மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - திரையாக்கமும் திரைக்கதையும் - அதிஷா

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - திரையாக்கமும் திரைக்கதையும் - அதிஷா
பிரீமியம் ஸ்டோரி
News
ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - திரையாக்கமும் திரைக்கதையும் - அதிஷா

நூல் அறிமுகம்

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - திரையாக்கமும் திரைக்கதையும் - அதிஷா

‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்தின் திரைக்கதை நூல் தனித்துவமான ஒன்று. காரணம், இது திரைக்கதையோடு அது உருவானவிதம் குறித்தும் விரிவாகப் பேசுகிறது. புரிந்துகொள்ள முடியாத சில சிக்கலான சினிமா விஷயங்களை உதாரணங்களோடு உடைத்துப்போடுகிறார் மிஷ்கின்.

படத்தின் இறுதிக்காட்சி, ஒரு பெரிய வணிகவளாகத்தின் கார் நிறுத்துமிடத்தில் நடக்கும். அந்த இடத்தில் கத்தரிப்பூ வண்ணம் நிறைந்திருக்கும். `அது தற்செயலானதல்ல’ என்கிறார் மிஷ்கின். அப்படி ஒரு நிறமுள்ள, வலைப்பின்னல் போன்ற இடத்தை ஏன் தேடித்தேடித் தேர்ந்தெடுத்தார் என்பதையும் குறிப்பிடுகிறார்...

‘`Color symbolism-ல் கத்தரிப்பூ வண்ணம், இறப்பு மற்றும் மறுபிறப்பைக் குறிக்கிறது.இதுதான் என் க்ளைமேக்ஸுக்கும் தேவை.’’

இடங்கள் மட்டுமல்ல; ஒவ்வோர் பாத்திரத்தையும் எப்படித் தேர்ந்தெடுத்தார், அவர்களை எப்படித் தயார் செய்தார் என்பதையும் விளக்குகிறார். ஒவ்வொரு காட்சியையும் எடுத்துக்கொண்டு அந்த ஒற்றைக் காட்சியை உருவாக்கியவிதம் குறித்து முழுமையாகப் பேசுகிறார்.

படத்தின் மிக முக்கியமான காட்சி, சுடுகாட்டில் கதைநாயகன் சொல்கிற கதை. ஏன் சுடுகாட்டில்... நாயகன் தன்னுடைய கதை முழுவதையும் விலங்குகளின் வழி சொல்கிறான்... பார்வையாளனை நோக்கிப் பேசுவது ஏன்... பின்னணியில் ஃப்ளாஷ்பேக் ஏன் காட்டப்படவில்லை..? இப்படி பல கேள்விகளுக்கும் விடையளிக்கிறார் மிஷ்கின். இதுமாதிரியான காட்சிகளை உருவாக்கும்போது, ஒரே ஆளுக்குள் இருவேறு குணாதிசயங்களான இயக்குநருக்கும் எழுத்தாளனுக்குமான போராட்டமும் வெளிப்படுகிறது. வசனம் எழுதும்போதே ‘இந்தக் காட்சிக்கு ஒரே ஷாட்தான், 50mm lens, below eyelevel’ என எழுதிவைத்திருந்ததைக் குறிப்பிடுகிறார்.

திரைப்பட ஆக்கம் தொடர்பான தொழில்நுட்பத்  தகவல்கள் நாளைய இயக்குநர்களுக்குப் பயன்படலாம்.  ஒவ்வொரு காட்சியையும் வாசித்துக் கடக்கும்போது, ஒரு க்ரைம் த்ரில்லர் எந்தப் புள்ளியில் கலைப்படமாக உருவெடுக்கிறது என்பதை உள்வாங்கிக்கொள்ள முடிகிறது. ஒவ்வொரு ஷாட்டுக்குமான அர்த்தமும் புலப்படத் தொடங்குகிறது. இவ்வகை நூல்கள், நம்முடைய திரைப்படங்கள் குறித்த அசலான புரிதல்களை உருவாக்கவல்லவை. அதனாலேயே இந்தப் புத்தகம் இக்காலகட்டத்தின் அவசியமான ஒன்றாகிவிடுகிறது.

வெளியீடு: பேசாமொழி பதிப்பகம், #1, ஸ்ருதி அபார்ட்மெண்ட், காந்தி நகர், முதல் குறுக்குத் தெரு, அடையாறு, சென்னை-600 020. பக்கங்கள்: 624. விலை: ரூ.600