
FOREIGN சரக்கு!

கடந்த வாரம் வெளியான ‘சூசைட் ஸ்குவாட்’ படம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று இருக்கிறது. படத்தில் வில்லியாக நடித்த காரா டெலெவிங்னே ஷூட்டிங்கில் பிறரைக் கொல்வதுபோல் பல காட்சிகளில் நடித்து இருந்தார். 23 வயதான காராவோ அது ஷூட்டிங் எனத் தெரிந்தும், அதை உண்மையென நம்ப ஆரம்பித்துவிட்டாராம். இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு?

அமெரிக்க நடிகையான வினோனா ரைடர், 2001-ம் ஆண்டு ஒரு கடையில் 5,500 அமெரிக்க டாலர் மதிப்புள்ள பொருட்களைத் திருடியுள்ளாராம். திருடுவது என்பது இந்த நூற்றாண்டின் கொடூரமான குற்றம் ஒன்றும் இல்லையே எனக் கேள்வியும் எழுப்பி இருக்கிறார். அதேபோல் தனக்கு வயதாவது பிடித்து இருப்பதாகவும், இளமையாய் இருக்க சிகிச்சை எதுவும் செய்துகொள்ள மாட்டேன் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார். டெரர்!

‘ப்ரிட்ஜெட் ஜோன்’ஸ் டைரி’ ‘சிகாகோ’ போன்ற படங்களில் நடித்தவர் ரெனி ஜெல்வெகெர். ‘இந்தப் பொண்ணு இவ்வளவு அழகெல்லாம் இல்லையே... பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணி இருக்கும்’ எனப் பலர் சமூக வலைதளங்களில் எழுத கடுப்பாகிவிட்டார் ரெனி. நீண்டதொரு கட்டுரையை எழுதி நக்கல் செய்தவர்களுக்கு பதில் அளித்து இருக்கிறார். நாங்க நம்புறோம்!

22 வயதான ஜஸ்டின் பெய்பரின் கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் எண்ணிக்கை, அவரது வயதையே தாண்டிவிடும். தற்போது, 17 வயதான மாடல் சோஃபியா ரிச்சியை டேட்டிக்கொண்டு இருக்கிறாராம். சோஃபியாவுக்கு மிகப்பெரிய பாடகி ஆக வேண்டும் என்பதுதான் ஆசையாம். வாழ்த்துகள் மேடம்!