சிறப்புக்கட்டுரைகள்
Published:Updated:

இது புது ட்ரெண்டு!

க்ளிக்ஸ்!

நிகழ்வுகளைப் படம் பிடித்து நினைவுகளாக பொத்திவைக்க உதவும் புகைப்படக் கலையில்... குறிப்பாக, திருமணங்களுக்கான புகைப்படக் கலையில், ஆர்வம் மற்றும் ரசனையுடன் சேர்ந்து அழகிய கலை உணர்வை வெளிப்படுத்திவரும் சென்னையைச் சேர்ந்த, ‘ஆ போட்டோகிராஃபி’யின் நிர்வாகி அசோக் அர்ஸ், தான் இத்துறைக்கு வந்தது மற்றும் இத்துறையில் தற்போது ஏற்பட்டுள்ள புதுமைகள் பற்றி விவரிக்கிறார்...

இது புது ட்ரெண்டு!
இது புது ட்ரெண்டு!

“என்னோட சொந்த ஊரு சங்ககிரி. படிச்சது டெக்ஸ்டைல் இன்ஜினீயரிங். ஃபேஷன் டிசைனரா எட்டு வருஷம் வேலை. என்னுடைய ஃப்ரெண்ட்ஸ் நிறைய பேர் கேமராவோட சுத்திட்டு இருப்பாங்க. அவங்களோட சேர்ந்து நானும் வீக் எண்ட்ல கேமரா எடுக்க ஆரம்பிச்சுட்டேன். அப்படியே ஆர்வம் அதிகமாகி என்னோட வேலையை விட்டுட்டு முழுநேர பிசினஸா கேமராவை கையிலெடுக்க ஆரம்பிச்சு இப்போ நாலு வருஷம் ஆகுது’’ என தன்னுடைய க்ளிக்ஸ் மாதிரியே ஷார்ட் அண்ட் ஸ்வீட்டா பயோடேட்டா வாசிச்ச அசோக்கிடம்,

“முன்பு போல திருமண மண்டபத்தில், திருமண ஜோடிகளை உறவினர்களோடு புகைப்படம் எடுப்பதைத் தாண்டி, தற்போது பரவிவரும் ட்ரெண்ட் என்ன?’’ என்று கேட்டோம்.

இது புது ட்ரெண்டு!
இது புது ட்ரெண்டு!

“ இப்போ எல்லாரும் கல்யாணத்துல நடக்கும் அரிய தருணங்களை தவறவிடாம படம் எடுத்துத் தருவதுக்கு ‘கேண்டிட் போட்டோகிராஃபர்’னு ஒருத்தரை ஃபிக்ஸ் செய்யறாங்க. நானும் போன வருஷம் வரை அதுல ரொம்ப பிஸியா இருந்தேன். ஆனா, இப்போ அதைத் தாண்டி ‘அவுட்டோர் ஷூட்’ அதாவது கல்யாணத்துக்கு முன்னாடி அல்லது பின்னாடி பொண்ணு மாப்பிள்ளையோட லோக்கல் ஏரியா, வெளிமாநிலம் அல்லது வெளிநாடுகளுக்கு போய் படம் எடுக்கறதுதான் ட்ரெண்டு!

இது புது ட்ரெண்டு!

சென்னையை எடுத்துக்கிட்டா, ஈ.சி.ஆர் ரோட்டுல இருக்கும் ரிசார்ட் அல்லது மகாபலிபுரம். அப்புறம் பாண்டிச்சேரியில செகரெட்டேரியட் மற்றும் அங்க இருக்கும் பீச் ரிசார்ட். அதை விட்டா கேரளா மூணாறு, போட் ஹவுஸ். வெளிநாடுன்னு பாத்தா மொரீஷியஸ், பாலின்னு அவங்கவங்க பட்ஜெட்டுக்கு ஏத்தமாதிரி இடத்தை தேர்ந்தெடுத்துக்கலாம். அப்புறம் ஜோடிகளுக்கு கம்ஃபர்டபிளா பொருந்துற மாதிரி, இடத்துக்கு ஏத்த கலர்ஸ்ல டிரெஸ் செலக்ட்  செய்யணும். ஷூட்டுக்குத் தேவைப்பட்டா கூடவே ஒரு கொரியோகிராஃபரையும் கூட்டிட்டு போவோம். அவங்க ஜோடிகளுக்கு எப்படி போஸ் செய்யறதுன்னு சொல்லித் தருவாங்க.

இது புது ட்ரெண்டு!

இந்த அவுட்டோர் ஷூட், கல்யாணத்துக்கு முன்னாடின்னா ‘ப்ரீ வெடிங் போட்டோ ஷூட்’னும், கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறம்னா ‘போஸ்ட் வெடிங் போட்டோ ஷூட்’னும் இரண்டு வகையா இருக்கு. திருமண ஜோடிகளோட ஹனிமூன் ட்ரிப்புக்கு அதிகமா செலவு பண்ணி, ஒரு வாரம் வெளிநாடு போகும்போது அதுல ரெண்டு நாள் போஸ்ட் வெடிங் போட்டோ ஷூட்டுக்காகவும் ஃபிக்ஸ் செஞ்சுடறாங்க. ஒரே செலவுல ரெண்டு விஷயம்.

இது புது ட்ரெண்டு!
இது புது ட்ரெண்டு!
இது புது ட்ரெண்டு!

மத்தபடி உள்ளூரோ வெளியூரோ... போட்டோ ஷூட்டுக்கு முன்னாடி குறிப்பிட்ட ஜோடிகளிடம் உக்காந்து பேசி, அவங்களோட விருப்பம், அதிக பசுமை ஏரியாவா அல்லது கடற்கரை போன்ற பகுதியா, மலைப்பிரதேசங்களா எல்லாத்தையும் தெரிஞ்சுக்கிட்டு எந்த இடம்னு ஃபிக்ஸ் செய்துட்டு. போட்டோ ஷூட்டுக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடியே அந்தப் பகுதிக்கு நேர்ல போய் பார்த்து அந்த ஏரியா பாதுகாப்பா இருக்கா, எந்த இடத்துல என்ன மாதிரி லைட்டிங் கிடைக்குது... உதாரணத்துக்கு, சூரியாகாந்தி தோட்டத்துல போட்டோ ஷூட்டுன்னா, எந்த டைமுக்கு பூக்கள் நிமிர்ந்து நிக்குது-இதுமாதிரி சின்ன சின்ன விஷயங்களை உள்வாங்கிட்டு அதுக்குப் பிறகு போட்டோ ஷூட் வெச்சாதான் அந்த ஷூட், நாம எதிர்பாக்குறதைவிட நல்லா வரும். நம்ம கஸ்டமர்களுக்கும் திருப்தியை தரும்.’’ என தன்னுடைய சக்சஸ் ஃபார்முலா சொன்னார் அசோக் அர்ஸ்.

- இந்துலேகா.சி