உலகம் பலவிதம்
கலாய்
சினிமா
Published:Updated:

மொபைல் இல்லா உலகு!

மொபைல் இல்லா உலகு!
பிரீமியம் ஸ்டோரி
News
மொபைல் இல்லா உலகு!

மொபைல் இல்லா உலகு!

நம் ஆட்கள் பலருக்கும் ஸ்மார்ட்போனோட பேட்டரி 10 சதவிகிதத்துக்கும் கீழே போனாலே கை நடுங்க ஆரம்பிச்சிடும். அந்த அளவுக்கு மொபைல்ங்கிறது நம்மில் ஓர் அங்கமா சேர்ந்துருச்சு. வெளியே போய்க்கிட்டுருக்கும்போது மொபைல் ஸ்விட்ச் ஆஃப் ஆச்சுனா என்ன விபரீதங்கள் எல்லாம் நடக்கும் தெரியுமா?

மொபைல் இல்லா உலகு!

• ஊரில் இருந்தவரைக்கும் பொடனியில் அடிச்சு எழுப்பிவிடுற தாய்மார்களுக்கு, பையன் வெளியூர் போன உடனே எங்கேர்ந்துதான் பாசம் வருமோ தெரியாது. டெய்லி இரண்டு தடவை கால்பண்ணாதான் மனசே ஆறும். ஒருவழியா சார்ஜ் போட்டு மொபைலை ஆன் பண்ணினதும், அம்மாங்கிற பேர்ல 20 மிஸ்டு கால் அலெர்ட் மெஸேஜ்ல வந்து நிற்கும். அதுக்குள்ள நம்ம ஃப்ரெண்ட்ஸ்க்கு 10 கால் போயிருக்கும்.

• கெட்ட நேரம்ன்னா என்னன்னு தெரியுமா? ஆபீஸ் வேலையா வெளியே போகும்போது மொபைல் ஆஃப் ஆகும். அந்த நேரத்தில் கண்டிப்பா நம்ம பாஸ் நம்ம நம்பருக்கு ட்ரை பண்ணிருப்பார். அப்புறமென்ன... ஆஃப் ஆகிப் போன இந்த அரைமணி நேரத்தில் கம்பெனியில் வேலை பார்த்த அத்தனை வருசத்துக்கும் சேர்த்து நாம மானசீகமா திட்டு வாங்கி இருப்போம்.

• வீட்டுப்பாடம் செய்யாதப்போ டீச்சரைப் பார்த்து பதுங்குற மாதிரி வழியில் வர்றவங்ககிட்ட பம்மிதான் அட்ரஸ் எங்கே இருக்குனு விசாரிக்கணும். ஏன்னா இப்போ நம் ஆள் ஜி.பி.எஸ். ஆன் பண்ணி மேப்ஸ் பார்த்து வழியைக் கண்டுபிடிக்க முடியாதே.

• மேட்ச் இருக்கிற அன்னைக்கு மொபைல் சார்ஜ் இல்லாம காலை வாரிட்டா, 14 மணி நேரம் ட்ராவல்ல பக்கத்து சீட்காரர்கிட்ட ஒரு வார்த்தைகூட பேசாத நாம... வசந்த் பட கதாநாயகன் மாதிரி ரொம்ப நல்லவனாப் பேசி பக்கத்தில் ஸ்கோர் விசாரிப்போம்.

• மொபைல்ல இருக்கிற 300 பாட்டு வரிகளையும் மனப்பாடமா தெரிஞ்சு வெச்சுருக்கிற நமக்கு இரண்டு போன் நம்பருக்கு மேல எதுவும் ஞாபகமிருக்காது. அதுவும் நம்ம நம்பரா இருக்கும். சொன்ன இடத்துக்கு சரியாப் போயிருந்தாலும் பார்க்கப்போனவர் நம்பர் ஞாபகம் இல்லாம, பெட்டிக் கடையில் பத்து ரூபாய் கொடுத்து சார்ஜ் போடுற கையறு நிலைக்குத் தள்ளப்பட்டிருப்போம்.

• லவ் பண்றவங்களுக்கு ‘என் மேல உனக்கு லவ்வே இல்ல. முன்ன மாதிரி என்கிட்ட சரியா பேச மாட்ற’ மாதிரி மெஸேஜ்கள் அடுத்தநாள் வாட்ஸ் அப்ல வந்து நிற்கும். லவ்வர் இல்லைங்கிற கடுப்புல இருக்கிறவங்களுக்கு ‘டேய் எங்கே போய்த் தொலஞ்ச. சரக்கடிக்கப் போலாமா’ அப்படிங்கிற மெஸேஜ் சரக்கு போச்சேனு நம்மை மேலும் கடுப்பேத்தும்.

• சார்ஜ் போட்டுட்டு மொபைலை ஆன் பண்ணா, எப்பேர்பட்ட காஸ்ட்லி மொபைலும் திணறுகிற அளவுக்கு இருக்கிற 27 வாட்ஸ்அப் குரூப்லேயும் உள்ளூர்லேர்ந்து உலக அரசியல் வரை பேசி வெச்சுருப்பாங்க. குத்த வெச்சு உட்கார்ந்து மொத்தத்தையும் படிச்சு முடிக்கிறதுக்குள்ள அரைமணி நேரம் கடந்து போயிருக்கும்.

- கருப்பு