உலகம் பலவிதம்
கலாய்
சினிமா
Published:Updated:

கதை விடுறாங்க!

கதை விடுறாங்க!
பிரீமியம் ஸ்டோரி
News
கதை விடுறாங்க!

கதை விடுறாங்க!

‘தன் குழந்தை கேட்ட கேள்விக்கு பதில் தெரியாமல் விழித்த ராஜன் உடனே...’

கதை விடுறாங்க!

- இந்த ஒரு வரியை நம் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து சுவாரஸ்யமான கதையாக உருவாக்கச் சொல்லியிருந்தோம். வாசகர்கள் உருவாக்கிய சில ஜாலி கதைகள் இதோ...

முகம்மது சம்சுதீன்: தன் குழந்தை கேட்ட கேள்விக்கு பதில் தெரியாமல் விழித்த ராஜன் உடனே ஜியோ சிம் வாங்கப் புறப்பட்டாராம். ஏன்னா அவர் குழந்தை கேட்ட கேள்வி, ‘உங்க போன்ல 4ஜி இருக்கா?’

சண்முகசுந்தரம்:
உடனே கேபிள் டி.வி ஆபரேட்டருக்கு போனைப் போட்டு ‘சார்... எங்க வீட்டில குழந்தை படிப்பு கெட்டுடும்னு கேபிள் கனெக்‌ஷனை கட் பண்ணச் சொன்னேன். இப்போ என்னடான்னா இவன் ஓவரா சிந்திச்சுக் கேள்வி மேல கேள்வியா கேட்டு என்னைக் கொல்றான். உங்களுக்குப் புண்ணியமாப் போகும். உடனே கனெக்‌ஷனைக் கொடுங்க ப்ளீஸ்’ எனக் கெஞ்சினான் ராஜன்.

லூயிஸ் செல்வராஜ்: தன் குழந்தை கேட்ட கேள்விக்கு பதில் தெரியாமல் விழித்த ராஜன் உடனே  சுதாரித்துக்கொண்டு ‘ஆடியன்ஸ்ல பதில் சொல்றவங்களுக்குப் பரிசு’ என்று கூறி வீட்டிலிருந்த மற்றவர்களிடம் கேள்வியைக் கேட்டு சரியான பதிலைத் தானும் தெரிந்துகொண்டு சமாளித்தான்.

பூபதி குணா: ‘மோடி தாத்தா இப்போ எந்த ஊர்லப்பா இருக்காரு?’ என்ற குழந்தையின் கேள்விக்கு பதில் தெரியாமல் விழித்த ராஜன், உடனே ‘நாயகன்’ பட கமல் போல அழுது, குழந்தையை பயமுறுத்தித் தூங்கவைத்து விட்டு, பின்னங்கால் பிடரியில் அடிக்க டாஸ்மாக் நோக்கி விரைந்தான்.

தியாகராஜன்: ‘கேள்வி கேட்பது 110 விதியின் கீழ் குற்றம்’ எனத் தன் குழந்தையிடம் அறிவுரை கூறினான்.

முத்துராஜ்: 
‘படிக்கிற காலத்துல ஒழுங்காப் படிச்சிருந்தா இந்தச் சின்னப்பயபுள்ள நம்மளைப் பார்த்து இப்படியொரு கேள்வியைக் கேட்டிருக்குமா?’ என நொந்தவாறே தெருமுக்கில் இருக்கும் டீக்கடைக்குச் சென்றான்.