Published:Updated:

சேனல் செல்லங்கள்!

சேனல் செல்லங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
சேனல் செல்லங்கள்!

`பரிசல்' கிருஷ்ணா, படங்கள்: ஆ.முத்துக்குமார்

ஜாக்குலின்

‘`என்னைக் கலாய்க்கிறதால  எல்லாருக்கும் சந்தோஷம்னா, கலாய்ச்சுட்டுப் போகட்டுமே’’ என்கிற ஜாக்குலின்,  `கலக்கப்போவது யாரு?’ நிகழ்ச்சியின் கலகல தொகுப்பாளினி. நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள், நடுவர்கள் தொடங்கி போற வர்ற யார் கலாய்த்தாலும் சிரிப்புடனே கடந்துபோவதுதான் ஜாக்குலின் ஸ்பெஷல். ``8,000 பேர் கலந்துகொண்ட ஆடிஷனில் டாப் டென்னில் தேர்வானேன். அப்ப நான் சூப்பர் தானே’’ எனச் சொல்லும் ஜாக்குலின், இப்போது விஜய் டி.வி-யின் எனர்ஜி பூஸ்டர்.

சேனல் செல்லங்கள்!

‘`டி.வி தொகுப்பாளரா இருந்து மிகப் பெரிய ஹீரோவான சிவகார்த்திகேயன்தான் என் ரோல்மாடல். `கலக்கப்போவது யாரு?’ ஷோவைப் பார்த்துட்டு சிவகார்த்திகேயன் வாட்ஸ்அப் பண்ணினப்ப, எனக்கு ஆஸ்கர் அவார்டு கிடைச்ச மாதிரி இருந்தது. காலேஜ்லயும் இப்போ நிறைய ஃபேன்ஸ். நம்புங்க.. நான் விஸ்காம் ஃபர்ஸ்ட் இயர்தான் படிக்கிறேன்’’ எனக் கல்லூரி அடையாள அட்டையைக் காட்டி சத்தியம்பண்ணும் இவருக்கு, கரகர குரலே அடையாளம்.

நீ கலக்கு செல்லம்!

நட்சத்திரா

`சன் சிங்கர்' தொகுப்பாளினி நட்சத்திரா. இவரின் தமிழ் உச்சரிப்புக்கும் குரலுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள். “நான் ஒடிஸி டான்ஸர். டான்ஸ் ஷோ பண்ணிட்டிருந்தேன். அப்போ என் விஸ்காம் சீனியர்ஸுக்காக ஷார்ட் ஃபிலிம்ஸில் நடிக்க ஆரம்பிச்சேன். தந்தி டி.வி-யில் ஒரு ஆடிஷன் போகவேண்டிய ஃப்ரெண்டுக்குப் பதிலா கடைசி நேரத்தில் நான் போனேன். பெரிய ஆச்சர்யம், நான் செலெக்ட் ஆகிட்டேன்’’ என பில்டப் இன்ட்ரோ கொடுக்கிறார் நட்சத்திரா.

சேனல் செல்லங்கள்!

“மலேசியாவில் சைமா அவர்ட்ஸ் நிகழ்ச்சி நடத்தினதுதான் பெரிய அனுபவம்.  பாதி துபாய்ல - மீதி சென்னையில் படிச்சதால ஆரம்பத்துல தமிழே பேசத் தெரியாது. உச்சரிப்புக்காக ஸ்பெஷல் கிளாஸ் எல்லாம் போனேன். இப்ப என் உச்சரிப்புக்காக எல்லாரும் ஸ்பெஷல் கமென்ட்ஸ் போடுறது ரொம்ப சந்தோஷமா இருக்கு’’ என்கிறார்.

தீவிர சிவ பக்தரான நட்சத்திரா, பெசன்ட் நகர் ரத்னகிரீஸ்வரர் கோயிலுக்கு வாரம் தவறாமல் போவாராம்.

கூகுள் பண்றோம்... கோயிலுக்கு வழியைக் கண்டுபிடிக்கிறோம்!

