பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

பிட்ஸ் பிரேக்

பிட்ஸ் பிரேக்
பிரீமியம் ஸ்டோரி
News
பிட்ஸ் பிரேக்

பிட்ஸ் பிரேக்

`சிங்கிளாக இருப்பதை நினைத்தால் பயமாக இருக்கிறது. ஆனால், இந்தப் பயம் எனக்குப் பிடித்திருக்கிறது’ - நீண்டகால பேச்சுலரான சல்மான் கானின் சமீபத்திய ஸ்டேட்மென்ட் இது. `50 வயது ஆகிவிட்டது. இனிமேல் திருமணம் சாத்தியமா எனத் தெரியவில்லை. ஆனால், எனக்கு இரண்டு - மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஆசை. திருமணம் ஆகாமல் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரியும். ஆனால் நான் மேனேஜ் செய்வேன்’ என ஃபீலிங் ஸ்டேட்டஸ் தட்டியிருக்கிறார் சல்மான்.  என்னதான் உங்க பிரச்னை ப்ரோ!

பிட்ஸ் பிரேக்
பிட்ஸ் பிரேக்

`நான் ஒரு நடிகை. என் வேலை நடிப்பது. சல்மான் கான், ஷாரூக் கான், அர்ஜுன் கபூர் என எல்லோருடனும் நடிப்பேன். அந்தக் கதைக்கு யார் பொருத்தமோ, அவரைத்தான் இயக்குநர் தேர்வுசெய்வார். அதை விட்டுவிட்டு கணவனை மதிக்காத மனைவியாக நடிக்கிறேன், என்னைவிட வயது குறைவானவருடன் நடிக்கிறேன், கலாசாரத்துக்கு எதிராக நடிக்கிறேன்... என்றெல்லாம் என் மீது குற்றம் சொல்வது அபத்தம்’ எனப் பொங்கியிருக்கிறார் கரீனா கபூர். பால்கி இயக்கத்தில் கரீனா - அர்ஜுன் கபூர் நடிக்கும் படம் `கி - கா’. இதில் வேலைக்குப் போகும் பெண்ணாக கரீனாவும், வீட்டு வேலைகளைக் கவனிக்கும் ஆணாக அர்ஜுன் கபூரும் நடித்திருப்பதுமே கலாசாரக் காவலர்கள் களத்தில் இறங்கக் காரணம்.

செம கான்செப்ட் தல!

பிட்ஸ் பிரேக்

ஃபஹத் ஃபாஸிலை ரீசார்ஜ் செய்து ஃப்ரெஷ்ஷாக்கியிருக்கிறது `மகேஷிண்டே பிரதிகாரம்'. `பெங்களூர் டேஸ்' படத்துக்குப் பிறகு வெளியான எந்தப் படமும் எதிர்பார்த்த அளவு வெற்றி  அடையாத வருத்தத்தில் இருந்த ஃபஹத்துக்கு இந்த வெற்றி உற்சாக டானிக். தெருச் சண்டையில் ஒருவர் ஃபஹத்தை அடித்துவிட, `அடித்தவனைத் திருப்பி அடிக்கும் வரை செருப்பு போட மாட்டேன்’ எனக் காத்திருந்து பழிவாங்கும் ஜாலி - கேலி சம்பவங்கள்தான் படத்தின் கதை. இயக்குநர்  திலேஷ் போத்தனுக்கு இது முதல் படம். மனுஷன் காமெடியில் தெறிக்கவிட்டிருக்கிறார்! 

`அடுத்த ஜேம்ஸ் பாண்ட் யார்?' என்ற கேள்விதான் ஹாலிவுட்டில் இப்போதைய சஸ்பென்ஸ் த்ரில்லர். `கேஸினோ ராயல்’, `குவான்டம் ஆஃப் சோலஸ்’, `ஸ்கைஃபால்’ படங்களில் பாண்டாக நடித்த டேனியல் க்ரெய்க், 007 வேடத்தைக் கலைக்கிறார். ``ப்யூரிட்டி' என்ற அமெரிக்கத் தொலைக்காட்சித் தொடரில் நடிப்பதற்காக பாண்ட் படங்களில் இருந்து விலகுகிறேன்’ என அறிவித்திருக்கிறார் டேனியல். அடுத்த பாண்ட் யார்?

பிட்ஸ் பிரேக்

இன்னமும் நம்புதா ஊரு?

பிட்ஸ் பிரேக்

பாகிஸ்தானின் பிரபல வீஜே  மஹிரா கானுக்கு அடித்திருக்கிறது ஜாக்பாட். பாலிவுட் பாட்ஷா ஷாரூக் கானுடன் இணைகிறார் மஹிரா. `ஃபேன்' படத்துக்கு அடுத்து ஷாரூக் கான் நடிக்கும் `ராயீஸ்'-ல் மஹிராதான் ஜோடி!

பிட்ஸ் பிரேக்

`மெளலா வா சல்லீம்’ பாடல் மூலம் எல்லோரையும் கரையவைத்த அமீன், நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது இரண்டாவது பாடலைப் பாடியிருக்கிறார். படத்துக்கு இசை அப்பா ஏ.ஆர்.ரஹ்மான் இல்லை. நாகார்ஜுனா தயாரித்து, நடித்திருக்கும் `நிர்மலா கான்வென்ட்' படம்தான் அமீனுக்கு தெலுங்கு என்ட்ரி கொடுத்திருக்கிறது. படத்துக்கு இசை ரோஷன் சலூர். `கொத்த கொத்த பாஷா... கொத்த ப்ரேம பாஷா' எனத் தொடங்கும் இந்தப் பாடல் யூடியூபில் செம ஹிட் அடிக்க, சீனியர் - ஜூனியர் ரஹ்மான்கள் இருவருமே செம ஹேப்பி!