உலகம் பலவிதம்
சினிமா
Published:Updated:

சினிமா விடுகதை!

சினிமா விடுகதை!
பிரீமியம் ஸ்டோரி
News
சினிமா விடுகதை!

சினிமா விடுகதை!

`காமெடி கிங்' கவுண்டமணியின் சினிமா டைட்டில்கள் தான் இந்த வார சினிமா விடுகதைள் பாஸ்!

சினிமா விடுகதை!

1. கூட்டாஞ்சோறு குடும்ப சினிமா. கடல் பேரு ஞாபகம் வருமா... `நான் மாப்ள இல்லீங்கோ' என்று தலைவன் சொன்ன சினிமா! செல்வராசு, தங்கராசு, சின்னராசுக்கு சித்தப்புவாக கெத்து காட்டினாலும் சுமாரா பறந்துச்சு பறக்காஸ் டைரக்டரோட சினிமா.

2. காமெடி சரக்கை காமெடி கிங் அள்ளித் தந்த சினிமா! `அழகிய லைலா'வைக் காட்டிய ஜில் ஜில் சினிமா! 'டெம்போ வெச்செல்லாம் கடத்தி இருக்கோம்' என்று சொன்னால் ஈஸியா சொல்லிடுவீங்கதானே?

3. எமனாய் நடித்த `தூம் தாதா' சினிமா. `அதிர்ஷ்டக்கார ஆளு'க்கு பாக்ஸ் ஆபீஸில் அதிர்ஷ்டமில்லையே..!  என்ன சினிமா இந்த சினிமா?

4. `மோட்டார் அமைவதெல்லாம் அவனவன் செய்த வினை' என்ற அரிய தத்துவம் எட்டாயிரத்து பன்னிரெண்டை மறக்க முடியுமா? அரசப்பெயர் கொண்ட சினிமாவில் சின்னக்கவுண்டரும் பெரிய கவுண்டரும் இருக்காங்க! என்ன படம்னு சொல்லுங்க?

சினிமா விடுகதை!

5. ஆச்சி மனோரமாவுக்கு போட்டியா கலக்கிய ஆளுக்கு `புளியன் பிரியாணி' பார்சேல்! சீட்டிங் சேட்டை செய்யும் குரங்கு கண்ணாயிரத்துக்கு ஆயிரம் பொற்காசு பார்சேல்!

6. உலகநாயகனோடு கலகம் செய்த சினிமா. ட்ரம்ஸ் வாசிக்கத் தெரிந்த கருவாட்டு நேசன் போல வருமா? மைக்கேல் ஜாக்சன் தங்கச்சியோட நடிச்ச படத்துல `வரமாட்டா சுமதி... தரமாட்டா அமைதி... வரப்போறோம் நாங்க...தரப்போறோம் வீங்க'னு கவிதையைக் கேட்டோமே!

7. மாலைக்கண் கந்தசாமிக்கு `சூப்பரப்பு'னா ரொம்பப் பிடிக்கும். செந்தில் இல்லாமலே அப்பாவை `டேய்' சொன்ன படத்துல ஹீரோவுக்கு தாலி கட்டப் பிடிக்கும். மீசை `சின்ன'தா இருந்தாலும் பெருசா பேச வெச்சாரே நம்ம ஆளு!

8. காமெடியே `சத்திய சோதனை' தான் என்பதையும்,  `அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா' என்ற தத்துவத்தையும் நமக்கு சொன்ன ராமசாமி சினிமா! பதில் தெரியலைனா `டெலிகேட் பொசிஷன்' பாஸ்!

-சரவ்

விடைகள்: 1. சமுத்திரம், 2. உள்ளத்தை அள்ளித்தா, 3. லக்கி மேன், 4. சேரன் பாண்டியன், 5. நடிகன், 6. சிங்காரவேலன், 7. சின்னதம்பி, 8. சூரியன்