ஃபரினா ஆஸாத்

``ஸ்கூல் படிக்கும்போது பெப்சி உமாவை ரொம்பப் பிடிக்கும். இந்த மாதிரி நாமும் தொகுப்பாளினியா ஆகணும்னு ஆசைப்பட்டேன். அப்படியே ஆகிட்டேன்” என்கிறார் ஃபரினா ஆஸாத். சன் டி.வி-யின் `கிச்சன் கலாட்டா' நிகழ்ச்சியின் மோஸ்ட் வான்டட் தொகுப்பாளினி. `கிச்சன் நிகழ்ச்சிதான். ஆனாலும் அவங்க டிரெஸ்ஸிங் ஸ்டைலுக்காகவே நிகழ்ச்சியைப் பார்ப்பேன்’ எனச் சொல்லும் ரசிகர்கள், ஃபரினாவுக்கு ஏராளம்.

சேனல் செல்லங்கள்!

“அதுக்குக் காரணம் என் ஸ்டைலிஸ்ட் சண்முகப்ரியாதான். இது வெறும் சமையல் நிகழ்ச்சினு வழக்கமான உடையில் வராம, கொஞ்சம் சிரத்தை எடுத்துப் பண்ணணும்னு திட்டம் போட்டோம். அது கவனிக்கப்படறதுல ரொம்ப மகிழ்ச்சி. சமையல் நிகழ்ச்சி பண்றதால அது சம்பந்தமான நிகழ்ச்சிகளைத் தேடித்தேடிப் பார்ப்பேன். அப்புறம் டிடி-யின் எந்த நிகழ்ச்சினாலும் விட மாட்டேன். ‘யாரடி நீ மோகினி’ சரண்யா மோகன் மாதிரியான க்யூட்டான ரோல்னா சினிமாவுக்கு ஓ.கே’’ என்கிறார்.

நோட் பண்ணுங்க... நோட் பண்ணுங்க!

ஷபானா

கலைஞர் டி.வி-யில் `விடியலே வா’, `இது நம்ம சினிமா’, இசையருவியில் `காதலுக்காக’, சன் டி.வி-யில் `தேவதை' சீரியல் என செம பிஸியாக இருக்கிறார் ஷபானா.

“வெளியில எங்கேயும் போக முடியலை. அப்படியே போனாலும் முகத்தை மறைச்சுட்டுத்தான் போறேன். பெரியவங்க சீரியல்ல பார்த்திருப்பாங்க; யங்ஸ்டர்ஸ் `இசையருவி’யில் பார்த்திருப்பாங்க. ஒரு தடவை, முகத்தை மறைச்சுட்டு கடையில நின்னு பேசிட்டிருந்தேன். பின்னால இருந்து ஒருத்தர் என் பேரைச் சொல்லிக் கூப்பிட்டார். அசந்துட்டேன். `எப்படி?’னு கேட்டதுக்கு, ‘உங்க குரலைவெச்சுத்தான்’ என்றார். `என் குரலுக்கே ரசிகர்களா!'னு ரொம்ப சந்தோஷமா இருந்தது” எனச் சொல்லும்போதே ஷபானாவின் முகத்தில் எல்இடி சிரிப்பு.

சேனல் செல்லங்கள்!

பொண்ணுக்கு சொந்த ஊர் காஞ்சிபுரம். ப்ளஸ் டூ முடிச்ச உடனே டி.வி-க்கு வந்துவிட்டாராம். `` `உங்களுக்குப் பிடிச்ச ஹீரோ யாரு... அவர்கூட யார் நடிச்சா பிடிக்கும்?’னு ஒரு ஷோல கேட்டிருந்தேன். ஒரு ரசிகர் கூப்பிட்டு ‘விஜய், எனக்குப் பிடிச்ச நடிகர். அவர்கூட நீங்க கதாநாயகியா நடிக்கணும் ஷபானா’னு சொன்னார். நல்லவேளை, விஜய் சார் அதை எல்லாம் பார்க்கலை’’ எனச் சிரிக்கிறார்.

“ப்ளஸ் டூ முடிச்சுட்டு ரெண்டரை வருஷம் சன் டி.வி-யில ஒழுங்கா வேலை பார்த்துட்டிருந்தேன். ‘நினைத்தது யாரோ’ படத்துல நடிக்க சான்ஸ் கிடைச்சு, போய் நடிக்கவும் செஞ்சேன். கடைசியில நான் நடிச்சதை எல்லாம் கட் பண்ணிட் டாங்க. அதனால் நோ சினிமா ஆசை’’ டிஸ்லைக் எமோஜி காட்டுகிறார் ஷபானா. ஆஹான்!