
கொஞ்சம் கொஞ்சமா உயருது!

லேடி காகா பல விழாக்களில் அணிந்துவரும் ஆடைகள் மட்டுமல்ல, ஹை ஹீல்ஸ்களும் கண்களை அகல விரிய வைத்தவைகள்தான்! இதோ சில தலைப்புச் செய்திகளாக மாறிய ஷூக்கள் டீட்டெயில்ஸ்.
* 2010-ம் ஆண்டு கிராமி விருது விழாவில் 10 இன்ச்களில் கற்களுடன் மின்னிய வெளிர் வயலெட் நிற ஷூ. கொஞ்சம் ஓவராத்தான் இருக்குல்ல!
* 2011- ம் ஆண்டில் எம்.டி.வி வீடியோ மியூஸிக் ஜப்பான் நிகழ்ச்சியில் ஆறு இன்ச் தங்க நிற ஷூ. இது சற்றே ஓகே ரக சைஸ் என்பதால் இந்த ஷூக்களுக்கு ஃபேஷன் விரும்பிகள் பலரும் அடிமை!
* 2011-ம் ஆண்டு CFDA ஃபேஷன் விருது விழாவில் 6, 10 எனக் கடந்து இன்னும் கொஞ்சம் முன்னேற்றம். 12 இன்ச் ஹை ஹீல்ஸ் அணிந்துவந்து அனைவரையும் வாயைப் பிளக்க வைத்தார். அந்த விழாவில் அம்மணி அணிந்து வந்த உடையும் கொஞ்சம் கண்ணைக் கட்டியது!
* 2011-ம் ஆண்டு அடுத்த சிவப்புப் புரட்சி. 24 இன்ச்களில் ஷூக்களை அணிந்துவந்த லேடி காகாவே கொஞ்சம் அசைந்துதான் வந்தார். அந்த ஷூக்களை அணிந்துவந்த காகா நடக்க முடியாமல் காதலரின் தோள்பட்டைகளைப் பிடித்து நின்றது வரலாற்றுச் சம்பவம். அடுத்த நிகழ்ச்சியில் இன்னும் கொஞ்சம் ஓவராக ஹீல் லெஸ் ஷூ ஒன்றை அணிந்துவந்து நிற்கக்கூட முடியாமல் கடைசியில் காதலர் தூக்கிச் சென்ற பரிதாபமும் அரங்கேறியது. அய்யோ பாவம்!

* இதோ சென்ற வருடம் லேடி காகா கரும்பச்சை நிறத்தில் அணிந்துவந்த ஏலியன் ஷூக்கள்தான் இன்னும் அட்ராசிட்டி ரகம். இந்த ஏலியன் ஷூக்களை அனகோண்டா தோல் டிசைனில் அணிந்து வந்தது இன்னொரு அட்ராசிட்டி. என்னமா நீ இப்படிப் பண்றியேம்மா பாணியில் ரெண்டு கட்டைகளுக்குள் கால்களை வைத்து நின்றால் எப்படி இருக்குமோ அப்படியே வந்து U2 கான்செர்ட்டில் போஸ் கொடுத்தார். இதில் ஏறி நிற்கவே நமக்கு ஒரு மாத காலம் ஆகும்!
* லேட்டஸ்ட்டாக அமெரிக்காவின் காலா 2016 ரெட் கார்ப்பெட்டில் அம்மணி அணிந்துவந்த ஸ்கை ஹை ஹீல் இதுவே. ஷூக்களை கொஞ்சம் ஹைலைட் செய்வதற்காகவே சர்க்கஸ் பெண்கள் உடையில் வந்து கிறங்கடித்தார். லேடி காகாவின் இந்த அரிய ஷூக்களை வருடா வருடம் புதிதாக யோசித்து உருவாக்குகிறது உலகத்தர காலணித் தயாரிப்பு நிறுவனம் மெக்குயின் (McQueen). இந்நிறுவனத்தின் பிரதான வேலையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் ஷூக்களை உருவாக்குவதுதான்.
ஷூன்னா சும்மா இல்லை!
-ஷாலினி நியூட்டன்