
ஆஃப் த ரெக்கார்டு!
தான் நடித்த மூன்று படங்கள் வரிசையாக மண்ணைக் கவ்வியதால் உயிர் நடிகர் நடிக்க இருந்த இரண்டு படங்கள் டிராப் ஆகிவிட்டதாம். இதனால், தான் நடித்துள்ள காமெடிப் படமும், பேய்ப் படமும் வெற்றியடைய வேண்டும் என அதிகம் கவனம் எடுத்து வருகிறாராம்!
கன்னக்குழி நடிகை சமீபத்தில் ஓர் இசை வெளியீடு முடிந்தபிறகு ஒரு ஹோட்டலில் டின்னர் சாப்பிட்டாராம். அதில் அவர் மது அருந்தும்போது புகைப்படம் எடுத்த நபர், அதை நெட்டில் விட அது வைரலாகிவிட்டதாம். இதனால் அந்த நபரைப் பிடித்து செம டோஸ் விட்டாராம் நடிகை!

பெரிய நம்பர் நடிகையைப் பார்த்து நானும் ஹீரோயின்தான் என நாயகியை மையப்படுத்திய படங்களாக நடிக்கத் தொடங்கினார் சின்ன நம்பர் நடிகை. முதல் படமே அதல பாதாளத்தில் விழுந்துவிட, அவர் நடித்துவந்த இன்னொரு படத்தை 20 நாட்களில் டிராப் செய்துவிட்டார்களாம்!
ஸ்கை பட இயக்குநரும் யோகா நடிகையும் ஒருகாலத்தில் காதலித்தனர். தற்போது இயக்குநர் வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். அழைப்பு விடுத்திருந்தும் கடைசிவரை இயக்குநரின் திருமணத்திற்கு வரவில்லை நடிகை!
பன்ச் நடிகருக்கு சில வருடங்களுக்கு முன்பே தலைமுடி உதிரும் பிரச்னை இருந்ததாம். அதற்கு சிகிச்சையும் எடுத்தார். தற்போது மீண்டும் அதே பிரச்னை எட்டிப்பார்த்ததால், அமெரிக்கா போய் மீண்டும் தலைமுடி அடர்த்தியாக வளர சிகிச்சை எடுத்து வந்திருக்கிறாராம்!