அனார்கலி போன்ற டாப்ஸ்களுக்கு பாட்டமாக, பலாஸோ பேன்ட்டைதான் விரும்பி அணிவாங்க.

க்ராப் டாப்  

காஸ்ட்யூம் ஸ்டுடியோ!

வெந்தய கலர் காட்டன் மெட்டீரியல்ல, சின்னச் சின்ன கட்வொர்க் மற்றும் போட்நெக் டிசைனில் தைக்கப்பட்ட க்ராப் டாப் இது. கட்வொர்க் டிசைனுக்கு லைனிங்காக, பேன்ட்டுக்கு மேட்ச் ஆகும் கிரீன் கலர் துணியை பயன் படுத்தியிருக்கேன். இந்த டாப் பேன்ட், ஸ்கர்ட் இரண்டுக்கும் பொருந்தும். பிளெய்ன் கலர் ஷிஃபான், ஜியார்ஜெட் புடவைகளுக்கு இதை பிளவு ஸாகவும் அணியலாம்.

ஓவர் கோட் 

இந்த ஓவர் கோட் மாடலை ‘கேப்’னு சொல்வோம். பிரின்டட் டஸ்சர் மெட்டீரியல்ல, கிளாஸ் பீட்ஸ் வைத்து டிசைன்செய்த இந்தக் கோட்டை, க்ராப் டாப்புக்கு மட்டுமில்லாம டியூப் டாப், ஷார்ட் டாப்னு அனைத்து டைட் ஃபிட்டிங் டாப்ஸ்களுக்கும் அணியலாம்; ட்ரெண்டியான லுக் தரும்.’’

ட்ரை செய்யலாம்... தூள் கிளப்பலாம்!

இந்துலேகா.சி

பலாஸோ பேன்ட்... பிட்ஸ்!

1960-70களில் பலாஸோ பேன்ட்டுகள் ட்ரெண்ட் விரும்பி களுக்கான ஃபேவரைட் டிரெஸ் ஸாக இருந்தது. இப்போது மீண்டும் டீன் ஏஜ் பெண்களின் ட்ரெஸ் கலெக்‌ஷனில் முக்கிய இடம் பிடித்திருக்கிறது.

டுப்புக்கு மேலே போடப்படும் ஹை வெயிஸ்ட் பலாஸோ பேன்ட்டுகளுக்கு, க்ராப் டாப்ஸ்தான் பொருத்தமாக இருக்கும்.

ஹை வெயிஸ்ட் பேன்ட்டை டாப்ஸுக்கு மேலே போட்டு டக் இன் செய்து அணிவதும் ஒரு க்ளாசிக் ஸ்டைல்.

லோ வெயிஸ்ட் பலாஸோ பேன்ட்டுகளுக்கு குர்தா, அனார்கலி போன்ற லாங் டாப்ஸ்களை அணியலாம்.