உலகம் பலவிதம்
சினிமா
Published:Updated:

அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

அலசி ஆராய்வது அப்பாடக்கர்!
பிரீமியம் ஸ்டோரி
News
அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

தட் `சரியாத்தான் பேசுறேனா’ மொமென்ட்:

சசிகலா புஷ்பா, ஜெயலலிதா மீது புகார் சொன்னதும் ஏகப்பட்ட புகார் அவங்க மேல பூமராங்காத் தாக்குது. இப்போ ரெண்டு கேள்விகள். அப்போ ஜெயலலிதாவைப் பற்றி சசிகலா புஷ்பா புகார் சொல்லாம இருந்தா, அவங்க என்ன தப்பு பண்ணினாலும் பரவாயில்லையா? பொதுவா தன் கட்சிக்காரங்க தப்பு பண்ணினா ஜெயலலிதாவே நடவடிக்கை எடுப்பாங்கனு ஒரு இமேஜ் இருக்கே, இதுநாள் வரைக்கும் ஏன் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்கலை? சொல்லுங்க மம்மி சொல்லுங்க!

அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

தட் ‘செய்வீர்களா நீங்கள் செய்வீர்களா?’ மொமென்ட்:

பெண்களின் பிரசவ விடுமுறைய 26 வாரங்களாக அறிவிச்சிருக்கு மத்திய அரசு. ‘குழந்தையைக் கவனிக்கிறதில் ஆண்களுக்கும் பங்கிருக்கு. அதனால் ஆண்களுக்கும் லீவு தரணும்’னு பெண் எம்.பி.க்கள் கோரிக்கை வெச்சிருக்காங்க. நியாயமான விஷயம்தான். ஆனா லீவு வாங்கிட்டு பொண்டாட்டியைக் கவனிக்காம போனும் கையுமா இருக்கிறது, ஃபேஸ்புக்கே கதின்னு இருக்கிறது, நண்பர்களோட ஊர் சுத்தக் கிளம்புறதுனு ஆரம்பிச்சிடக்கூடாது ஆம்பளைகளா!

தட் ‘பண்ணாலும் பண்ணுவாங்களோ’ மொமென்ட்:

ஒருபக்கம் ரயில்வே ஸ்டேஷன்ல கொலை நடக்குது. இன்னொரு பக்கம் ரயில் கூரையில் ஓட்டையைப் போட்டு, ஆட்டையைப் போடுறாய்ங்க. இதுக்கெல்லாம் பரிகாரமா ரயில் போறதுக்கு முன்னால எலுமிச்சம்பழத்தை வெச்சு நசுக்கிறது, கோமியத்தை ஒவ்வொரு ஸ்டேஷன்லேயும் தெளிக்கிறது, பிரமாண்டமான யாகம் நடத்தி ஒவ்வொரு ஸ்டேஷன்லயும் பூஜை பண்றது, முக்கியமா ரயில்வே ஸ்டேஷன் பேரெல்லாம் சம்ஸ்கிருதத்தில் மாத்துறதுனு பா.ஜ.க. கவர்ன்மென்ட் இறங்காம இருக்கணும்!

அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

தட் ‘நம்பிக்கை... அது இல்லை வாழ்க்கை’ மொமென்ட்:

‘அம்மா வாரச்சந்தையில் தங்கம், வெள்ளி நகைகளும் கிடைக்கும்’னு சொல்றாங்க. அம்மா டாலர் போட்ட செயின், அம்மா மூக்குத்தி, அம்மா வளையல்னு வரிசையா விற்றாலும் கண்டிப்பா அம்மா கொலுசு மட்டும் விற்க மாட்டாங்க. அம்மா காலில்தான் அடுத்தவங்க விழணுமே தவிர, அம்மா படம் போட்ட கொலுசு அடுத்தவங்க காலில் விழக் கூடாதுல்ல!

அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

தட் ‘லாரி போயிடுச்சா, போகலாமா’ மொமென்ட்:

மத்தியப் பிரதேசத்தில் எட்டாம் வகுப்பு மாணவன் ஒருத்தன் மோடிக்கு லெட்டர் எழுதியிருக்கான். அதாகப்பட்டது ஸ்கூல் பஸ்ஸையெல்லாம் மோடி வருகையை முன்னிட்டு கூட்டத்துக்கு ஆட்களை ஏத்திட்டுப்போகப் பயன்படுத்துறாங்களாம். அதுதானாம். ஹ்ம், முதலைமச்சர் மாய்ஞ்சு மாய்ஞ்சு எழுதற லெட்டர்களையே மோடி படிக்கிறதில்லை. என்னத்த..!