உலகம் பலவிதம்
சினிமா
Published:Updated:

ஹா[லிவு]ட் டைரி

ஹா[லிவு]ட் டைரி
பிரீமியம் ஸ்டோரி
News
ஹா[லிவு]ட் டைரி

ஹா[லிவு]ட் டைரி

ஹா[லிவு]ட் டைரி

‘எ சிண்ட்ரெல்லா ஸ்டோரி’ ‘ரைஸ் யுவர் வாய்ஸ்’, ‘தி லிஸி மேக்கையர் மூவி’ போன்ற படங்களில் நடித்த ஹிலாரி டஃபின் ஹாட் பக்கங்களை இந்த வாரம் பார்க்கலாம்.

ஹிலாரியின் சகோதரி ஹெய்லி டஃப்பும் பல திரைப்படங்களில் நாயகியாக நடித்து இருக்கிறார். கண்ணா, ரெண்டு லட்டு தின்ன ஆசையா?

2002-ம் ஆண்டு வெளியான ‘டட்டியோ’ என்ற தொலைக் காட்சித் தொடருக்காக முதலில் தேர்வு செய்யப்பட்ட ஹிலாரியை, ஏனோ நீக்கிவிட்டார் களாம். அதனால், இனி நடிக்கவே கூடாது என முடிவு எடுத்தாராம் ஹிலாரி. நல்லவேளை!

வரது முதல் ஆல்பமான  ‘மெடமார் போஸிஸ்’, வெளியான ஐந்து மாதங்களுக்்குள் 2.6 மில்லியன் சி.டி-க்கள் விற்று ஹிட் அடித்தது. பைரசி எல்லாம் அங்க இல்லையோ!

2004-ம் ஆண்டு ‘எ சிண்ட்ரெல்லா ஸ்டோரி’ என்னும் திரைப்படத்தில் நடித்தார் ஹிலாரி. சிண்ட்ரெல்லா கதை மிகவும் பிடித்ததால்தான் அந்தக் கதையில் நடிக்க ஒப்புக் கொண்டாராம். அழகிய சிண்ட்ரெல்லா!

ஹா[லிவு]ட் டைரி

டிகை, பாடகி  என அசத்தும் ஹிலாரிக்கு 2003-ம் ஆண்டிற்கான ஹாட்டான டீன் விருது வழங்கப்பட்டது. இப்பவும் ஹாட்தான்!

ஹிலாரி டஃப் சாயலில், பார்பி பொம்மை ஒன்றை உருவாக்கி இருக்கிறார்கள். ஹிலாரியே பார்பி பொம்மைதானே!

‘பல பெண்களுக்கு நல்லாப் பேசுற பசங்களைத்தான் பிடிக்கும். ஆனா, எனக்கு நடுக்கத்தோடு வந்து பேசும் நபர்களைத்தான் பிடிக்கும். ஏனென்றால், அவர்கள்தான் நல்லவர்கள்’ என்கிறார் ஹிலாரி. உங்களுக்குத் தெரியுது!

- ஃபாலோயர்