மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஹாய் மதன் கேள்வி - பதில்

புன்னகை ஆயுதம்!

கண்.சிவகுமார், திருமருகல்.

தங்கள் பார்வையில் கவர்ச்சியான நடிகை?

ஹாய் மதன் கேள்வி - பதில்

நடிகைகளை '2டி’-யில் பார்த்து உணர்ச்சிவசப்படுகிற குணம் எனக்குச் சிறு வயதில் இருந்தே இருந்தது இல்லை. என்னைப் பொறுத்தவரையில் கவர்ச்சி என்பது பெண்மையின் வசீகரம். அதை நிறையவே கொண்டு இருந்தவர்கள் ஆட்ரி ஹெப்பர்ன், வஹிதா ரஹ்மான், ஸ்மிதா பாட்டீல், ஏஞ்சலினா ஜோலி!

ரொம்ப யோசித்தால் இன்னும் இரண்டு மூணு பேர் தேறலாம்!

##~##

சுப்பிரமணிய பாரதி, மணப்பாறை.

என் நண்பன் 'ஒரு பெண்ணின் வயிற்றுக்குள் இருந்த கருவுக்குள் ஒரு கரு இருந்ததாக’ ஏதோ ஒரு புத்தகத்தில் படித்தேன் என்று சொன்னான். அது சாத்தியமா?

ஓரளவுக்கு உண்மைதான்! இரண்டு தலை, நான்கு கண்கள், நான்கு கைகளோடு எல்லாம் குழந்தை பிறப்பது அதனால்தான். கருக்கள் தனித் தனியாக வளராமல் கலந்துவிடுவதுதான் காரணம். ஒரு கருவுக்கு உள்ளே இன்னொரு கரு வளராது. ஆனால், ஒரு வகை ஈ இருக்கிறது. அதில் ஆண் வர்க்கமே கிடையாது. பிறப்பது பெண் ஈதான். பிறக்கும்போதே அதன் வயிற்றுக்குள் பெண் கரு இருக்கும். அதாவது, உடலுறவே    இல்லாமல் அம்மா, மகள், பேத்தி... இப்படி!

விஜயலட்சுமி, சென்னை-74.

பொய்யை எப்போது ரசிக்க முடியும்?

ஒரு பெண் தன் காதலனிடம் 'ஐ ஹேட் யூ!’ என்று கிரீச்சிட்டுச் சொல்லும்போது!

கோதை ஜெயராமன், மீஞ்சூர்.

காதலிக்காமல் ஆண், பெண் நட்பாக வலம் வருவது சாத்தியமா?

'பஞ்சும் நெருப்பும்!’ என்று சொன்னது அந்தக் காலம். இப்போது ஆணும் பெண்ணும் நட்பாக மட்டும் இருக்க முடியும் என்று இளைய தலைமுறை நிரூபித்துக்கொண்டு இருக்கிறது. வீணாகச் சந்தேகப்பட்டால், அது உங்கள் பாடு!

அதுவே, நாலு வருடங்களாக நட்பாக இருந்துவிட்டு, பிறகு திடீர் என்று காதல் மலரவும் வாய்ப்பு உண்டு. கூடாது என்று எந்தச் சட்டமும் இல்லை!

வண்ணை கணேசன், சென்னை.

ஒரு காரியத்தை சுடச்சுடச் செய்தால் வெற்றியடைய முடியுமா, ஆறப்போட்டு செய்தால் வெற்றியடைய முடியுமா?

ஆறப்போட்டால் களிமண்ணால் பானை செய்ய முடியாது. ஆறப் போட்டு உலர்த்திய பிறகுதான் சட்டையை 'அயர்ன்’ பண்ணி அணிந்துகொள்ள முடியும்!

வெ.கா., கடையநல்லூர்.

வேலை என்றால் புரிகிறது. 'வெட்டி’ என்றால் என்ன?

'வெட்டி வேலை’யாகக் கருதாமல் உங்களுக்காக அக்கறையோடு தமிழ்அகராதி யில் பார்த்தால்... தலை சுற்றுகிறது. 'வெட்டி’க்கு அவ்வளவு அர்த்தங்கள்!

சில இதோ... வழி (ஒற்றையடிப் பாதை), மண்வெட்டி, கடுகடுப்பு, பழைய வரி வகை, வெட்டி வேர், இலவசம், வெட்டி வீழ்த்துவது, உபயோகமின்மை, வீண் வார்த்தை. எதுவா னாலும் நீங்கள் பயன்படுத்துகிற விதத்தில் இருக்கிறது!

விஜயலட்சுமி, சென்னை-74.

ஹாய் மதன் கேள்வி - பதில்

ஊழல் (பெருச்சாளி) அரசியல்வாதிகளை ஒரு தேர்தலில் தோற்கடித்தாலே போதும்; அதுவே மிகப் பெரிய தண்டனை என்று கருதும் மக்களின் மனோபாவம் சரிதானா?

இந்திய ஜனநாயகத்தில் நீங்கள் ரொம்பவே ஆசைப்படுகிறீர்கள்! அரசியல்வாதியைத் தேர்தலில் ஒருமுறை தோற்கடித் தால் அவருக்கு எவ்வளவு இழப்பு  தெரியுமா? சுமார்

ஹாய் மதன் கேள்வி - பதில்

1,000 கோடி கூட இருக்கும்! அது மக்கள் விதிக்கும் அபராதம்தானே?! (இப்படி ஏதாவது சொல்லி நாம் சமாளிக்க வேண்டியதுதான்!)

அ.உமர், கடையநல்லூர்.

தங்களுக்குப் பிடித்த தற்காப்புக் கலை எது?

புன்னகை!