மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஹாய் மதன் கேள்வி - பதில்

அந்த ஆறு பேர் யார்?

##~##

ஜி.லட்சுமி வாசுதேவன், சென்னை-42.

தமிழ் ஆர்வலர்கள் என்று கூறும் அரசியல்வாதிகளின் வாரிசுகள் ஆங்கிலம் மற்றும் இந்தி கற்றுக்கொள்வதன் காரணம் என்ன?

தொழில் வளர்ச்சிக்காகத்தான்! ஆங்கிலம், இந்தி பேசுகிறவர்களோடு கோடிக்கணக்கில் 'டீல்’ பேச தமிழ் மட்டும் தெரிந்தால் சிரமம்!

பெ.வேலுமணி, நாராயணபாளையம்.

என்னதான் அறிவியல் முன்னேற்றம் கண்டாலும் தீண்டாமையை ஒழிக்க முடியவில்லையே?

தீண்டாமை பிறப்பால் வருவது அல்ல. வளர்ப்பில் வருவது. சுமார் 100 குழந்தைகளைப் பிறந்தவுடன், சமூகத்தில் இருந்து பிரித்து எடுத்துச் சென்று, ஒரு தீவில் வளருங்கள். தீண்டாமை என்றால் என்னஎன்றே தெரியாமல் வளர்வார்கள். தீண்டாமை என்பது பரம்பரையாகப் புகட்டப்படும் உணர்வு. அறிவியல் முன்னேற்றத்தால் தீண்டாமை ஒழியாது. அரிச்சுவடியில் இருந்து கற்றுத் தர வேண்டிய விஷயம் அது!

சி.கார்த்திகேயன், சாத்தூர்.

இப்பவும் டி.எம்.எஸ். பாடல்களை மு.க.அழகிரி கேட்கிறாரா?

அதுக்கும் அரசியலுக்கும் என்ன சம்பந்தம்? போனால் போகட்டும் போடா; சட்டி சுட்டதடா; சோதனை மேல் சோதனை; அண்ணன் என்னடா தம்பி என்னடா என்று நிறைய டி.எம்.எஸ். பாடல்கள் இருப்பதை நான் உங்க ளுக்கு நினைவூட்டுகிறேன்!

ஆர்.சபரிவாசன், ஆற்காடு.

தூங்குவதற்காக மாத்திரைகள் இருப்பது போன்று, தூக்கம் வராமல் தடுக்க மாத்திரைகள் ஏதேனும் உண்டா? அதனால் பக்க விளைவுகள் ஏதேனும் வருமா?

உண்டே! கல்லூரிப் பருவத்தில் நான் வருஷம் பூராவும் படிக்காமல் பரீட்சைக்கு முந்திய நாள் மட்டும் பரபரப்பாக அந்த மாத்திரையை விழுங்கிவிட்டு (ஒரே ஒரு) ராப்பகல் படித்து, கரெக்டாக பாஸ் மார்க் (ஒரு மார்க் குறைச்சலா வாங்கினால் ஃபெயில்!) வாங்கியிருக்கிறேன். பை தி வே, எந்த மாத்திரைக்கும் - தொடர்ந்து உட்கொண்டால் - பக்க விளைவுகள் நிச்சயம் உண்டு!

ஹாய் மதன் கேள்வி - பதில்

அ.அறிவழகன், சென்னை-5.

ஆறு பேர் இருந்தால் போதும். அவர்கள் உதவியோடு நான் யாரை வேண்டுமானாலும் தொடர்புகொள்ளலாம். அதாவது, 'இட்லிதான் பெஸ்ட்’ என்று அறிவழகன் உங்களிடம் சொல்லச் சொன்னார்’ என்று எந்த நாட்டு வி.ஐ.பி-யிடமும் ஒருவர் மூலம் நேரில் சொல்லவைக்க முடியும்!’-இது என் நண்பர் சொன்ன கருத்து. இது நிஜம்தானா?!

நிஜம்தான்! இதற்கு '6 டிகிரீஸ் ஆஃப் செபரேஷன் தியரி’ (‘6 Degrees of separation Theory’) என்று பெயர். அதாவது, யாராக இருந்தாலும் சரி, அவருக்கும் உங்களுக்கும் நடுவில் இருப்பவர்கள் ஆறு பேர்தான் என்பதுதான் ஐடியா!

ஹங்கேரி நாட்டுக் கவிஞர் ஃப்ரிஜைஸ் காரின்தி (Frigyes Karinthy) எழுதிய 'சங்கிலி’ (Chains) என்கிற சிறுகதையில் ஒரு கதாபாத்திரம் மேற்படி பெருமையடித்துக்கொள்கிறார். 15 ஆண்டுகளுக்கு முன்புதான் இது ஓரளவுக்கு நிரூபிக்கப்பட்டது!

ஸ்டான்லி மில்க்ராம் என்கிற சோஷியாலாஜிஸ்ட் மற்றும் மனோதத்துவ நிபுணர் இதைச் செயல்படுத்திப் பார்த்தார். 300 பேர் இதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இலக்கு - ஏதேதோ நாடுகளில் வசிப்பவர் கள். அதில் 64 பேருடைய கருத்து - ஆறே பேர் மூலம் - இலக்கை அடைந்தது!

ஹாய் மதன் கேள்வி - பதில்

தியரிப்படி சுலபம். உதாரணம்: ஒபாமாவிடம் 'ஹாய் மதனுக்கு ஒரு கேள்வி அனுப்புங்களேன்’ என்று சொல்ல வேண்டும். எனக்குத் தெரிந்த டெல்லி நிருபரிடம் இதைச் சொல்கி றேன். அவருக்கு உள்துறை அமைச்சரைத் தெரியும். அமைச்சர் யு.எஸ்-ல் உள்ள இந்தியத் தூதரிடம் சொல்கிறார். தூதர் ஒபாமா வின் பி.ஏ-வுக்குச் சொல்ல, பி.ஏ. ஒபாமா காபி சாப்பிடும்போது 'ஹாய் மதனிடம் ஒரு கேள்வி கேளுங்களேன்!’ என்று சொல்ல முடியும். இதில் பிராக்டிக்கல் பிரச்னை நிறைய. அதனால்தான் 300 பேரும் இலக்கை அடையவில்லை!

எம்.மகிமுருகன், கடுவனூர்.

மன்னர்களின் அந்தப்புரத்தில் தங்களைக் கவர்ந்த விஷயம் எது?

மொத்தமாக அந்தப்புரம்தான்!