உலகம் பலவிதம்
சினிமா
Published:Updated:

நாடித்துடிப்புக் கேட்குதா?

நாடித்துடிப்புக் கேட்குதா?
பிரீமியம் ஸ்டோரி
News
நாடித்துடிப்புக் கேட்குதா?

நாடித்துடிப்புக் கேட்குதா?

லகம் முழுவதும் புதிது புதிதான டிசைன் களில் தினந்தோறும் எண்ணற்ற மோதிரங்கள் வந்துகொண்டிருக்கின்றன. செக் நாட்டு நிறுவனம் பல நாட்டு ஆராய்ச்சியாளர்கள் உதவியோடு இரண்டரை வருடங்களாக ஒரு புதிய மோதிரத்தை வடிவமைத் துள்ளது. அப்படி என்ன ஸ்பெஷல்?

நாடித்துடிப்புக் கேட்குதா?

அறிவியல் வளர்ச்சி அடைவதற்கு முன்னால், சுண்டுவிரலுக்கு அருகே இருக்கும் விரலில் இருந்து இதயத்திற்கு நேரடியாக ஒரு நரம்பு செல்வதாக ஒரு நம்பிக்கை இருந்தது. லத்தீன் மொழியில் காதல் நரம்பு என்றழைக்கப்பட்ட இந்த நரம்பு நான்காவது விரலில் இருந்ததாக நம்பப்பட்டது. இதன் காரணமாகத்தான் உன்னை இதயத்தில் வைத்துப் பாதுகாப்பேன் என்பதை உணர்த்துவதற்காகவும், இரு இதயங்கள் இணைவதையும் குறிப்பிடுவதற்காகவும் திருமணத்தின்போது மோதிர விரலில் மோதிரம் அணியும் பழக்கம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் செக் குடியரசைச் சேர்ந்த நிறுவனமான ‘தி டச்’ புதிதாக ஒரு மோதிரத்தை வடிவமைத்துள்ளது. இதைத் தம்பதிகள் அணிந்துகொண்டால் ஒருவருக்கொருவர் தனது நாடித்துடிப்பை பகிர்ந்துகொள்ள முடியும். நான்கு மில்லிமீட்டருக்கும் குறைவான தடிமன் கொண்ட இந்த மோதிரத்தின் உள்ளே ப்ளூடூத், சென்சார், அதிர்வலைகளை ஏற்படுத்தும் ப்ராசசர் கொண்ட மோட்டார் அனைத்தும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நாடித்துடிப்புக் கேட்குதா?

தம்பதியினர் விருப்பப்படும் நேரத்தில் மோதிரத்தில் உள்ள சென்சார் மீது தங்களது விரல்களால் அழுத்திப் பிடித்தால் போதும். சென்சார்கள் மூலம் ப்ளூடூத் வழியாக சிக்னல்கள் அனுப்பப்பட்டு, ஜோடி உலகின் எந்த மூலையில் இருந்தாலும் மோதிரத்தில் உள்ள மோட்டார் நாடித்துடிப்பைப் போல் அதிர்வலைகளை ஏற்படுத்தும். இதன் மூலம் தம்பதியினர் நான் உன்னை நினைத்துக்கொண்டிருக்கிறேன் என்பதை உணர்த்தலாம் என இந்நிறுவனம் தெரிவிக்கிறது. விலை என்னன்னு கேட்கிறீங்களா? ஒரு ஜோடி மோதிரம் 40,000-த்தில் தொடங்கி இரண்டு லட்சம் ரூபாய் வரை போகிறது. அடப் போங்க பாஸ்! இங்கே கல்யாணத்துக்கு மறுநாளே நகையெல்லாம் அடகுக்குதான் போகுது!

-கருப்பு