சினிமா
Published:Updated:

10 செகண்ட் கதைகள்

10 செகண்ட் கதைகள்
பிரீமியம் ஸ்டோரி
News
10 செகண்ட் கதைகள்

ஓவியங்கள்: ஸ்யாம்

10 செகண்ட் கதைகள்

நம்பு ராஜா!

பெயரியல் நிபுணர் தம்பியண்ணா சொன்னார்... ``பேர் மாத்தினா பிரச்னை எல்லாம் தீர்ந்துடும். உங்க பேர் சொல்லுங்க.”

``தம்பியண்ணா’’ என்றான் அவன்.

- நந்த குமார்

10 செகண்ட் கதைகள்

உதவிக்கு வந்தவர்கள்

போலீஸைக் கண்டதும் ஆசுவாசமானான், பொதுமக்களிடம் மாட்டிய திருடன்!

 - பெ.பாண்டியன்

10 செகண்ட் கதைகள்

விருதுக்கு மரியாதை!

சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது பெற்றவரோடு செல்ஃபி எடுத்துக்கொண்டான் மகேஷ்.

- ஜோஷனா

10 செகண்ட் கதைகள்

சோதனை

வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த ஏட்டை அழைத்த இன்ஸ்பெக்டர், ``எங்கே ஊதிக் காட்டு’’ என்றார். 

- அ.ரியாஸ் 

10 செகண்ட் கதைகள்

கூலி

கள்ளக்காதலியின் கணவனைத் தீர்த்துக்கட்ட அனுப்பிவைத்த போட்டோவைப் பார்த்ததும் அதிர்ந்தான் கூலிப்படைத் தலைவன்.

- சி.சாமிநாதன்

10 செகண்ட் கதைகள்

பரிமாற்றம்

விடுமுறைக்குப் பிறகு பள்ளிக்கு வந்த ராகேஷும் நவீனும் தங்களுடைய கேம் சி.டி-யைப் பரிமாறிக்கொண்டார்கள்.

- ஜோஷனா

10 செகண்ட் கதைகள்

6 செகண்ட் கதை

`பத்து செகண்ட் கதைக்கு’, கதை எழுதிவிட்டுப் படித்துப் பார்த்தான்... இன்னும் நாலு செகண்ட் மீதம் இருந்தது.

- ராஜ்குமார்

10 செகண்ட் கதைகள்

நீதி எனப்படுவது...

பிட் அடித்த மாணவனுக்கு மதிப்பெண்ணைக் குறைத்தார், `Answer key’ உதவியுடன் திருத்திய ஆசிரியர்.

- கை.அக்ஷதா

10 செகண்ட் கதைகள்

உயிர்... உடல்... குடி!

குடியால் செத்தவன் குடும்பத்திடம் குவார்ட்டருக்கு காசு கேட்கிறான்... போஸ்ட்மார்ட்டம் செய்தவன்!

- பெ.பாண்டியன்

10 செகண்ட் கதைகள்

 அப்லோடு

``ஃபேஸ்புக்ல எல்லாம் எதுக்கு போட்டோ போடுறே?’’ என்று மகளை கண்டமேனிக்குத் திட்டிவிட்டு, அனைத்து மேட்ரிமோனிகளிலும் மகளின் புகைப்படத்தைப் பதிவேற்றினார் தந்தை.

- ரூபிணி

10 செகண்ட் கதைகள்

அதிகபட்சம் 10 நொடிகளுக்குள் வாசித்துவிடக்கூடிய ‘நச்’ கதைகள் அனுப்ப வேண்டும். பிரசுரமானால் பரிசு ` 500. உங்கள் கதைகளை 10secondstory@vikatan.com என்ற ஐ.டி-க்கு அனுப்பலாம்!