
எண்களும்...எண்ணங்களும்

``ஜெயலலிதா எண்ணுவதை, நாட்டு மக்கள் இனியும் நம்பத் தயாராக இல்லை. இந்த உண்மை, வானத்திலேயே பறந்துகொண்டிருக்கும் ஜெயலலிதாவுக்குத் தெரியாது; மண்ணில் இறங்கிவந்தால்தான் தெரியும்.''
- மு.கருணாநிதி

``2011-ல் நான் அளித்த தேர்தல் வாக்குறுதிகளின்படி நான் சொன்னதைச் செய்தேன். ஆனால் அதற்கும் மேலாக நான் சொல்லாத பலவற்றையும் செய்திருக்கிறேன்.''
- ஜெயலலிதா

“ஜெயலலிதா `சொன்னதைச் செய்தோம்’ எனக் கூறிக்கொண்டு வருகிறார். தன் ஆட்சியில் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயிலுக்குப் போவதாக எங்களிடம் சொன்னீர்களா?”
- சீமான்
66,635 ரூபாய், 2014-15ல் ஆண்டு தனிநபர் வருமானம் தமிழகத்தில்.
5.79 கோடி வாக்காளர்கள் தமிழகத்தில் உள்ளனர். இவர்களில், 1.80 கோடி பேர் ஃபேஸ்புக்கில் உறுப்பினர்களாக உள்ளனர். இது மொத்த வாக்காளர்களில் 31 சதவிகிதம்.