Published:Updated:

அற்புத விளக்கு

அற்புத விளக்கு
பிரீமியம் ஸ்டோரி
News
அற்புத விளக்கு

கவிதை: மு.மகுடீசுவரன்

அற்புத விளக்கு

ந்தாண்டுக்கு ஒருமுறை பயன்படும் 

அற்புத விளக்கொன்று

என்னிடம் உள்ளது.

விளக்கை பேரம்பேசியவர்களிடம்

அற்புத விளக்கு

விலைக்கில்லை’ என்றேன்.

விருந்துக்கு அழைத்தவர்களிடம்

அற்புத விளக்கு

விளக்கு உங்களுக்கில்லை’ என்றேன்

பட்டுப்புடவை கைப்பேசி என

ஆசைகாட்டியவர்களிடம்

அற்புத விளக்கு

விளக்கை அடமானம்வைக்க

விரும்பவில்லை’ என்றேன்

ஒருமுறை தேய்த்தால்

ஆண்டுகள் ஐந்தும்

ஒளிவீசும் விளக்கை

இருட்டில் தொலைக்க சம்மதமில்லை

என் ஆட்காட்டி விரல் மையோடு

இருள் தொலையட்டுமென

அற்புத விளக்கோடு காத்திருக்கிறேன்.